சைரன் மெலிதல்..பாகம் 3

முதலில் ஒரு டிஸ்க்ளைமர் போர்ட் வைத்துவிடுவோம்.

நான் எந்த டயட் முறைகளுக்கும் எதிரானவன் அல்ல.
இந்தப் பதிவில் எந்த டயட் முறைகளிலும் டயட்டை ஃபாலோ செய்பவர்கள் தான் ஒரு டயட்டிஷியனாகவே நினைத்துக்கொள்கிறார்கள் என்ற பகடி முழுக்கக் கற்பனையானதே.

நீங்க எந்த டயட்டிலும் இருங்க. சைவமா இருங்க. வெறும் கீரை ஸ்மூதிய குடிச்சு இலை தழைகள திண்ணு தலைல கொம்பு வளருற வரை திங்குற க்ரூப்ல கூட இருங்க...
பறக்குறதுல ஆகாயவிமானத்தையும், ஊர்றதுல புகைவண்டியையும் தவிர மற்ற எல்லாத்தையும் வயித்துக்குள்ள போடுற பரிசுத்த அசைவமாக் கூட இருந்துக்கோங்க,
நான் கறிக்கொழம்பு ஊத்திக்குவேன். ஆனா கறி தொடமாட்டேன்ற தெய்வப்பிறவி டயட்டாக் கூட இருந்துக்கோங்க.
எந்த டயட்டையும் ஃபாலோ பண்ணுங்க. நான் உங்க எந்த க்ரூப்புக்கும் எதிரானவன் இல்ல.

இந்தப் பதிவு எழுதக் காரணம், நான் மெலிவதைப் பார்த்தவர்கள் அல்லது மெலிந்ததைப் பார்த்த சில ட்ரெண்டிங்கா இருப்பவர்கள் கேட்ட முதல் கேள்வி , ' பாஸ் , நீங்க பேலியோ வா".
எரிச்சல் தரக்கூடிய இந்தக் கேள்விக்காகத்தான் நான் எழுதவே யோசித்தது.

ஏனெனில் பேலியோ டயட் என்பது இப்பொழுது ட்ரெண்டிங்க், அது ஒரு ஃபேஷன் . ஒரு ஃபேண்டஸி. ஒருத்தன் மெலிஞ்சா அவனுக்கு நோய் இருக்கனும் இல்லாட்டி அவன் பேலியோ வா இருக்கனும்னு மூளை கெட்டு திரியுறானுக இங்க சில பேர். அதை மீறி ஒருத்தன் மெலிஞ்சா அதெப்படி மெலிய முடியும்னு முட்டுச்சந்து மூளைய வச்சுக்கிட்டு திரியுறானுக.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருத்தர் ஒரு டயட் முறையை ஃபாலோ செய்வதாகவும், ஒரு நிபுணர் குழு அவருக்கு வழிகாட்டுவதாகவும் சொன்னார். சில மாத்திரைகளை அவருக்குப் பரிந்துரைத்து இதை நீங்கள் வாங்கி சாப்பிட்டுக்கொள்ளவும் எனச் சொல்லியிருக்கிறார்கள். ஒன்று விட்டமின் டி 3 வகையறா, இன்னொன்று மெக்னீசியம் கால்சியம்  சத்தைத் தரும் மருந்து.

நீங்க ஒரு ட்ரிப் போறீங்க. ஒரு ட்ராவல்ஸ்ல வண்டிய புக் பண்றீங்க. மூணு டிரைவர் வராங்க. எதுக்குப்பா மூணு டிரைவர்னு கேக்குறீங்க . ஒருத்தர் ட்ராஃபிக் ல நல்லா ஓட்டுவார். அப்ப அவரை பயன்படுத்திக்கோங்க. ஆனா நாலுவழிச்சாலைல போகுறப்ப தூங்கிருவாரு. அதுனால இவருக்குப் பதிலா அவரை பயன்படுத்திக்கோங்க. அப்ப மூணாவது ஆளா எதுக்குய்யானு கேட்டா, இந்த இரண்டு பேருக்கும் கண் கொஞ்சம் மங்கல். அதுனால தூரத்துல வண்டி வந்தா அந்த மூணாவது ஆள் பார்த்துச் சொல்வார்ன்ற கதையா இருக்கு. நம்ம டயட்டுலயும் இருக்கனும். ஊட்டச்சத்துக்கு மருந்தையும் சாப்பிடனும். அப்புறம் எந்த கருமத்துக்கு அதைக் கடினப்பட்டு ஃபாலோ செய்யனும். டயட் என்பது சமச்சீராய் இருக்கனும்.

