உயர்திணை
அது ஒரு மரத்தடி. ஒரு கடையின் முகப்பு. ஒரு நண்பனின் வருகைக்காகக் காத்திருந்த் நேரம். அவன் இடப்பக்கமாய் வருவானா...வலப்பக்கமாய் வருவானா என விழித்திருந்தத் தருணம். அப்பொழுது என் காலில் ஏதோ ஊர்ந்த உணர்வு. கீழே பார்த்தேன். நகர்ந்து பார்த்தேன். மீண்டும் காலை யாரோ தொட்டதுபோல் உணர்வு. ஓர் ஆடு படுத்திருந்தது நான்கு கால்களையும் நீட்டி...... ஒருவேளை இந்த ஆடாக இருக்குமோ?????? சில நேரங்களில் நாம் அஃறிணைகளை மதிப்பதே இல்லை. மறுபடியும் நண்பனைத் தேட ஆரம்பித்தேன்.ஆனால் மீண்டும் அதே உணர்வு. காலை யாரோ தொட்டுவிட்டு எடுத்து விடுகிறார்கள். இம்முறை முகத்தைத் திருப்பி கண்களைக் காலில் வைத்தேன். அந்த ஆடு தான்..... தன் முன்னங்கால்களை என் கால் விரல்களோடு ஒட்டி வைத்தது. சட்டென்று ஆட்டினைப் பார்த்தேன். நாம் சிறு குழந்தைகளைத் தலையில் தட்டி விளையாடி அவர்கள் பார்க்கும்போது சிரிப்போம் அல்லவா....அவ்வாறு ஆடு என்னைப் பார்த்தது. "என்ன" என்று கேட்பது போல் ஆட்டினைப் பார்த்தேன். அதுவும் பதிலுக்கு "என்ன" என்று கேட்பது போல் என்னைப் பார்த்தது. அது கருப்பு-வெள்ளை உடம்பு. முகம் முழுக்க