பிராட்....பிராராராட்....பேண்ட்
ஓர் உறவுக்காரர் என்னை அழைத்து அவருடைய பிராட்பேண்ட் இண்டர்நெட் கனெக்ஸன் சரியில்லையெனவும் அதை எங்கு புகார் செய்யவேண்டும் எனவும் கேட்டார். நமக்குத் தான் சமூக சேவைனா ஆளா பறப்போமே.....பரவாயில்லை நானே புகார் செய்ஞ்சுறேனு வாக்குக் கொடுத்தேன்.....அங்க ஆரம்பிச்சது என்னோட இந்த வாரம்...... மதுரையில இருக்குறவங்களுக்குத் தெரியும் பி.ஸ்.என்.எல் ஆபிஸ் அமைப்புப் பற்றி. மதுரை தமுக்கம் மைதானத்திற்கெதிராய் பல ஏக்கர் நிலப்பரப்போடு தலைமை போஸ்ட் ஆபிஸ், டெலிபோன் எக்ஸ்சேஞ் என எல்லாம் சேர்ந்து ஒரே இடம்.....ஆனால் பயங்கர இட வசதி....... அந்த ஆபிஸிற்கு இரண்டு நுழைவுவாயில்கள் கிழக்கு பார்த்து ஒன்று......(அது ஒரு மெயின் ரோடு) வடக்கு பார்த்து ஒன்று அது ஒரு மெயின் ரோடு. நான் கிழக்கு பார்த்த ரோட்டில் உள்ள வாசல் வழியே நுழைந்தேன்....வாடிக்கையாளர் சேவை மையம் னு போட்ருந்தானுக.....வண்டிய பார்க் பண்ணிட்டு நானும் என் நண்பனும் வாடிக்கையாளர் சேவை பிளாக்கிற்கு நடந்தோம். நமக்குத்தான் மூளை கண்ணாபிண்ணானு வேலை பார்க்குமே.......அதுவும் ஒரு மணி வெயில்வேற....எப்படியிருக்கும்......கேக்கவா வேண்டும்.....ஒரு மரத்தடியில