சத்தியசோதனை!
அங்குமிங்கும் செல்வோரில்
அங்கும் செல்வோருண்டு!
அது
பழைய புத்தகக் கடை!
எண்பது ரூபாய்க்கெல்லாம்
கம்பனின்
இராமாயணம் கிடைக்கிறது!
என்ன செய்வது?
அங்கும் சீதை
தீக்குளிக்கத்தான் வேண்டும்!
அதிகாரவரம்பின்றி
எல்லா அதிகாரங்களையும்
முப்பது ரூபாய்க்கெல்லாம்
வழங்குகிறார் வள்ளுவர்!
கம்யூனிசத்தில்
அழுக்குப் படிந்துள்ளது!
மூலதனத்தில்
ஒட்டு போட்டிருக்கிறார்கள்!
வெறுமனே
பார்த்துவிட்டு
நகர்ந்தோரிடத்தில்
கேட்கும் காசிற்கே
"சத்தியசோதனை" தருவதாய்ச்
சொல்கிறார்கள்.....
சத்தியசோதனை!
அங்கும் செல்வோருண்டு!
அது
பழைய புத்தகக் கடை!
எண்பது ரூபாய்க்கெல்லாம்
கம்பனின்
இராமாயணம் கிடைக்கிறது!
என்ன செய்வது?
அங்கும் சீதை
தீக்குளிக்கத்தான் வேண்டும்!
அதிகாரவரம்பின்றி
எல்லா அதிகாரங்களையும்
முப்பது ரூபாய்க்கெல்லாம்
வழங்குகிறார் வள்ளுவர்!
கம்யூனிசத்தில்
அழுக்குப் படிந்துள்ளது!
மூலதனத்தில்
ஒட்டு போட்டிருக்கிறார்கள்!
வெறுமனே
பார்த்துவிட்டு
நகர்ந்தோரிடத்தில்
கேட்கும் காசிற்கே
"சத்தியசோதனை" தருவதாய்ச்
சொல்கிறார்கள்.....
சத்தியசோதனை!
கருத்துகள்
கருத்துரையிடுக