நிறுவு - பாகம் 1



ஒரு தொழிலாளியாக அதுவும் ஓர் ஆளுகைக்கு உட்பட்டு நாம் வேலை பார்ப்பதற்கும் அதே சமயத்தில் நாமே ஒரு மேலதிகாரியாய் உயர்வு பெற்று வேலை வாங்குவதற்கும் வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறீர்களா.....அப்படி உணர்ந்தீர்கள் என்றால் உங்களின் தலைமைப் பண்பு பற்றி நீங்களே ஒரு சுய பரிசோதனை செய்திருக்க வேண்டும்.

" இதனை இவன்முடிப்பான் என ஆய்ந்து அதனை அவன்கண் விடல்" என்று இருப்பது தான் வள்ளுவர் சொல்லும் தலைமைப்பண்பு. டெலிகேஶன் என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதிகாரமிக்க பதவியிலிருப்பவர்கள் கூட இப்பண்பைப் பெறாது தோற்று இருக்கிறார்கள்.

பொதுவாக ஒரு வேலையைச் செய்வதற்கும் அடுத்தவர்களைச் செய்ய வைப்பதற்கும் வித்தியாசம் உண்டு.

கொஞ்சம் கடினம்.

கட்டிடம் கட்டுவதற்கு பக்குவமான செங்கல் கலவை மண் இதையெல்லாம் வைத்துக்கொண்டு ஒரு மேஸ்திரி வேலையை வேகமாக செய்வார். அதே சமயத்தில் ஒரு சித்தாளை அதை செய்ய வைப்பது அதே காலகட்டத்தில் முடிப்பது கடினம். இந்த உணர்வு ஏதோ அலுவலகத்தில் மட்டும்  தான் இல்லை. வீட்டில் கூட. புதியதாய் வீட்டிற்கு வந்த மருமகளின் வீட்டு வேலைகளை மாமியார் வேகக் கணக்கை வைத்துப்பார்ப்பார். அல்லது புதியதாய் வந்த மனைவி சிக்கன நடவடிக்கைக்குக் கணவனை உட்படுத்துவதற்கும் வேகக் கணக்கைப் பார்ப்பார். அங்கு தான் தலைமைப் பண்பு தேவைப்படுகிறது.

நமக்குத் தேவையான வேகத்தில் நமக்குத் தேவையான தரத்தில் ஒரு வேலையை அடுத்தவர் மூலம் நாம் பெறுவது ஒரு கலை. அப்பண்பைப் பெறாத மேலதிகாரிகள் தோல்வியைச் சந்திக்கிறார்கள். மாமியார் - மருமகள்கள் அடுப்பறையை போர்க்களமாக்குகிறார்கள். மேஸ்திரியின் கட்டுமானத்தில் விரிசல் ஏற்படுகிறது.

அப்படிப்பட்ட தலைமைப் பண்பிற்கான தேவைகள் என்ன......

இனி நிறுவுவோம்.........

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8