சைரன் 5

கடைசியாகக் கேட்கப்பட்டக் கேள்வியின் அர்த்தம் நீங்கள் சிறுநீர் போகும்போது பார்த்தீர்களா என்று மட்டுமல்ல.. உங்கள் உடலை கண்காணிக்கிறீர்களா என்ற அர்த்தத்தில் தான்..

இப்பொழுது மருத்துவமனையில் மாஸ்டர் செக் அப் என்று சொல்கிறார்கள். அதாவது நமது உடலை முழுதுமாய் ஒரு பார்வை பார்ப்பது. அதாவது அக்கு வேறு ஆணி வேறு என்று.

நாற்பது வயதுக்கு மேல் இருப்பவர்கள் அதைப் பார்த்துக்கொள்ளலாம். எல்லா மருத்துவமனைகளிலும் அது செய்கிறார்கள். உங்களுக்கு வசதியான மருத்துவமனை  எது என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

நான் சில ஐடியாக்களைத் தருகிறேன்.

அ) உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் மாஸ்டர் செக் அப் செய்யலாம். ( ஏன் என்றால் வெறும் வயிற்றில் காலையில் வரச்சொல்வானுக. போயிட்டு சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வரச்சொல்வானுக..அதுனால நீங்க பாட்டுக்க பத்து கிமீ தூரம் இருக்கிற மருத்துவமனைக்கோ இல்லாட்டி உங்க அப்பா அம்மா தாத்தா பாட்டினு வயசான்வங்களோட போயிட்டு மறுபடியும் அலையக் கூடாதுல..அதான்)

ஆ) உங்கள் குடும்ப மருத்துவர் எந்த மருத்துவமனையைப் பரிந்துரைக்கிறாரோ அங்கு போய் செய்யலாம்.( ஏன்னா, மறுபடியும் அந்தாளைத்தான் நாம் பார்க்கப்போறோம்னா அவர் சொல்றத கேட்டுக்கலாமே..நல்லதுக்குத்தான சொல்வானுக...அதான்.)

இ) எந்த மருத்துவமனையில் மாஸ்டர் செக் அப் குறைவானக் கட்டணத்தில் வசூலிக்கிறார்களோ அங்கு செய்யலாம். சில சமயம் சலுகைனு போடுவானுக அங்க போலாம்.

ஈ) கார்ப்பரேட் மருத்துவமனைகளைக் காட்டிலும் ஒரு மருத்துவர் அதாவது உங்கள் ஊரில் ஒரு துறையில் எடுத்துக்காட்டாக உங்கள் ஊரில் ஒரு இருதய சிறப்பு மருத்துவர் தனியாக அவருக்கென ஒரு பெரிய மருத்துவமனை கட்டியிருப்பார். அங்கு அவரும் கூடுதலாக இன்னொரு  மருத்துவரோ (அவர்து மனைவியாகக் கூட இருக்கலாம்.) இருப்பார். அவர் அங்கு இந்த மாதிரி சோதனைகளைச் செய்வார். அங்கு எடுக்கலாம். கூட்டம் குறைவாக இருக்கும். மாணவர்கள் குறைவாக இருந்தால் ஆசிரியரின் நேரடி கவனம் படும் என்பார்களே அப்படி. அதைத் தேர்வு செய்யலாம்.

உ) எதுவுமே இல்லாட்டி கார்ப்பரேட் மருத்துவமனை தான்.

இதைக் கண்டிப்பாகச் செய்யனுமா...செய்யாமல் இருப்பதால் தவறில்லை. உங்கள் உடம்பில் ஏதோ குறை இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அதைச் செய்யலாம்.

சிலர் இருக்கிறார்கள்.

எப்பப் பார்த்தாலும் கை வலி. கால் வலி. நடு ராத்திரில கால் வலி வின்னு வின்னுனு தெரிக்குது.
பசிக்கவே மாட்டிங்குது.
பசிச்சு சாப்பிட்டப்பின்னாடி வயிறு ஊத்தமா இருக்கு. சோம்பேறித்தனமா இருக்கு.
நைட்டு தூக்கமே வரமாட்டிங்குது..
ஏப்பமா வருது..
வேகமா நடந்தா மூச்சு வாங்குது..இப்படி ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க.

