நனை...

எங்க பார்த்தாலும் மழையாம்.
ஆனால் நியூஸ்ல காமிக்கிறமாதிரி மதுரைக்கு அவ்வளவு பெரிய மழை இல்லைதான்.
இந்தச் சென்னைல மழை பெஞ்சதும் பெஞ்சது எல்லாப் பக்கமும் அதான் செய்தி.
 டிவிலயும் அதைத்தான் காமிக்குறான். 
பேப்பர்லயும் அதைத்தான் போடுறான். 
சரினு ஃபேஸ்புக் வந்தா இங்கேயும் இதான்.
இவைங்க காமிக்கிறத பார்த்தா டிவி பார்த்துட்டு இருக்குற  எனக்கே மழைல நனைஞ்ச மாதிரி இருக்கு..

மழையில் நனைதல்ன்றது ஒரு வரம். 
அது ஒரு ஜென் நிலை.
காலைல ஆபிஸுக்குப் போயிட்டு சாயங்காலம் வீடு திரும்புற நேரம் பார்த்து மழைனு அப்படியே சிலையா நிக்குறத் தொழில் என்னுடையது இல்லை.
மார்க்கெட்டிங்.
முடிஞ்சவரை மட்டுமில்ல...முடியாதவரை கூட ஓடிட்டே இருக்கனும்.
ஆனா மழைல நனையனும்னா எனக்கு அது தொழில் இல்லை. மகிழ்ச்சி.

வேலைக்கு வந்த புதிதில் என்னிடம் பஜாஜ்M80 வண்டி இருந்தது.
நானும் என் நண்பனும் வேலை நிமித்தமாக 25கிமீ தொலைவிலுள்ள திருபுவனம் ஊருக்குப் போயிட்டு வர்ற வழியில் மழை.
கையில் அப்போது அலைபேசி எல்லாம் இல்லை. ஆதலால் சங்கடமில்லாமல் நனையலாம். எல்லாரும் குறிப்பா புல்லட்ல போறவனே மழைக்கு ஒதுங்கி நிற்க நாங்க மட்டும் M80ல விரட்டுறோம்.
ஏன்னா..M80 வச்சிருந்தவங்களுக்குத் தெரியும். அந்த வண்டி மழைல நனைஞ்சா ஸ்டார்ட் ஆகாது....
அதுலயும் நம்ம வண்டி பக்கா மெயிண்டனன்ஸ்...நான் டிவில மழை பாட்டு பார்த்துட்டு வந்து ஸ்டார்ட் பண்ணாக் கூட ஸ்டார்ட் ஆகாது.
அப்ப நிப்பாட்ட முடியுமா...
அது இராமேஸ்வரம் போற ரோடு.
 சீதைய மீட்க ராமர் போன காலத்துல இருந்து அப்பவரை ரோட்ட அகலப்படுத்தவே இல்லை
அதுல போய்க்கிட்டு இருக்கோம்.
மணி இரவு எட்டு இருக்கும்.
மழை வலுத்தது.
நேரா பார்த்து ஓட்டமுடியல.
பின்னாடி உட்கார்ந்திருக்குற நண்பன் சொன்னான் ஒண்ணுமே தெரியலனு..
ஓட்டிட்டு இருந்த நானும் சொன்னேன்
ஆமா ஒண்ணுமே தெரியலனு...
அவன் டெரர் ஆயிட்டான்..(டமிள்ல சொல்வோம் ...அப்பத்தான் நம்புவாஙைக...) பீதியாயிட்டான்.
திடீருனு எதிர்தாப்புல பஸ்ஸும் காரும் வருது....அப்பலாம் எனக்கு மஞசள் மழையாத் தெரியுது....
எதுவுமே வரலைனா இருட்டு மழையாத் தெரியூது...
ஆக மொத்தம் ரோடே தெரியல...
நீங்க சொல்லலாம் ஏம்பா நனையாம நிண்டு போலாமே னு..
கொய்யாலே...என் பழைய லட்சுமியை.(.M80) மிதிச்சு ஸ்டார்ட் பண்ணாத் தெரியும்.
மதுரை 5 கிமீ னு ஒரு போர்ட் தெரிஞ்சது...
அந்த இடத்துல தான் ஒரு வளைவு..அது தெரியல...
ரோடு வளைஞ்சு போகுது
என் வண்டி நேரா போகுது...
நல்ல வேள...
அங்க ஒரு கட்டிடம் கட்ட மணல கொட்டி வச்சிருந்தாஙைக..
சள்ளுனு மணலுக்குள விட்டு...மணல் உச்சிவர லேண்ட் ஆனோம்..நம்ம லட்சுமியோட புல்லிங் பவர் அப்படி.
நண்பன் கேட்டான் பாக்கலையானு
பார்த்தேன் ஆனா தெரியலையேனு  சொன்னா சிரிக்கிறான்...
அடிக்குற மழைலாம் கண்ணுக்குள விழுந்தா எதைப் பார்க்க...

