ஒரு ரோஜாப் பூ
போதுமானதாயிருந்தது...
ஜெமினி கணேசன் களுக்கு...
ஒரு வாழ்த்து அட்டை
போதுமானதாயிருந்தது
கமல்ஹாசன் களுக்கு...
ஒரு தாஜ்மகாலும் கவிதையும்
போதுமானதாயிருந்தது
அஜித்களுக்கு..
இப்படித்தானே
ஊடல் தருணங்களின்
தடங்கள்
சமரசமாயின...
சினிமாத்தனமில்லாத
ஓரன்பு
இருக்கிறது..
குறுந்தொகை காலத்துத்
தலைவியின் ஊடல்
பாடும்
பசலையின்
தலைவனாய்....
வானவில் ரசித்ததை
நெடுஞ்சாலை ரயில்
பார்த்ததை
அடிபட்ட கைவிரல்
போலிஸ்காரரின் தடம்
சொன்னதை
பிடித்தப் பாடலை
வக்களித்துச் சிரித்ததை
ஏதேனுமொன்றை
ஞாபகப்படுத்த
ஒரு வடையும் காப்பியும்
பருகலாம் தானே....
கருத்துகள்
கருத்துரையிடுக