சைரன் ..மெலிதல் ..அறிமுகம்
போன வருடம் எனக்குத் தெரிந்ததை உபயோகப்படுறமாதிரி எழுத நினைத்து அதை ஒரே பதிவாக எழுத முடியாமல் போனது. பிறகு தொடர்ந்து எழுத நினைத்தேன். அது ஒரு சீரிஸ் ஆக வந்ததை உணர்ந்து அதற்கு சைரன் எனப் பெயரிட்டு எழுதி வந்தேன். என் நண்பர்கள் அதைத் தானாக வந்து பாராட்டினார்கள். சிலர் அது பயனுள்ளதாக இருந்தது எனக் கூடச் சொன்னார்கள். எப்பொழுதும் லைக் போடும் பிரபலங்கள் பிரயோஜனமான ஒரு பதிவிற்கு வேண்டுமென்றே லைக் போடாமல் கடந்தார்கள். சிலர் நானென்ன மருத்துவனா எனக் கூடக் கல்லெறிந்தார்கள். ஆனாலும் தொடர்ந்து எனக்குத்தெரிந்ததை பொழுதுபோக்காக எழுதிப் பார்த்தேன் அவ்வளவே. இப்பொழுது வேறொரு கருத்தை எழுத நினைத்தால் இரண்டு பதிவுகளுக்குப் போகும்படியாகத் தெரிகிறது. ஆதலால் புதிய தலைப்பை வைத்துக்கொள்ள கொஞ்சம் கர்வம் துடிக்கிறது. பழக்கப்பட்ட சைரன் ஐயே எடுத்து அப்டேட்டட் வெர்ஷனாய் தொடர இன்னும் ஆசையாக இருக்கிறது.
ஆதலால் ஒரு மூன்று பதிவுகளுக்கு இப்பொழுது பேச இருப்பதால் சைரன்..மெலிதல் என நானே பெயர் வைத்துக்கொள்கிறேன்.
தலைப்பிற்கேற்றவாறு மெலிதல் தான் தீம். உடல் மெலிதல்க்கானக் காரண காரியங்கள் துணுக்குகள் டயட் முறைகள் பயிற்சிகள் என உங்களுக்குத் தெரியாததை நான் சொல்லப்போகிறேன் என எதுவும் நினைக்க வேண்டாம். உங்களுக்கும் எனக்கும் தெரிந்த விசயங்கள் தான்.
ஏதாவது ஒரு டயட் முறையை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகிறேன் எனவும் யாரும் டெரராக வேண்டாம்.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட எந்த மண்ணாங்கட்டி டயட் முறைகளைப் பற்றியும் இல்லை.
இது என்னுடைய என் அனுபவத்திற்கானப்
பதிவு.
சுயப் புராணமா எனக் கேட்டால் அப்படித்தான்.
செப்டம்பர் 17 ல் இருந்து நேற்று வரை (02/02/18) எனக்குக் குறைந்த உடல் எடை 12 கிலோ.
சுகரா என்றார்கள்.
எயிட்ஸா என்று கூட இருவர் கேட்டார்கள்.
எனக்குச் சுகர் தான் அதான் குறைந்துவிட்டான் எனக் கூட முதுகுப் புறத்தில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
உடல் எடையைக் குறைக்க ஒரு கம்பெனிக்காரன் ஜீஸ் கொடுக்குறான். அதைக் குடிக்கிறீங்களா எனக் கூடக் கேட்டார்கள்.
கஞ்சிக்கு கஷ்டப்படுறீயா எனக் கூடக் கேட்டார்கள்.
ஆக, சைரன் மெலிதல் என்பது உடலும் உடல் சார் எடை சார்ந்த என் கருத்துகள் தான்.
என்ன மிஞ்சி மிஞ்சிப்போனா வாக்கிங்க் போ னு சொல்வ..அப்படித்தான என்பீர்கள் தானே...
வாக்கிங்க் போனால் எடை குறையும் என்றுதானே நினைக்கிறீர்கள்..
ஹாஹா.....
சைரன்..மெலிதல் பாகம் ஒன்று விரைவில்
கருத்துகள்
கருத்துரையிடுக