பிராட்....பிராராராட்....பேண்ட்

ஓர் உறவுக்காரர் என்னை அழைத்து அவருடைய பிராட்பேண்ட் இண்டர்நெட் கனெக்ஸன் சரியில்லையெனவும் அதை எங்கு புகார் செய்யவேண்டும் எனவும் கேட்டார். நமக்குத் தான் சமூக சேவைனா ஆளா பறப்போமே.....பரவாயில்லை நானே புகார் செய்ஞ்சுறேனு வாக்குக் கொடுத்தேன்.....அங்க ஆரம்பிச்சது என்னோட இந்த வாரம்......
மதுரையில இருக்குறவங்களுக்குத் தெரியும் பி.ஸ்.என்.எல் ஆபிஸ் அமைப்புப் பற்றி.
மதுரை தமுக்கம் மைதானத்திற்கெதிராய் பல ஏக்கர் நிலப்பரப்போடு தலைமை போஸ்ட் ஆபிஸ், டெலிபோன் எக்ஸ்சேஞ் என எல்லாம் சேர்ந்து ஒரே இடம்.....ஆனால் பயங்கர இட வசதி.......
அந்த ஆபிஸிற்கு இரண்டு நுழைவுவாயில்கள் கிழக்கு பார்த்து ஒன்று......(அது ஒரு மெயின் ரோடு) வடக்கு பார்த்து ஒன்று அது ஒரு மெயின் ரோடு.
நான் கிழக்கு பார்த்த ரோட்டில் உள்ள வாசல் வழியே நுழைந்தேன்....வாடிக்கையாளர் சேவை மையம் னு போட்ருந்தானுக.....வண்டிய பார்க் பண்ணிட்டு நானும் என் நண்பனும் வாடிக்கையாளர் சேவை பிளாக்கிற்கு நடந்தோம். நமக்குத்தான் மூளை கண்ணாபிண்ணானு வேலை பார்க்குமே.......அதுவும் ஒரு மணி வெயில்வேற....எப்படியிருக்கும்......கேக்கவா  வேண்டும்.....ஒரு மரத்தடியிலிருந்த செக்யூரிட்ட கேட்டேன்...(நமக்கும் செக்யூரிடிக்கும் எப்படினு தான் ஊருக்கே தெரியுமே)
அண்ணே....இன்டெர்நெட் கனெக்ஸன் பத்தி கம்பிளைன்ட் பண்ணனும்
என்ன கம்பிளைன்ட்
ஸ்லோ வா இருக்குனே.....
அவர் யோசிச்சார்......(அது எப்போதுமே ஸ்லோவாத்தானே இருக்கும்.....)
நீங்க....பின்னாடி திரும்பி போங்க........ஒரு வாட்டர் டவர் வரும்...அங்க வலது பக்கம் திரும்புங்க....மாடியில கட்டடம் கட்டுவாங்க.....கீழ்யே போங்க....இடது பக்கம் போங்க..ஒரு கண்ணாடி கதவு உள்ள ஒரு மேடம் இருப்பாங்க....அவங்கட்ட சொல்லிங்க.....(ஒரு நிமிஶம் மறுபடியும் அவர் சொன்ன வழிய படிங்க......நியாபகம் வச்சுக்கோங்க....நேரா போறோம்....வாட்டர் டவர்...ஒரு ரைட்டு...க்ரவுண்ட் ப்ளோர்...இடது பக்கம்....கண்ணாடி கதவு....ஒரு மேடம்) ஏதோ ஏழு மலைய தாண்டி போனு கத சொல்ற மாதிரி இருந்தது...கடைசியா சொன்ன மேடம் தவிர பாஸிட்டிவான விஸயம் ஒண்ணுமில்ல......
சரி வாங்க.....போலாம்.....கூட வந்த நண்பன் யாருடனோ தொலைபேசியில் மும்மரமாக
பேசிக்கொண்டே வர நான்முன்னே நடக்க ஆரம்பித்தேன்......

அதெனங்கயா....வாட்டர் டவர்..னு பார்த்தா...வாட்டர் டேங்க். அதத்தான் அந்த ஆபிஸர் அப்படிச் சொல்லியிருக்கார்.
அப்புறமென்ன சொன்னாரு அந்த ஆபிஸர்..வலது பக்கம் திரும்பனும்னுதான?....அங்க போனப்பின்னர் தான் தெரிஞ்சது வலது பக்கம் சுவர் தானும், அந்த செக்யூரிக்கு வலது இடது குழப்பம் இருக்கும்னும் ......சுத்தம்....இப்ப இடது சொன்ன இடத்துலலாம் வலது...வலது சொன்ன இடத்துலலாம் இடது......(என்ன குழப்புதா? கொய்யாலே....எனக்கு எப்படி இருந்திருக்கும்?)
மாத்திமாத்தி போனா...அந்த வழி ஒரு ரெஸ்ட் ரூம் ல போய் விட்டது...நாலு லேடிஸ் ஆபிஸர்க சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க....(மணி ஒண்ணே கால் தான்?)
அடுத்த ரூம்ல தான் கண்ணாடிக் கதவு போட்டிருந்தது....திறந்தேன்......நாலு சீட் லயும் ஆளில்லை.....ஆனா மின்விசிறி மட்டும் சுத்திக்கிட்டு இருந்தது.....அப்பத்தான அது கவர்ன்மெண்ட் ஆபிஸ் னு தெரியும்.....
அதுக்கு அடுத்த ரூம் ஒண்ணு இருந்தது.......செயற்பொறியாளர்.....கம்யூனிகேஸன் டிபார்ட்மெண்ட்...கதவ திறந்தேன்....
கதவ திறக்கும்போதே நல்ல புளிக்கொழம்பு வாசம்....
