சைரன் மெலிதல் I I

நடந்தால் எடை குறைவதற்கான வாய்ப்புகள் கம்மினு சொன்னது மாதிரி அப்ப நடக்கத்தேவையில்லையா னு கேக்குறாங்க.
நம்ம ஒரு விளையாட்டு விளையாடுவோமா. உங்க எல்லார்ட்டயுமே ஆண்ட்ராய்டு ஃபோன் இருக்கலாம். சேம்சங்க் இப்ப எல்லா மாடலிலும் s-health னு ஓர் ஆப் வச்சிருக்கான். அது இல்லாதவங்க பெடோமீட்டர் மாதிரியான ஆப் களை டவுன்லோடு பண்ணி அதுல நீங்க நடக்குற ஸ்டெப்ஸ கவுண்ட் பண்ற மாதிரி ஆன் பண்ணிக்கோங்க.
அதாவது நீங்க நடக்குற ஒவ்வொரு ஸ்டெப்பையும் அதன் அதிர்வு வச்சு அது கணக்குப் பண்ணிக்கனும்.
உடனே தம்பி ஃபோன எப்ப பாத்தாலும் நான் கையிலேயே வச்சிருக்கமுடியுமானு கேப்பீங்க. நீங்க ஒரு ரூம்ல இருந்து இன்னொரு ரூம் போறப்ப வேல பாக்குறப்ப உங்க சீட்ல இருந்து உங்க மேலாளர் ரூம் போறப்பனு கையில வச்சு பாருங்க. ஒரு நாள் முழுக்க எவ்வளவு நடக்கமுடியும் னு நினைக்கிறீங்க.
நல்ல ஹெல்தியான நடை என்பது காலை முதல் இரவு வரை 15000 ஸ்டெப்ஸ் வந்திருக்க வேண்டும்.
நான் ஒரு மெடிக்கல் ரெப். உங்கள் சொலவடையில் நாயா அலையும் வேலை என்பார்கள். அதைப் பற்றியக் கவலையில்லை.
நான் அந்த ஆப் டவுன் லோட் செய்த நாளில் வேலை நிமித்தமாக ஏழு வெவ்வேறான இடங்களில் ஏழு மருத்துவர்கள் பார்க்கும் வேலை. அப்படி அலைந்தும் அன்றைக்கு 8000 ஸ்டெப்ஸ் மட்டுமே என்னால் நடக்கமுடிந்திருக்கிறது. நமது உடல் உழைப்பு குறையும்பட்சத்தில் எடை கூடுகிறது.
ட்ரெட் மில் நடக்கும் பணக்கார வர்க்கம் ஒன்று இருக்கிறது.  வேகமாக நடக்கிறேன் என மார்தட்டும் பரிதாபக்காரர்களே மூட்டுவலி வரக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு நிறைய உண்டு. வயதான பிறகு தான். பயப்படத் தேவையில்லை இப்பொழுது.
அடுத்த கட்டமாக நடக்கலாட்டி ஓடலாமா எனக் கேட்கலாம். ஓடும் பயிற்சி அருமையான ஒன்று. நான் உடல் எடை குறைவதற்கு நான் ஓடிய ஒரு மாத காலம் கணிசமாக உதவியது.
ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்திலிருந்தே நாம் அத்லெட் டாக இருந்திருந்தால் நம் மூட்டுகள் பழகியிருக்கும்.
ஏழு கழுதை வயது என்பார்கள். அந்த வாழ்க்கையின் முட்டுச்சந்திற்கு வந்து நுழைந்தப் பிறகு ஓடினால் உடம்பு ஒத்துழைக்க வேண்டாமா.
நீங்கள் ஸ்லோ ஜாக் செய்யலாம். அல்லது வேகமாக ஓடலாம். ஆனால் நீங்கள் ஓடும் ட்ராக் ஓடுதளமாக இருந்தால் மண் அமுங்கிக்கொடுத்து உங்கள் மூட்டு ஷாக்அப்சர்வராக அமுங்கிக் கொடுக்கும். நீங்கள் தார் சிமெண்ட் ஹாலோப்ளாக் பூங்காக்களில் ஓடினால் பாதம் ஊண்டும் தரையின் அழுத்தம் அதிர்வாக மூட்டை இடிக்கும். அப்படி நீங்கள் ஓடித்தான் ஆகவேண்டும் என்றால் வாரத்திற்கு ஒன்றரை மணி நேரம் தான் ஓடவேண்டுமென ஜர்னல்களில் எக்ஸ்பெர்ட்டுகள் தெரிவிக்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் ஓடுவதற்கான ஷூக்கள் மிக முக்கியம். அதற்கான முன் பின் பயிற்சிகள் முக்கியம். நியூட்ரிசியன் முக்கியம்.
முதுகுத்தண்டுவரை அதிர்வு வந்தால் பேக்பெயின் வரும் எனச் சொல்லவில்லை. வருவதற்கானச் சாத்தியம் அதிகம்.
ஆக ஓடுதல் எடை குறைக்கும் ஆனால் ஓட முடியாது.
நல்லாருக்குல.
ஸ்விம்மிங் பண்ணலாமா
ஸ்கிப்பிங் பண்ணலாமா
குதிக்கலாமா
டான்ஸ் க்ளாஸ் போகலாமா
கராத்தே..குங்ஃபூ பரதம்...
எது பண்ணாலும் உடல் எடை மெயிண்டெயின் ஆகும்.
என்னுடைய பழைய சைரன் பதிவுகளில் பேசிய லிபிட் புரோஃபைல் நல்லவிதமாக மாறும்.
அப்ப உடம்ப எடை குறைக்கனும்னா என்னதான் பண்ணனும். ரொம்ப இழுக்காமா சட்டுனு சொல்றேன்
அது டயட் முறையில் மட்டும் தான்.
கடைசில இவ்ளவு பில்டப் கொடுத்து இது தானா என நீங்கள் சொல்லலாம். டயட்டும் அது சார் உடற்பயிற்சியும் தான் என் எடையைக் குறைத்தது.
நான் சாப்பிடுறதே கம்மி..அப்படியும் உடல் குறையலனு சொல்ற சத்தம் கேக்குமே இப்ப. கொஞ்சமானாலும் என்ன சாப்டுறீங்கன்றது தான் விசயம்...
இப்பொழுது நீங்கள் ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். பேலியோ டீ டாக்ஸ் மாதிரியான டயட் முறைகளுக்கு இவனும் விளம்பரம் பண்ணப்போறானு...
ஹாஹாஹா..
இவைங்க தூக்கிப் பிடிக்கிற டயட் முறைகளை நாளைக்கு கழுவி கழுவி காக்காய்க்கு ஊத்தலாமா....
சைரன்..மெலிதல் III தொடரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....