தாராளமா மாஸ்டர் செக் அப் செய்யலாம். இல்ல நான் ஆரோக்கியமாத்தான் இருக்கேன் னு சொன்னா தேவை இல்லை.

மாஸ்டர் செக் அப் செய்ற கார்ப்பரேட் மருத்துவமனைகள் சும்மா இருக்காது. நமக்கு சுகர் இருக்கும். எதுக்கும் மாஸ்டர் செக் அப் செய்யலாம் னு போவோம். அங்க என்ன பண்ணுவானுக. எடுத்த எல்லா டெஸ்ட்டுக்கும் அந்தத் துறை மருத்துவரைப் பாருங்கனு சொல்வானுக..
சிறுநீர் சோதனையைப் பற்றி சிறுநீரகத்துறைல டாக்டர்ட்ட கேக்கனும்.
இதயத்தப் பத்தி இதய டாக்டர்ட்ட
சுகர் பத்தி சுகர் டாக்டர்ட்ட..

திடீருனு உங்களுக்கு எலும்புத்தேய்மானம் இருக்கு. உடனே எலும்பு முறிவு மருத்துவரைப் பாக்கனும்னு அங்க போய் உக்கார வச்சுருவானுக.
நம்மள சுத்தி நாலு பேரு ஸ்டெரச்சர்ல கை உடைஞ்சு கால் உடஞ்சு சர்ஜரி முடிஞ்சு இல்லாட்டி சர்ஜரிக்கு போறவங்க இப்படி உட்கார்ந்திருப்பாங்க..

நீங்க சுகர் இருக்கே னு மாஸ்டர் செக் அப் னு உக்காந்திருப்பீங்க. எலும்புத் தேய்மானம் உங்க லிஸ்ட்லயே இருந்திருக்காது. ஆனா அங்க போய் உட்கார வைச்சிருப்பானுக...அவ்ளோதான்...உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாயிரும்.

இதுலாம் நீங்க வண்டிய சர் வீஸ் விடுறதுக்கு போற மாதிரி தான். வண்டி செயின் சத்தம் வருது என்னனு பாருனு மெக்கானிக்ட்ட சொல்வோம். அவன் என்ன பண்ணுவான். சார் பிரேக் ஷீ தேஞ்சிருச்சு. ஆயில் இல்ல. அப்படி இப்படி னு எக்ஸ் ட்ரா சொல்ற மாதிரி தான்.

நாம் என்ன பண்ணலாம். அவனுக சொல்றதலாம் கேட்டுட்டு..எதுக்கும் எங்க குடும்ப மருத்துவரை ஆலோசனை பண்ணிட்டு வர்றேனு சொல்லிட்டு வந்திரலாம். அவங்க பரிந்துரைக்கிற மருந்த வாங்கனும்னு அவசியம் இல்லை. அவர்கள் நமது ரிப்போர்ட்டைப் பார்த்து நம் பார்வைக்கு கொண்டுவருவார்கள்.அது அவர்கள்து வேலை.  அதைத் தொடர்வதும் தொடராமல் இருப்பதும் நம் இஷ்டம்.

பிறகு அந்த ரிப்போர்ட்டை நமது குடும்ப மருத்துவரிடம் காண்பித்து மாத்திரைகளைத் தொடரலாம்.

மாஸ்டர் செக் அப் என்பது மோசடி என்று சிலர் கூறுவார்கள். இருக்கலாம். ஆனால் பயன் பெறுவோரும் உண்டு.

இந்தப் பதிவில் நான் சொல்ல வேண்டிய ஒரு கருத்து இருக்கிறது. நேற்றைய பதிவில் ஒருவர் சண்டைக்கு வந்தார். நான் ஏசி ரூமில் உட்கார்ந்து எழுதுகிறென் என்றும். அனைவரும் யோக்கியர்கள் இல்லை என்றும். எல்லாத் தோழர்களுக்கும் ஒரு பதில்.

