செஞ்சுரியன்
அவர் பேரு செஞ்சுரியன்.
நான் நடக்குற ஏரியாலத்தான் நடக்குறாரு.
வயது ஒரு நாற்பத்தைந்துக்கு மேல இருக்கும்.
கொஞ்சம் குட்டை.
கொஞ்சம் பருமன்.
கொஞ்சம் நரை.
நிறைய கஞ்சம்.
ஏதாவது மீட்டிங்க்னா வந்து பேசுறவன் யாருனு பாக்ககூட மாட்டாரு. கிளப்புல ஏதாவது வேலைனா வந்து கலந்துக்கவும் மாட்டாரு. மீட்டிங்க் முடிஞ்சு சாப்பாடுனா வந்து நிப்பாப்புல...
பஃபே சிஸ்டத்துல ஒருத்தன் எத்தனை பந்திக்கு சாப்பாடுறானு கண்டுபிடிக்க முடியாதுன்ற சட்டத்து ஓட்டைய செஞ்சுரியன் நல்லா பயன்படுத்திக்குவாரு.
ஆமா நான் ஏன் செஞ்சுரியனு பேர் வச்சிருக்கேன்னு தெரியுமா. அதை கடைசியா சொல்றேன்.
இப்ப சொல்ற கதைய எடிட்டிங்க் மனசுல பண்ணி வேகம் வேகமா காட்சிகளை நகர்த்திப் பாக்கனும்.
ஃப்ளாஷ்பேக் ஒன்று. (ஆறு மாதத்துக்கு முன்னால்)
நானும் இன்னொரு நண்பரும் நடக்குறோம்.
செஞ்சுரியன் வந்தாப்புடி.
எவ்வளவு நடந்தாலும் பிரச்சினை போகமாட்டிங்குதே...
என்ன சார் உங்க பிரச்சினை. ..இது நாங்க.
மூலம் மலச்சிக்கல், செரிமானப் பிரச்சினை...இப்படி செஞ்சுரியன் அடுக்குனாரு.
நல்லா நடங்க சார் ..இது என் நண்பர்.
மூச்சு வாங்குதே...இது செஞ்சுரியன்..
யோகா பண்ணுங்க...இது நான்
உடம்பு நமக்கு வளையாது சார்..வலிக்கும்..இது செஞ்சுரியன்.
ஹெல்தியா சாப்பிடுங்க...இது என் நண்பர்...
ஹெல்தினா...(யாருனு சொல்லத்தேவையில்ல ..நம்மாளு தான்)
காய்கறி, நீர்ச்சத்து காய்கறி ..இப்படி நான் பன்னிரெண்டாம் வகுப்பு அப்புறம் காலேஜ் படிச்ச சமச்சீர் உணவை என் நண்பர் ஒப்பிக்க ஆரம்பிச்சார்.
இதுல கோழி ஆடுலாம் வரலையே...அப்புறம் என்ன டயட்டுனு ஒரு சிக்ஸர் அடிச்சார் செஞ்சுரியன்.
இப்ப ஃப்ளாஷ்பேக் இரண்டு (ஒரு மாதத்துக்கு முன்)
வாக்கர்ஸ் கிளப் நுழையுறப்ப அறிவிப்புப் பலகைல இப்படி எழுதியிருந்தது.
நமது நடையாளர் கழக வளாகத்தில் சிவானந்தா மிஷன் மூலமாக யோகா விழிப்புணர்வு நடைபெறுகிறது.
யோகா பற்றிய கருத்துரையும் செய்முறை விளக்கமும் கொடுக்க இருக்கிறார்கள்.
இலவசமாக யோகா சொல்லித்தர இருக்கிறார்கள்.
கூட்டத்தின் முடிவில் சிற்றுண்டி வழங்க இருக்கிறார்கள்.
அனைவரும் கலந்து பயன் பெறவும்.
நம்ம செஞ்சுரியன் கடைசில இருந்து படிச்சிருப்பார் போல....கலந்து கொள்ளவும், சிற்றுண்டி அப்புறம் இலவசம்..எல்லா வரிகளும் அன்னாரை இழுத்துட்டு போயி சிவானந்தா கூட்டத்துக்குள்ள உக்கார வச்சிருந்தது.
அவைங்களும் சும்மா சொல்லக்கூடாது. வந்தவனுக்குலாம் வாக் ஃபார் யோகா னு டி ஷர்ட் ஓசியா கொடுத்தானுக. செஞ்சுரியனுக்கு போனஸ் அது.