கொஞ்ச நாளில் மழைல நனையாம இருக்கனு ஜெர்கின் வாங்கினேன்.
 மழை மேகமா இருக்கும். எப்படியும் மழை வரும்டா னு  அந்த பழுப்புநிற ஜெர்கின எடுத்து கிளம்புனா மழையே வராது.
 ஒரு தெருல பெய்யும் இன்னொரு தெருல பெய்யாது..
இங்க மழை பெய்யுதுனு ஜெர்கினோடு போனா அங்க மழை பெய்யாது.
 ஜெர்கினோட  நான்  ஊமைவிழிகள் பட விஜயகாந்த் மாதிரி போயி நிப்பேன்....எல்லாப்பயலும் ஆ. னு பார்ப்பான்...என்னடா இவன் மட்டூம் கோட்டிங்கா திரியுறானு...
அதுல இருந்து ஜெர்கின போடுறதுல ..

அப்புறம் சில வருடங்கள் கழித்து...மதுரை  டூ நத்தம். அதே நண்பன் தான் பின்னாடி உட்கார்ந்திருக்கான். வண்டி மட்டும் வேற. டிவிஎஸ் செண்ட்ரா...என் சின்ரெல்லா...

மணி சரியா நாலு.
நத்தம் போற பகுதி செடி கொடி மரம்னு வயல் தோட்டம்னு பசுமையா இருக்கும்.
அந்த ரோட்டுல மழை...
மழைனா மழை...அப்படி மழை...
பாதி வழியில் ஆரம்பிக்குது..
இந்தவாட்டி மழைல நனைய விடாம தடுக்க மொபைல்ஃபோன் கையில இருந்தது. அதை கைக்குட்டைல சுத்தி பையில் போட்டுட்டு தயாராயிட்டோம்.
நாங்க மொபைல பத்திரப்படுத்துறதுக்குள முழுசா நனைஞ்சுட்டோம்.
ஆக்ஷன் படத்துலலாம் ரவுடிக கூட சண்டை போடுறப்ப ஹீரோக்கள்லாம் கண்ணாடி வாட்ச் லாம் கழட்டிட்டு களத்துல இறங்குறமாதிரி...மொபைல நாங்க பத்திரப்படுத்திட்டு வண்டியை விரட்டுறோம். 

அடிச்சு ஊத்துது...
கண்ண திறக்க முடியல...
ங்கொய்யால...சொத் சொத் னு கண்ணுலயே விழுது மழை.
அப்படியே கண்ணைத் திறந்தாலும் வெள்ளையா பனிமூட்டமா மழையா தெரியுது.

நல்லா ஃபோர்ஸா விழுற பாபநாசம் பானத் தீர்த்த அருவில குளிச்சவைங்கள கேட்டாத் தெரியும். அருவில நிண்டுக்கிட்டு கண்ணத் திறந்தா வெள்ளையா தண்ணி விழும்.
அப்படி விழுது மழை..

பின்னாடி இருக்குற நண்பன் கேக்குறான்...
முகத்துலயே விழுது...எப்படி பாக்குற..
யார் பாத்தா...வண்டி குத்து மதிப்பா போகுது...
இந்த தடவை வண்டிய நிப்பாட்டித்தான் ஆகனும்னு மழை...
இரண்டு பக்கமும் வயல்வெளி...தோட்டம். மரத்துக்கடியில் நிப்பாட்டுறதுக்கு போகலாம் னு போயிக்கிட்டே இருந்தோம்.
மாயா கிராமம் னு ஒரு கிராமம்...(மழைக்கு பேரே கிக்கா இருக்கா..)
அந்த கிராமத்து பஸ் ஸ்டாப் நிழற்குடை தெரிஞ்சது.
நிப்பாட்டுனா...ஒரு வயசான பாட்டி 3 மாடுகளோட உள்ள நிக்குது.
3 மாடு னா உழவு மாடு. காளை மாடு.
அந்த ஊர் சேர்மன் கரெக்டா மூணு மாடு நிக்கிறமாதிரி தான் நிழற்குடை கட்டிருக்காரு. இதுல நாங்க ரெண்டுபேர்...எங்க நிக்க....

அதுலயும் அந்த செவளை காளை மாடு நான் வண்டிய நிப்பாட்டுனதுல இருந்தே என்னைய முறைச்சு பாக்குது...
அது பாட்டுக்க அதோட ஓனர் மேல இருக்குற கடுப்ப நம்ம மேல காட்டிட்டா....

என் நண்பன்ட்ட கேட்டேன் என்னடா ரிஸ்க் எடுப்போமா...னு
சரி எடுப்போம்..வண்டிய ஓட்டு னு சொன்னான்.
அந்த பக்கி மழையில நனைஞ்சு போறதையே ரிஸ்க்கு னு சொல்லிருக்கு.

நம்மளா போய் முட்டிக்கிட்டு நிப்போமே தவிர மாட்டுக்கிட்ட முட்டு வாங்கக்கூடாதுனு நனைய ஆரம்பிச்சோம்...

இன்னும் நனையத்தான் செய்றோம்...




கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....