பட்டர்ஃப்ளை மெஷின்

காலையில் நடக்கும் நடையாளர் கழகத்தில் உறுப்பினர்களுக்காக உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்கி போட்டு வைத்திருக்கிறார்கள்.

முதலில் ட்ரெட் மில் போன்று வாங்கி வைத்தார்கள்.

நீங்கள் உடனே ட்ரெட் மில் என்றதும் மோட்டர் லாம் போட்டு ஹார்ட் பீட் பாக்குற பெரிய மிஷின்லாம் நினைக்காதீங்க. அந்த அமைப்பு முழுக்க முழுக்க டொனேஷன் மற்றும் சந்தா மூலமாக இயங்கும் ஒரு அமைப்பு. 100 பேர் நடக்க வந்தா 20 பேர் தான் சந்தா கட்டுவான். அது வெறும் 500 ஓவா வருஷத்துக்கு . பெரிய கோடிஸ்வரனா இருப்பான். பெரிய பேங்க் மேனேஜர் ரிட்டையர்ட்னு பீலா விடுவான். தம்பி வருச சந்தா 500 ஓவா கட்டலயே னு கேட்டா அதுவரை வாக்கிங்க் போயிட்டு இருந்தவன் ஜாக்கிங் போக ஆரம்பிச்சிருவான்.

அதுனால அது ட்ரெட் மில் ல பார்த்து வடிவமைக்கப்பட்ட இரும்பு பார் தான். கைப் பிடி இரண்டு இருக்கும். கால் வைக்க இரண்டு பெடல் இருக்கும். ஏறிக்கிட்டு நடக்குற மாதிரியோ பெடல் மாதிரியோ இயக்கலாம். லெஃப்ட் ரைட்டுக்கு ஏதுவா கைப்பிடி தானா நகரும். அதையும் பிடிச்சிக்கிட்டு கைகளையும் ஆட்டலாம்.

சில பயபுள்ளைக அதுல நிண்ட்டுக்கிட்டு ஊஞ்சல் மாதிரி ஆடும் . அதை டொனேட் பண்ணவன் அதைப் பார்த்து தலைல அடிச்சுட்டு போவாங்க.

அப்புறம் பெரிய வளையம் கொண்டு வந்து மாட்டுனானுக. அதை வலக்கையால வலப்பிடி இடக்க்கையால இடப்பிடி பிடிச்சுக்கிட்டு ஒரு சுத்து அப்புறமா எதிர் திசைல ஒரு சுத்துனு சுத்தனும். வயதானவங்களுக்கான கைகளுக்கானச் சுற்று பயிற்சி அது.

இவனுக என்னானா ஒரு கைல பிடிச்சுக்கிட்டு கபில் தேவ் பவுலிங்க் போடுறதுக்கு கைய சுத்துற மாதிரி சுத்துவானுக. அதுவும் ஒரு ஆண்ட்டி வந்து சுத்தும் பாருங்க...அடேயப்பா ஆஸ்திரேலிய பவுலர் ப்ரட் லீ லாம் என்ன ஃபாஸ்ட்டு...அந்தம்மா கைல பந்த கொடுத்தா போதும். பந்து பேட் ல பட்டு பேட்ஸ்மேனையும் தூக்கிட்டு போய் பின்னாடி கீப்பர் மேல விழ வச்சிரும். அப்புடி வேகமா சுத்துது.