ஒரு ஐம்பது பேர் உக்காந்திருந்தானுக. குறிப்பு அதுல இருபது பேர் சிவானந்தாகாரைங்களே வண்டிபோட்டு கூப்பிட்டு வந்த கூட்டம். யோகா பத்தி பேசிட்டு சோற போடுவானுகனு உக்காந்திருந்த செஞ்சுரியனுக்கு அதிர்ச்சி.
அவைங்க யோகாவ பண்ணச்சொல்லிட்டானுக.
சும்மா ஒரு தடவை செய்யச் சொல்வானுகனு நம்மாளு நினைச்சுட்டாப்புடி.
அவைங்க சூரிய நமஸ்காரத்தை சொல்லிட்டு அதை 108 தடவை பண்ணுங்கடா கொய்யாக்களானு சொல்லிட்டானுக.
செஞ்சுரியனுக்கு ஏழாவது தடவை பண்ணப்ப கண் கொஞ்சம் விரிஞ்சிருந்தது. கண் முழி பிதுங்கியிருந்ததானு தெரியல.
பத்தாவது ரவுண்டுக்கு அண்ணன் ரிடையர்ட் ஹர்ட். சும்மா கால விரிச்சு கைய பின்னாடி வச்சு பாடிக்கு சைட் ஸ்டான்ட் போட்ட மாதிரி கிடந்தாப்புடி.
இப்ப ஃப்ளாஷ் பேக் முடிஞ்சு கரண்ட் நிகழ்வுக்கு வாங்க....
முந்தா நேத்து பாக்குறேன். எங்க வாக்கர்ஸ் கிளப்புக்கு வெளிய இருக்குற திண்ணைல நம்ம செஞ்சுரியன் ஒரு மூணு பேத்துக்கு யோகா சொல்லித்தராப்புடி.. நான் சூரிய நமஸ்காரம் செய்வேன். ஒவ்வொரு குருவும் ஒவ்வொரு முறைல சொல்லித்தருவாங்க. ஆனா சிவானந்தா க்ரூப் சொல்லிக்கொடுத்த சூரிய நமஸ்காரம் கிட்டத்தட்ட நான் பண்ற வகை மாதிரி தான். அதுனால எனக்கு அந்த ஸ்டெப் தெரியும். எனக்கு அது தெரியும்ன்றது செஞ்சுரியனுக்கும் தெரியும்.
நேத்து நடந்துட்டு யோகா பண்றதுக்கு முன்னாடி அந்த திண்ணைக்கு பக்கத்துல சேர் போட்டு உக்காந்திருக்குற பெரியவங்கட்ட பேசிட்டே நம்மாளு சொல்லித்தர யோகாவ கவனிச்சேன்.
அதுல ஒரு ஸ்டெப் எப்படி இருக்கும்னா, வலது கால ஊண்டி முழங்கால வளச்சு பாதத்த தூக்காம இடது கால விரிச்சு அந்த முழங்கால தரைல படாம விரல்களில் ஊண்டி உக்காரனும்.
நம்ம செஞ்சுரியனுக்கு உடம்பு வளையாதுலயா..அதுனால அந்த ஸ்டெப் எப்படி பண்ணுவாருனு பாக்க நான் ஆசையா உக்காந்தா அவர் யோகாக்கு போறதுக்கு முன்னாடி இருக்குற வார்ம் அப் உடற்பயிற்சிய விட்டு போகல. நான் அங்க இருக்குற ரூம் க்குள போய் யோகா பண்ண போயிட்டேன்.
இன்னைக்கு அங்க பெண்கள் உடற்பயிற்சி பண்ணதுனால நானும் திண்ணைக்கு வந்துட்டேன்.
செஞ்சுரியனுக்கு ஒரே ஒரு ஸ்டூடண்ட் தான் வந்திருந்தார். கிட்டத்தட்ட வார்ம் அப் முடிஞ்சு யோகா பண்ணுற தருணம். அவரோட ஸ்டூடண்ட் பாய் விரிச்சு படுத்திருந்தார். அதற்கடுத்து யோகா மாஸ்டர் செஞ்சுரியன். அடுத்து நான்.
சுருக்க மா அவங்களோட இடது பக்கத்துல நான் இருக்கேன்.
இப்ப அவங்க யோகா செய்ய ஆரம்பிக்கிறாங்க.
