ஜி.எஸ்.டி

ஜி.எஸ்.டி க்கு ஏன் இவ்வளவு குழப்பம் குழப்புறானுக..என்னதான் அப்படி நடக்கும்னு சாமான்யன், அரசு அலுவலர்கள் இவங்களாம் பாக்குறாங்க.

சுருக்கமாகப் பேசலாம்.

நீங்க வேலை பாக்குறீங்க. சம்பாதிக்குறீங்க. சரிங்களா.
இப்ப அடுத்த கட்டம். சம்பாதிச்சா வரி கட்டுறீங்களா.. அரசு கேட்கும்.
நீங்க இப்ப என்ன பண்ணனும்.
கொடுக்கப்பட்ட வருமான வரி வரம்பை மீறுற அளவு சம்பாதிச்சா வரி கட்டுவீங்க.
இதான் இன் காம் டாக்ஸ். பேன் நம்பர் வச்சு பண்றது.
வரி கட்டுற அளவு இல்லங்க..னு சொல்லனும்னா கூட பேன் நம்பர் வச்சு ரிட்டர்ன் தாக்கல் பண்றீங்க. அதான் நடைமுறை.

இதே தான். ஜி.எஸ்.டி.
நீ இட்லி கடை போடுறியா போடு.
பில் போடு. நடக்குற சேல்ஸ்க்கு வரிய கட்டு. எல்லாப் பணத்தையும் நீயே வச்சுக்கக்கூடாது. அரசுக்கு வரிய கட்டு.  இதான் ஜி.எஸ்.டி.
சார் நான் இருபது லட்சத்துக்கு கம்மியா தான் வியாபாரம் வருஷத்துக்கு பண்றேன். நான் எதுக்கு ஜி.எஸ்.டி கட்டனும்னு கேக்காதீங்க.
நீ இருபது லட்சத்துக்கு க் கம்மியா வியாபாரம் பண்றனு நிரூபிக்கனும்.

நீ மருந்து வாங்கப் போறியா போ.
மருந்தோட விலை 100. அதாவது mrp.
அந்த 100 ஓவா மருந்துக்கு நீ 100 கொடுக்குற. அதுலயே வரியும் அடங்கும். அதாவது வரி உள்பட் 100 ரூபாய். இன்னும் சுருக்கமாக 95 ரூபாய் மருந்தோட விலை. 5 சதவீத வாட் வரி  5 ரூபாய்.
இப்படி நீ மருந்துக்கடைல 95+5 கொடுத்து மருந்து வாங்கிட்டு வர. அந்த 5 ரூபாய நீ நாட்டுக்கு வரியா கட்டிட்ட. அந்த 5 ஓவாய உனக்கு வித்த மருந்துக் கடைக்காரர் நாட்டுக்கு வரியா கட்டுனாரா....
யோசிங்க மக்களே,.. நிறைய கடைக்காரர்கள் அதைக் கட்டுவதில்லை. அவர்கள் tin number எடுக்காமல் வியாபாரம் செய்து இருபது லட்சத்துக்கு குறைவாக இருந்தால் விலக்கு பெறலாம். அதற்கு அதிகமாக ட்ர்னோவர் இருந்தால் அதைக் கட்டியே ஆக வேண்டும்.

உங்கள் ஊரில் வருடத்துக்கு 20 லட்சத்துக்கு மேல் வியாபாரம் நடக்கும் கடையைக் கண்காணியுங்கள். அது துணிக்கடை. டீ க்கடை. ஹோட்டல், பலசரக்குக் கடை எதுவாக இருந்தாலும். அவன் டின் நம்பர் வைத்திருக்கிறானா எனப் பாருங்கள். இல்லை என்றால் அவன் நாட்டுக்கு வரி கட்டுவது இல்லை.ஜி.எஸ்.டி வந்தால் இவன் வியாபாரம் பண்ணுவது கஸ்டம்னு சொல்லியிருக்கானுக. பாக்கலாம். இவைங்க வரி கட்ட ஆரம்பிப்பானுக. நாட்டுக்கு வருமானம் வரும். ஆனால் அதை மக்களுக்குப் பயன்படுத்தனும்.

ஜி.எஸ்.டி  ....தொடரும்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....