இப்படித்தான் பட்டர்ஃப்ளை மெஷின் மாதிரி ஒண்ணு வந்து வச்சானுக. அதாவது நம்ம தோள்பட்டை மற்றும் மார்பு விரிவுக்கான உபகரணம் அது. நடுல உக்காந்துக்கனும். இரண்டு கைப் பக்கமும் ரெண்டு பார் இருக்கும். அது கிட்டத்தட்ட நம்ம பக்கவாட்டுல இருக்கும். அதை நம்ம பிடிச்சு முன்னாடி கொண்டுவந்து அப்புறம் பின்னாடி விடனும். அந்த உபகரணம் வந்தப்ப நானும் பண்ண உக்காந்தேன். அதுல உக்காந்து இரண்டு பாரையும் இழுத்தா அந்த பார் இரண்டும் என்னைய பின்னாடி இழுக்குது. நைட் பேன்ட் வேற போட்டுஇருந்தேனா வழுக்கிட்டு நானே பின்னாடி போறேன். அவ்வளவு கஷ்டமா இருந்தது. முன்னாடி ஒருமாதிரி கொண்டுவந்துட்டா தேவலை. பின்னாடி அதுவா நம்மள இழுத்து விட்டுரும்.

அடுத்த நாள் ஐந்து முறை பண்ணேன். அதுக்கு அடுத்த நாள் பத்து முறை. இதில் சிக்கல் காலை ஊண்டாம தூக்கிவச்சுக்கிட்டு பண்ணா அள்ளைய பிடிக்குதுனு ஒரு சொல்லாடல் சொல்வானுகள...அதை உணரலாம்.

அந்தா இந்தானு ஒரு இருபது வரை அதுல பண்ண முடிஞ்சது பழைய கதை. ஒரு வாரமா பண்ணாம ரெண்டு நாளைக்கு முன்னாடி நடந்துட்டு இருந்தப்ப அந்த உபகரணங்கள் இருக்குற பகுதில பார்த்தா ஒருத்தர் உக்காந்து அந்த பட்டர்ஃப்ளை மெஷின்ல வேகமா பண்ணிட்டு இருந்தாப்புடி. வயசு நாற்பது ல இருந்து ஐம்பதுக்குள்ள இருக்கும்.

நான் பத்து நிமிஷம் கழிச்சு மறுபடியும் போறேன். அதே ஆள் அந்த உபகரணத்துல உக்காந்து பாரை முன்ன இழுக்க பின்ன இழுக்க அப்புறம் முன்ன இழுக்க பின்ன இழுக்க னு அடி பரத்துறாப்புடி.(பரத்துறாருனுனா அடி தூள் கிளப்புறாருனு அர்த்தம்)

பக்கத்துல இருந்த எனக்குத் தெரிந்த நண்பர்ட்ட...யார் இவர் செமயா பண்ணுறாப்புடினு கேட்டேன். அந்த நண்பர் சொன்னார் அது தான் வேடிக்கை.

பழனி , முதல் விசயம் அந்தாளு ஒரு பாதிரியார்னார்.
அது சரி பாதிரியார்னா உடற்பயிற்சி பண்ணக்கூடாதா என்ன...சரி விடுங்க..னு மனசுல நினைச்சுக்கிட்டு

ஒரு ஊம் போட்டேன்..

பழனி , அடுத்த விசயம் , அந்த உபகரணத்துல பாருக்கான வால்வு போயிருச்சு. இரண்டு நாளா மற கழண்டு அந்த மெஷின் லூஸா கடக்கு னு சொன்னாரே பாக்கனும்...

யோவ்...பூசாரி அது பட்டர்ஃப்ளை மெஷின் இல்லயா இப்ப, வெறும் பட்டர்ஃப்ளை அத போயிட்டு இந்த ஆட்டு ஆட்டுறனு கேக்க தோணுச்சு...

சார், அப்ப போய் சொல்லுங்க சார் னு சொன்னேன்...
எதுக்கு பழனி காலங்காத்தால , சபிச்சுட்டார்னா...னு கேட்டார்.

நம்ம தான் ஜமூகசேவைனா பொங்குவோம்ல.. நேரா பாதிரியார்ட்ட போனேன்...

ஈஸியா இருக்கா சார் னு கேட்டேன்...
இல்ல சார் நான் ஒரு மாசமா பண்ணிட்டு இருக்கேனா, அதான் ஈஸியா பண்ண முடியுதுனார்...

ஏசப்பா..............

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....