நீங்கள் ஒரு கடைக்காரரிடம் செல்கிறீர்கள். வெங்காயம் வாங்க. கிலோ 28 ரூபாய். அதே வெங்காயம் ரிலையன்ஸில் கிலோ 40. அங்கும் வாங்க ஆள் உண்டு. இங்கும் உண்டு. ஒருவன் ஏமாற்றுகிறான் என்றால் நீங்கள் போகாதீர்கள். பஞ்சாப்பில் 10 ரூபாய் தான். இங்கு ஏமாற்றுகிறார்கள் என்பதில் கூச்சலிடத் தேவையில்லை. முடியுமென்றால் பஞ்சாப்பிற்குச் செல்லலாம் தோழர்களே.

ஒரு மருத்துவர் உங்களுக்கு எழுதியிருக்கும் மருந்து அந்த நிறுவனத்துடன் புரிதல் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதாவது டீல் போட்டு எழுதியிருக்கிறார். இது தவறு என்று குதிப்பது வீண். அரசாங்கம் கூடத்தான் அதுவே ரோடு போடாமல் L.T நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு ரோட்டைத் தாரை வார்க்கிறது. அவன் என்ன பண்றான். டோல் போட்டு உங்கட்ட காச புடுங்குறான். அரசு ரோடு போடலாமேனு கேட்டுட்டு வீட்லயே உக்காருறோமா இல்லையே..

நீங்கள் மருத்துவரிடம் சென்றிருப்பது நோய்க்காக. அது குணமடைகிறதா எனப்பார்க்க வேண்டும். குணமடையாவிட்டால் அவரிடமே கேட்கலாம். இல்லாவிட்டால் வேறு ஒரு மருத்துவரிடம் செல்லலாம். அவர் எழுதிய மருந்தில் குணமடைகிறதா எனப் பார்க்க வேண்டும். அவர் எழுதிய மருந்தில் என்ன டீல் என யோசித்தல் வேஸ்ட். ஒரு மருந்து குறைந்த விலையிலும் கிடைக்கும். அதிக விலையிலும் கிடைக்கும். நாம் தான் விசாரிக்க வேண்டும்.
உங்களுக்குக் குறைந்த விலையில் மருந்து வேண்டும் என்றால் விசாரித்து வாங்க வேண்டும். நீயா நானா நிகழ்வில் பேசுவதும் அமீர்கானின் சத்யமேவ் நிகழ்ச்சியிலும் சொல்வது போல ஜெனிரிக் வகைகளை மருத்துவர் எழுதித் தந்தால் குறைந்த விலை என நீங்கள் நம்பியிருந்தால் உங்கள் முகத்தை நீங்களே கண்ணாடியில் பார்த்து சிரித்துக்கொள்ளுங்கள். ஜெனிரிக் மருந்து என்பது கொஞ்சம் தரம் குறைந்த மருந்து. லாபம் அதிகமாயிருக்கும். அது விற்பவருக்கு. அவர் போனா போதுனு உங்களுக்குக் குறைந்த விலையில் தரலாம். தரலாமே தவிர கண்டிப்பாகத் தந்து விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தவறான புரிதலோடு மருத்துவத்தை அணுகாதீர்கள். உங்களுக்கான நோய்க்கான மருந்தைக் காசு கொடுத்து வாங்குங்கள். உரிய விலையா ஏமாற்றப்படுகிறோமா என்பது எல்லாம் மில்லியன் டாலர் சந்தேகம். உங்களுக்குக் கிடைத்திருக்கும் மருந்தின் மொத்த விலையைப் பாருங்கள் MRP .  அதை விட அதிக விலைக்கு வாங்கினால் தான் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள் என அர்த்தம். எம் ஆர் பி விலைக்கு வாங்கிவிட்டீர்கள் என்றால் அது தான் டாக்டர் எழுதிய மருந்தா எனப் பாருங்கள். வேறு சந்தேகம் இல்லாமல் நிம்மதியா சாப்பிடுங்கள். நோய் குணமாகும்.

