அகநானூறு 10

அவளே அறியாது
அன்றைய அழகிற்குக்
காரணம்
நானென நினைக்கும்
என்னவளின்
நிலை அது...

வாசல் பார்க்கச்
சாய்ந்து
நிற்குந்தோது
அவளது
வாசல் நிலை...

நீராய் உடையக்
காத்திருக்கும்
கருமேக
வளைவெல்லை
கண்ணெதிரே
விரைய விரையக்
கூடும்
அவளைத் தீண்டும்
தூரமாய்...

முன் தின இரவில்
வெளிறிய
வார்த்தையாய்
 மிஸ் யூ க்களை
அனுப்பியவள்
அடர் ப்ரியத்தின்
மெல்லினக்காரி...

நதி கிழித்து
படகு நகர்த்தும்
துடுப்பொன்று
அப்போதையத் தேவை
இரவைக் கிழித்து
இப்பகல் சேர...

பின் வெயிலின்
என் நிழல்
முன்னதாய் விழ
அதையும் தாண்டிக்
கிடக்கும்
ஒரு ப்ரியத்தின்
தீ நிழல்...

இல்லாமையிலிருந்து
வெளிப்புகும்
இருப்பு
அண்டத்தின்
நிஜப்புள்ளியாய்
சங்கமிக்கும்
தருணத்தில்
மனமணைந்து கிடக்கும்
எனக்கு முன்பாக

அவளின் நிலையோடு....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....