மாஸ்டர் செஞ்சுரியன் ஸ்டெப் ஒன் னு சொல்லி ஆரம்பிக்க அவரோட சீடரும் பண்ணூவார். அவருக்கு இவர் கரெக்ஷன் சொல்வார்.
இப்ப நான் எதிர்பார்த்த போஸ். அன்னார் வலது கால ஊண்டி அப்படியே உக்காந்தார். இடதுகால் முழங்கால ஊண்டி யார்டயோ லவ் புரொபஸ் பண்ணப்போற இங்கிலீஸ் படத்து காதலன் மாத்ரி மண்டி போட்டு உக்காந்து அப்புறம் கைய கீழ வச்சு குனிஞ்சார். உடம்பு வளையல. பரவால.
ஆனா அவரோட சீடருக்கு இயற்கையாவே உடல் வளைஞ்சு இடது கால சரியா முழங்கால ஊண்டாம நீட்டி விரிச்சார்.
ஆனா மாஸ்டர் விடலை. என்னங்க ஒரு வாரம் பண்ணுறோம். சரியா பாக்க மாட்டிங்களா னு சீடரோட பின்னங்கால தட்டி ஊண்டுங்கனார்.
அவரும் ஊண்டுனார்.
பாபா படத்துல ரஜினிய கொலை பண்ண மந்திர்வாதி கூட்டம் முத்திரைய தப்பா பண்ணுவானுகள ...அது மாதிரி இது.
நான் அப்ப வார்ம் அப் பண்ணேன்.
இரண்டு யோகா விஞ்ஞானிகளூம் பத்துவாட்டி செஞ்சு முடிச்சு இப்ப மல்லாக்க படுத்துக்கிட்டாங்க.
இப்ப நான் சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பிச்சேன். அதை மாஸ்டரோட சீடர் பார்த்தாப்புடி.
அது மாஸ்டருக்கு திக்குனு இருந்திருக்கும் போல. எங்க இருக்குற ஒரே ஒரு சீடனும் நம்மள பத்தி தெரிஞ்சுக்குவானோனு...
மாஸ்டர் செஞ்சுரியன் சொன்னார். நீங்க உங்க கழுத்த வலது பக்கமா திருப்பி படுத்துக்கிட்டீங்கனா ரிலாக்ஸ்டா இருக்கும்னார்.
அதாவது அவன் இடப் பக்கமா திரும்பி என்னைய பாக்குறானாம்..நான் யோகா பண்ணுறதை..
அந்த லூசு பயலும் தலைய திருப்பி இப்படியா னு கேட்டான்..
ஆமா கண்ணையும் மூடிக்கோங்க னார்.
யோவ் மல்லாக்க படுத்து கழுத்த வலதுபக்கமா திருப்பி சுளுக்கு வரப்போகுதுயா னு நினைச்சுக்கிட்டேன்.
இப்ப நான் முடிச்சு எந்திரிச்சேன். அவங்களும் கிளம்ப ஆரம்பிச்சாங்க.
அப்ப மாஸ்டர் செஞ்சுரியன் கேட்டார் தன்னோட சீடர்ட்ட...
இப்ப உடம்பு குறைஞ்சிருப்பீங்களே.....
அவன் தன்னோட தொப்பைய தடவி..எனக்கென்னமோ அப்படி தெரியல..னான்..
இல்லங்க குறைஞ்சிரிக்கீங்க...பத்து நாளா பண்றீங்கள...உடம்பு குறைஞ்சிருச்சு உங்களுக்கு னார் மாஸ்டர் செஞ்சுரியன்...
அப்படியா.....டவுட்டா கேட்டார் சீடர்..
ஆனா நீங்க ஒரு நூறு தடவை பண்ணீங்கனா....பத்து நாளுல பத்து கிலோ குறைவீங்க..னார் மாஸ்டர்.
நீங்க பண்ணுறீங்களா....கேட்டான் சீடன்..
ஆமா இங்க பத்து பண்றேன்ல...வீட்டுல போயி தொண்ணூறு பண்ணிருவேன்ல.....இது மாஸ்டர்....
கவுண்டமணி ஒரு படத்துல சொல்வாப்புடி....ஐயா சாமிகளா போதும்ம்யா..ரீல் கிழிஞ்சு தொங்குது....
இப்பத் தெரியுதா அந்த கேரக்டருக்கு ஏன் செஞ்சுரியன் னு பேரு வச்சேனு.....

கருத்துகள்
கருத்துரையிடுக