கதை விமர்சனம் - ஒரு இரு நாட்டு மன்னர்

1977 கணையாழி இதழில வெளிவந்த ஒரு சிறுகதை ' ஒரு இருநாட்டு மன்னர்' .
நான் ரசித்துப் படித்தக் கதைகளில் இதுவும் ஒன்று.  அந்தக் கதைப் பற்றிய ஒரு மினி திரை விமர்சனம்.

ஒரு ஊர். அங்க ஒரு ஆளு. வைத்தியன் னு எல்லோரும் கூப்பிடுறாங்க. பெயர் என்னனு அந்தாளுக்கே தெரியல. நாடு விட்டுப்போன ஒரு ஆளு பேர்ல அந்த வைத்தியன் ஓட்டுலாம் போடுறான். அது கள்ள ஓட்டுனு எல்லாத்துக்கும் தெரியும். இந்த முறை நடக்குறது அந்த ஊரோட ஊராட்சிமன்ற உள்ளூர் தேர்தல். இரண்டு பேர் போட்டி போடுறாங்க. பூசணிக்கா சின்னத்துல ஒருத்தர். உருளை சின்னத்துல ஒருத்தர். இரண்டு பேருமே மைத்துனர்கள். பொண்ணு எடுத்து பொண்ணு கொடுத்த மாதிரி.
கள்ள ஓட்டு விழுந்திரக்கூடாதுனு இரண்டு பேத்து ஆள்களும் விவரமா வேலை பாக்குறாக.
பூசணிக்காயோட தேர்தல் குழுல ஒருத்தன் அந்த வைத்தியனோட உண்மையான பெயர் என்ன னு வாக்காளர் புத்தகத்துல இருக்கும்னு சந்தேகத்துல பாக்குறான். அப்படி கிடைச்சா பூசணிக்கா சின்னத்துல ஓட்டு போட ஒரு ஆள தயார் செஞ்ச்ரலாம்னு.

ஒவ்வொரு பெயரா பாக்குறப்ப அணஞ்சபெருமாள் னு பெயர் இருக்கு. வயது 82. பெயருக்கும் வயதுக்கும் ஒத்துப்போகுது. விவரம் தெரிஞ்சு அந்தப்பெயரில் யாரும் இல்லன்றனால அவர் தான் வைத்தியருனு....அவர நோக்கி போறாப்ல. கோயில் வாசலில் தூங்கிட்டு இருந்த ஆள்ட்ட அணஞ்சபெருமாள் தான உன்  பேரு.எந்திரிச்சு உட்கார்ந்தவன் எப்படியா கண்டுபிடிச்ச னு கேக்குறாரு. அவனுக்கோ சந்தோசம். தனது தலைவனுக்கு ஒரு ஓட்ட கண்டுபிடிச்சுட்டோம்னு வைத்தியர ரெடி பண்றான். சாப்பாடு உடை அப்புறம் அடுத்த நாள் தேர்தல் பூத் க்கு கார் வசதி ஓட்டு மட்டும் பூசணிக்காய் னு எல்லாத்தையும் சொல்லிட்டு பூசணிக்காய் வீட்டுக்கு வர்றான்.

அடுத்த நாள் தேர்தல் . முதல் நாள் இரவு வேட்பாளர் வீடு எப்படி இருக்கும்னு எழுத்தாளரோட வர்ணனை இருக்கே..செம.
சின்னத்தை பிரபலப்படுத்த எல்லாத்துக்கும் பூசணிக்காய் சாம்பார் வச்சு விருந்தாம்.
எதிர் கட்சில அந்த மாதிரி பண்ண முடியாதாம். ஏன்னா சின்னம் உருளைனா ரோடு உருளை. இருந்தாலும் உருளைனா அதுவும் தான் னு ஒரு புத்திசாலி ஐடியா சொன்னதுனால உருளைக்கிழங்கு சாம்பார் வச்சு விருந்தாம்.

பூசணிக்காய் வீட்டில பூசணிக்காய் மூட்டை மூட்டையா வந்து இறங்குச்சாம்.; ஜெயிச்சுட்டா எல்லா வீட்டுக்கும் பூசணிக்காய் கொடுக்குறதுக்காக.
எதிர் உருளை முகாம் ல்யும் பூசணிக்காய் மூட்டை இறங்குச்சாம். ஏன்னா பூசணிக்காய் தோத்துட்டா தெருக்குத்தெரு பூசணிக்காய போட்டு உடைக்கத் திட்டமாம்.

இத பாத்து ஒரு பண்ணையார் அடுத்த ஐந்து ஆண்டு கழித்து அடுத்தத் தேர்தலுக்கு தன்னோட நிலத்துல பூசணிக்காய் போடனும் பயங்கர டிமேண்ட் னு முடிவு எடுத்ததா செய்தியாம்.
அடுத்த நாள் தேர்தல்.
இரண்டு பக்கமும் மக்களுக்கு வில்வண்டி கார் வசதிலாம் தூள் பறந்துச்சாம். அந்த ஊரோட வாக்குச்சாவடி அந்த ஊர் பள்ளிக்கூடமாம். அந்த ஊரோட எந்த மூலையிலிருந்தும் அரை பர்லாங்கு தூரம் தானாம். இருந்தாலும் வில்வண்டி கார் வசதியாம்.

ஒவ்வொருத்தரா ஓட்டுப் போட வர்றாங்க. பூசணிக்காயோட வேலையாள் அந்த வைத்தியர ஓட்டுப்போட கூப்பிட்ட்டு வர்றான்.;
பூசணீக்கா பெருமையா பாக்குறாரு.
உருளை அதிர்ச்சியா பாக்குறாராம்.
ஏன்னா அந்த ஊர்ல மொத்தமே 277 ஓட்டு தானாம்.
எவனாவது கள்ள ஓட்டு போட்டு எதிராளி ஜெயிச்சுட்டா என்னானு இருக்குறப்ப அந்த வைத்தியர் என்ட் ரி.

உனக்கு ஓட்டு இருக்கா னு உருளை கேக்குறாரு.
ஏன் எனக்கு இருக்காதா
உன் பேர் என்ன னு கேக்குறாரு
அணஞ்சபெருமாள் னு பெருமையா சொல்றாரு.
உருளை வாக்காளர் புத்தகத்த பாத்துட்டு ஏளனமா சிரிக்கிறாரு.
சிரிச்சுட்டு..இவ்ளோ நாள் நாடு விட்டவன் பேர்ல ஓட்டு போட்ட...இப்ப என்னவா வந்திருக்க...
அணஞ்சபெருமாளோ
எரிஞ்ச பெருமாளோ...
நீ சொல்ற அணஞ்சபெருமாள் ஒரு பொம்பள ஓட்டுயா..னு சொல்றாரு...

இப்படி அந்தக் கதை முடியுது.
முழுதாய் படிக்கையில் அந்தக் கதையின் ஓட்டத்தில் அவ்வளவு சிரிப்பு. சும்மாவா நாஞ்சில் நாடன் எழுத்துனா.....!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....