விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8 இன்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது கொரோனா தாக்கத்தால் மருத்துவத்துறையில் முன்னேற்றம் இருக்கிறது என்ற படிக்குப் பேசினார். மருந்துகள் எல்லாம் அதிகளவில் விற்கும் அல்லவா என்றும் கேட்டார். அதற்கான விளக்கத்தையும் என் வேலை எந்த அளவிற்கு ஆகியிருக்கிறது என்பதையும் சொன்னேன். அதன் சாராம்ஸம்... மருத்துவத்துறை சார் நோயும் வைரசும் பரவுவதால் உடனே அதில் மருந்துகளின் விற்பனை கூடுகிறது என்பது மேலோட்டமானக் கருத்து. பெரும் முதலாளிகளின் கம்பெனிகளுக்கு வேண்டுமானால் விற்பனை நடக்கலாம். முறையாய் மருத்துவர்களைப் பார்த்து அதன் மூலம் ஏதாவது ஒரு ஆர்டர் எடுக்கும் நிலையில் இருக்கும் என்னைப் போன்ற குறு கம்பெனிகளின் விற்பனை சரியவில்லை. படுத்தேவிட்டது என்பது தான் உண்மை. உதாரணத்திற்கு, ஒரு மருத்துவரை மாதம் ஒரு முறை பார்த்துக்கொண்டிருப்போம். அவரும், பல நாட்களாக வருகிறான், இவனுக்கு உதவலாம் என்ற மனிதத்துடன் அந்த விற்பனைப்பிரதிநிதியின் மருந்து தரமானத் தயாரிப்பா என்று பரிசோதித்து அவனுக்கு எழுத ஆரம்பிப்பார். இப்படியான விற்பனை நடக்குமளவிற்கு மருத்துவர்களைப் பார்த்து ப
கருத்துகள்
கருத்துரையிடுக