உத்தேசம்

 படித்துக்கொண்டிருக்கும்

புத்தகத்திலிருந்து
ஒரு வரி

பிடித்த பாடலின் நடுவே
சமிக்ஞையுடன்
ஒரு குரல்

யாரென்றே தெரியாத
ஒரு முகத்தில்
நெற்றி வழியும்
ஒரு தாரைக்கூந்தல்.

அடிக்கடி சூடிக்கொள்ளும்
பிடித்தமான பூ
பெயர் சொல்லி
விற்பவரின் குரல்..

கால்களுக்குள்
ஓடியோடி ஒளியும்
எல்லா நாய்க்குட்டிகளும்...

நெடுஞ்சாலையின்
பக்கவாட்டில்
விரையும்
புகைவண்டி...

ஏரியும் நாணலும்

மழையும்
ஒரு குவளை
காப்பியும்...

இவற்றின் முகங்களைத்
தந்துவிட்டு
உன் முகத்தை
மறுபடியும்
பெற்றுக்கொள்ள
எப்பொழுது
உத்தேசம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....