திடீரென இருப்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனுஷன் பாம்ப பச்சையா சாப்பிட்டான். அதுக்கான் ஜீன் உன்ட இருக்குனு சொல்லி சாப்பிடுனா என்ன செய்வது. போதி தர்மர் ஜீன் மாதிரி நம் உடம்பில் இருப்பதைக் கண்டுபிடிக்கும் ஸ்ருதிகள் இப்பொழுது அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

நாம் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் போகவேண்டாம். அவரவர் தாத்தா அவர்களது தாத்தா மட்டும் பாருங்கள். உழைத்தார்கள். சாப்பிட்டார்கள், உழைத்தார்கள் அவ்வளவுதான்.

அந்த கலாச்சாரத்தில் வந்த நாம் சாப்பிடுகிறோம்....சாப்பிடுகிறோம் அவ்வளவுதான்.
நாகரிகம் மாற மாற உணவு நச்சாக ஆரம்பித்தது. அவ்வளவுதான்.

ஏர்டெல் டி டி ஹெச் செட் ஆஃப் டிவிய ஆன் பண்ணதும் இல்லாட்டி சன் டிடிஹெச்  செட் ஆஃப் பாக்ஸ ஆன் பண்ணதும் இந்த நாப்டால் விளம்பரம் தான் வரும். லொட லொட னு பேசுவானுக. அப்படித்தான் இந்த டயட் ல இருக்குறவைங்க பேசுறானுக. ஏதோ நம்மள மதமாற்றம் செய்யுறதுக்கு முயற்சி பண்ற மாதிரி பண்ணுறானுக.
ஒண்ணு வேணாம் என் அப்பனுக்கு அப்பன், தாத்தன் களுக்கு எல்லாம் சுகர் இல்ல. அவைங்க என்னத்த திண்ணானுக. இதே சாப்பாடு தான. என்ன..அப்ப ஜங்க் ஃபுட் இல்ல. இப்ப இருக்கு. அவைங்க திண்ணானுக நல்லா மாடா உழைச்சானுக. நம்ம திண்ண மட்டும் தான் செய்யுறோம். உழைக்கல.

இந்த உழைக்கலனு சொன்னதும் , பாஸ் நான் என்னென்ன வேலை செய்யுறேன் தெரியுமானு சிலர் கேக்கலாம். உதாரணத்துக்கு ஓர் ஆண், காலைல எந்திரிக்கிறேன். மார்க்கெட் போறேன். காய்கறி வாங்குறேன். குழந்தைகளை எழுப்பி ஸ்கூலுக்கு கிளப்பி அப்புறமா ஆபிஸ் போறேனு சொல்வாங்க. எக்ஸ் க்யூஸ்மீ பாஸ் இதுலாம் வேலை இல்ல. உழைப்பு இல்ல. இதுலாம் கடமை..
அதே தான் பெண்களுக்கு. காலைல எந்திரிச்சு கோலம்போடுறது (கோலம் போடுறதா இருந்தா) துவைத்தல் சமைத்தல் குழந்தைகளைப் பேணுதல் இதுலாம் கடமை. வேலை இல்லை.

நம்ம சொல்றதுலாம் பார்த்தா நம்ம முன்னோர்கள்லாம் நம்மள பெத்து தெருவிலா விட்டானுக . அப்படி இல்ல.
அப்படி அல்ல. நல்லா திண்ணு. எதைத் திண்ணனுமோ அதை திண்ணு. திண்றதுக்கு வேலை பாரு.

ஒரு டயட் என்பது இது அது என்பது அல்ல. எனக்கு எது உகந்ததோ, எதில் என் எடை குறைகிறது என்று நினைக்கிறேனோ எது எனக்குத் தேவை என் கிறேனோ அதை எவ்வளவு தேவை என்பதை அறிந்து எடுப்பது. அது தான் டயட்.
நம் உடலுக்கு உகந்ததைக் கொடுக்க வேண்டும். இதுவரை இல்லாதப் பழக்கத்திற்கு நாம் உடன்படும்பொழுது நுகர்தலும் பயன்படுத்தலும் குறைவு தான் . இந்தச் சூத்திரம் தான் எல்லா டயட்டுகளிலும் பயன்படுகின்றன.

உங்களுக்கு எது எளிதாகக் கிடைக்கிறதோ அதிலிருந்து டயட்டை ஆரம்பியுங்கள். இன்றைய சாப்பாட்டை நினைத்து நீங்கள் ஸ்ட் ரெஸ் ஆக விரும்பினால ஹார்மோன் கள் தான் உங்களை ஆளும்.

வெரி சிம்பிள்.

நீங்கள் எடை குறைக்க விரும்பினால், விருப்பப்பட்டு சிலவற்றைத் தவிர்க்க வேண்டும்.
முதலாவது உங்களுக்குப் பிடித்தது எதுவோ..அது. யாரும் அவரவர் மனைவி கணவனைச் சொன்னால் கம்பெனி பொறுப்பாகாது.
2. காப்பி டீ தவிர்க்க முடியுமா என யோசியுங்கள். முடியாது என்றால் பால் அற்ற டீ காபி . எதுவேணாலும் குடிங்க. வெள்ளை சீனி யை நிறுத்துங்கள்.
3. சாக்லேட், ஐஸ்க்ரீம் பிஸ்கட் வகையறாக்களை நிறுத்துங்கள்.
4. குளிர்பானங்கள் சுத்தமாக நிறுத்துங்கள்.
5. பேக் பண்ணப்பட்ட திண்பண்டங்கள், ஜங்க் ஃபுட்ஸ் நிறுத்துங்கள்.