ஒரு ஹோட்டல் செல்கிறீர்கள். இட்லி ஆர்டர் செய்கிறீர்கள். வருகிறது. தேங்காய் சட்னி மல்லி சட்னி சாம்பார் ஊற்றுகிறார்கள்.  காப்பி ஆர்டர் செய்கிறீர்கள். மொத்த பில் 40 ரூபாய். அதிகம் என்று வாதிடுங்கள். முதலாளி சொல்வார் நாங்கள் இந்த இந்த பிராண்ட் அரிசி வாங்குறோம். காப்பி தூள் வாங்குறோம் என. அதற்கு உங்கள் பதில் என்னவாயிருக்கும் தோழர்களே..உங்கள் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் நாடார் கடையில் மாவு வாங்கினால் குறைந்த விலைக்கு இட்லி விற்கலாம் என்பதா? இல்லை பக்கத்து செட்டியார் கடையில் உள்ள காப்பி பொடி போட்டு காப்பி விற்றால் ஐந்து ரூபாய்க்கு விற்கலாம் என்றா...

கோயில் செல்கிறீர்கள். அர்ச்சனை செய்ய வேண்டும். வெளியில் இருக்கும் அர்ச்சனைத் தட்டு ஐம்பது ரூபாய் சொல்கிறான். என்ன டீல் நண்பர்களே...
உள்ளே பிரசாதம் வாங்க வேண்டும். இருபது ரூபா..முழுக்க எண்ணெய்..என்ன டீல் நண்பர்களே...

பேருந்து நிலையம் செல்கிறீர்கள். வண்டி நிப்பாட்ட வேண்டும். அரசு பார்க்கிங்கில் ஐந்து ரூபாய். பக்கத்து பிரைவேட் பார்க்கிங்கில் பத்து ரூபாய். என்ன டீல் நண்பர்களே...

உங்களுக்கான ஒரு மருந்து விலை அதிகம் என்பதை எதை வைத்து முடிவு பண்ணுகிறீர்கள். மருத்துவருக்கு ஆதாயம் கிடைக்கும் என்ற சந்தேகத்திலா இல்லை உங்கள் பொருளாதாரப் பார்வையிலா. பொருளாதாரப் பார்வை பொங்கல் எல்லாம் இரண்டாம் கட்டம்தான்.

ஏசி போட்ட கடைல காப்பி குடிச்சா இருபது ஓவா. சாதா கடைனா பத்து ஓவா. ஓசியா குடிக்கனும்னா கல்யாண வீட்ல தருவானுக. நம்ம முடிவெடுத்து போயிட்டு பிறகு சந்தேகப்படக்கூடாது. நமது சட்ட திட்டங்கள் அப்படி.
நம்பிக்கையோடு மருந்தையும் மருத்துவரையும் அணுகினால் தான் நோய் குணமாகும்.

ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், இந்த உலகம் எப்பொழுதும் நேர் எதிர் துருவங்களைக் கொண்டதே. நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு. அதற்காக நல்லவர்கள் மத்தியில் நின்றுகொண்டு கெட்டவனென பழித்தல் கூடாது.



நான் பதிவது நேர்மறை எண்ணங்களைக் கொண்டே...எல்லாமே நல்லதுக்குத்த்தான். எல்லாருமே நல்லவர்கள் என எண்ணித்தான். சில சமூகப் பிறழ்வு இருக்கும். அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது நண்பர்களே....

சைரன் ஐந்தாம் பதிவை ஏதோ சுப மங்களமாய் முடிக்கிறேனு நினைக்காதீங்க மக்களே..ஒரு கேள்வி கேட்கிறேன்...


உங்களது மூன்று மாதக் குழந்தை வாந்தி எடுக்காமல் இருப்பதற்கும் செரிமானத்திற்கும்  கையில் வசம்பைக் கட்டியிருக்கிறீர்களா...
அது நல்லது என்றுதானே நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்...

ஹா ஹா..ஹா.ஹா....

சைரன் 6 க்குக் காத்திருங்க அப்பாவி மக்கா.....



கருத்துகள்

  1. ஓசியா குடிக்கனும்னா கல்யாண வீட்ல தருவானுக// காஃபிங்கிற பெயரில் தரப்படும் சூடான கலர் தண்ணீ

    பதிலளிநீக்கு
  2. அழகான, அழுத்தமான, அட்டகாசமான உவமைகள். சைரன் பாயந்து வருகிறது. மிகவும் பயனுள்ள கட்டுரை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....