இது தான் நான் செய்தது. பால் பொருட்களான , பன்னீர், தயிர், ஐஸ்க்ரீம், இவற்றில் ட்ரை க்ளீஸ்ரைட்ஸ் உண்டு என்பதால் ஆபத்தும் கூட.

கார்போஹைட் ரேட்கள் தான் உடல் எடைக்குக் காரணமென பொத்தம்பொதுவாகச் சொல்வதில் கொஞ்சம் ஆராய்ச்சி தேவை.
உங்களுக்குப் பிடித்த என்பதை விட பழக்கப்பட்ட அரிசி முக்கியக் காரணிகளில் ஒன்று. எடை கூட. அரிசியும் கோதுமையும் ஓரளவிற்குக் கலோரி விசயத்தில் ஒரே மாதிரியான தானியங்கள் தான். ஆனால் அரிசியைப் போல கோதுமையை நாம் ஒரு கட்டு கட்டுவது இல்லை. ஆதலால் வாரத்தில் மூன்று நாட்கள் மதியம் சாப்பாட்டிற்குப் பதிலாக மூன்று சப்பாத்திகள் சாப்பிட்டுக்கொள்ளலாம்.
மூணே மூணு சப்பாத்திகளா அல்லது மூணு..சப்பாத்தியா என அதிர்ச்சியும் ஆச்சரியமும் கிடைக்கலாம். நான் வாரத்திற்கு மூன்று மதியங்கள் சப்பாத்தி எடுப்பேன். இதைச் செய்துகொடு அதைச் செய்துகொடு என வற்புறுத்துபவன் இல்லை. வீட்டில் என்ன குழம்பு வைக்கிறார்களோ அதைச் சப்பாத்தியுடன் ஊற்றிக்கொள்வேன். ஒரு காய் இருக்கும். பெரும்பாலும் காலிஃபிளவர் மசாலா, அல்ல பாகற்காய் மசாலா இப்படி. நன்றாகப் பார்த்தால் சப்பாத்தியை விட காய்கள் அதிகமாகச் சாப்பிடுவேன். ஏன் என்பதை பிறகு சொல்கிறேன்.

வாரத்திற்கு மூன்று டின்னர்கள் வெறும் பழம் தான். எங்கள் பகுதி தள்ளுவண்டியில் பப்பாளி விற்பார்கள். ஒரு தட்டு பத்து ரூபாய். அதைச் சாப்பிடுவேன். இல்லாவிட்டால் ஃப்ரூட் சாலட். அதைச் சாப்பிடுவேன்.

இதில் நான் செய்யும் இன்னொரு சூட்சமம் வாரத்தில் இந்த ஷெட்யூல்களோடு இன்னொன்றையும் பார்ப்பேன். அது வாரத்திற்கு இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக நான் அரிசியைத் தொடுவது கிடையாது. அது தான் என் உடல் எடைக் குறைவதற்கானக் காரணமாக நான் நினைக்கிறேன்.

அடுத்தது காலை உணவு. காலை உணவில் இட்லி தோசை பொங்கல் தவிர்த்து என்ன பண்ண முடியும் என்பீர்கள் தானே. கம்பங் கூழ் குடிக்கலாம் தானே.
எங்க இருந்தோ வந்த ஓட்ஸ் சாப்பிட முடியும் . கம்பு குடிக்க முடியாதா. உண்மையில் ஓட்ஸை விட கம்பு நல்லது. ஓட்ஸ் உங்கள் சர்க்கரை அளவைக் குறைத்து பிறகு மொத்தமாகக் கூட்டும் விளையாட்டு விளையாடும். எதற்காக இது. அதற்கு நம் ஊர் உணவு கம்பு திணை குதிரைவாலி உபயோகப்படுத்துங்கள். எதுவேண்டுமானாலும் சிறிது தான்.

ஒரே சமயத்தில் நீங்கள் அதிகமாகச் சாப்பிடுவதற்கு கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிடலாம் தானே.

சரி இப்படிச்சாப்பிட்டால் எடை குறையுமா. பசிக்குமே. உடம்புக்குத் திராணி வேண்டாமா என்று தானே கேட்கிறீர்கள்.

அப்படி என்றால் டயட்டில் இன்னும் ஏதாவது சேர்க்க் வேண்டுமா எனக் கேட்பீர்கள் தானே.

கண்டிப்பாக...

சைரன் மெலிதல் நான்கில் ....



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....