கதவ திறந்தா...ஒரு ஆம்பள ஆபிஸர் டிபன் பாக்ஸ்ல புளிக்கொழம்பு சாதம் அவிச்ச முட்டையும் வச்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தார். (பதில் சொல்வாரா....)
எக்ஸ்கியூஸ் மீ சார்.......(இது நான்)
அங்ங்ங்ங்ங்ங்ங்ங்.....னு வாயாலேயே சத்தம் கொடுத்து பார்த்தார்( வாயில தான் முட்டை இருக்குல)
இன்டர்நெட் கனெக்ஸன் கம்ப்ளைன்ட் பண்ணனும்....
அவர் மறுபடியும் , அங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்.....னு என்னனு மாதிரி மறுபடியும் கேட்டார்.
பிராட் பேண்ட் கம்பிளைண்ட் பண்ணணும் சார் னேன்...
ரிஜிஸ்ட்டர் நோட்டா? வச்சுட்டு போங்க னு சொன்னார்.....
(அடப்பாவி...புளிக்கொழம்பும் முட்டையும் சாப்பிட்டா  காது கேக்காதாய்யா......)
சார்.....பிராட்.....பிராராராராராட்......பேண்ட்ட்ட்.....கம்ப்ளைண்ட் சார் னு கத்துனேன்....
அவருக்கு ஏதோ லைட்டா கேட்ருக்கும்போல....
புளிக்கொழம்பு சாதத்த மென்னுக்கிட்டே...முன்னாடி கேளுங்க னார்....
நான் அங்க இருந்து தான் வர்றேன் னு சொல்லலாம்....அவருக்குக் கேக்கனுமே....காதுல பஞ்சு வேற வச்ச்ருந்தாரு......
அவர் அறைய விட்டு வந்து அவர் பேர பார்த்தேன்.... கேசவன்....(கேக்காதவன் னு வைங்கப்பா...)
கம்யூனிகேசன் டிபார்ட்மெண்ட்டுக்கே கம்யூனிகேஸன் பிரச்சினையா இருக்கே....
நான் வந்த வேலைய மறந்துட்டேன்....கம்பிளைண்ட் பண்ணணும்...
அந்த வராந்தா நேரா போச்சு.......நானும் போனேன்...அந்த கட்டிடத்தின் பின்பக்கத்துல வந்து விட்டது...
இந்த கட்டுரை ஆரம்பிக்குறப்ப நான் இரண்டு வழி சொன்னேன்ல......அதுல வடக்குப் பக்கம் வாசலுக்கு வந்துட்டேன்....அங்க இருக்குற செக்யூரிட்ட கேட்டேன்....உள்ள கூடியே கஸ்டமர் சர்வீஸ் பிளாக்குக்கு போறதுக்கு வேற வழி இருக்கானு கேட்டேன்...
அந்த பிரகஸ்பதி....வெளிய இருக்குற மெயின் ரோடு வழியா போங்க னார்....
அண்ணே....நான் உள்ளக்கூடித் தான் வந்தேன்...
சார் அது ஒன் வே மாதிரினு நினைச்சுக்கோங்க....அந்த வழில வரக்கூடாது னார்...
என்னடா கொடுமைனு வெளியில வந்து மெயின் ரோடு வந்து கிழக்குப் பக்கத்துக்குள்ள நுழைஞ்சு மறுபடியும் கஸ்டமர் பிளாக்குக்கு வந்தேன்..அந்த செக்யுரிடி (அதே செக்யூரிட்டி...) என்ன சார் .....கம்ப்ளைண்ட் பண்ணிட்டீங்களா......(யோவ்...உன்னத்தான் கம்ப்ளைண்ட் பண்ணணும்.......)
அண்ணே! அவங்க இங்கத்தான் கொடுக்கச்சொன்னாங்க.....னேன்.
உடனே அவர் ஆரம்பிச்சாரு......"சார்....ஒண்ணு பண்ணுங்க....இப்படியே...போங்க..."
அண்ணே போதும்.....நானே பாத்துக்கிறேன்.....னு சொல்லிட்டேன்...
கஸ்டமர் சர்வீஸ் ஸ்டேஸன் போனேன்....
முன்னாடியே இதுக்குனு ஒரு ஆள வரவேற்புனு போட்ருந்தாங்க......
போட்ருந்தாங்க கரெக்ட்...ஆனா ஆளில்லை...2- ஜி ல தப்பு செஞ்சவனக்கூட கண்டுபிடிச்சிரலாம் போல இங்க சாப்பிட போனவனுகள கண்டுபிடிக்கமுடியாது போல...
ஒரு வழியா புகார் னு ஒரு கவுண்ட்டர் இருந்தது....
அங்க ஒரு லேடி ஆபிஸர்....அங்க ஏற்கனவே ஒரு ஆளு கம்ப்ளைண்ட் கொடுத்துட்டிருந்தார்.
நான் போனதும் அந்த அம்மா...என்ன சார்.....? னு கேட்டாங்க...
பிராட் பேண்ட் கம்ப்ளைண்ட் பண்ணணும் மேடம்....
நெட் எடுக்கலையா.....
எடுக்குது....ஆனா...ஸ்லோவா இருக்கு மேம்.....
எடுக்குதுல......னு கேட்டாங்க.....(என்னமோ அந்த அம்மா...நெட் எடுக்குறதே பெரிய விஶயம் மாதிரி...சொல்லுச்சு...)
ஆனா ஸ்லோவாத்தான் இருக்கு மேம் னு சொன்னேன்.
இந்த அப்ளிகேஶன் நிரப்புங்க னு சொன்னாங்க.....
அப்ளிகேஶன பாத்தா....புதுசா கனெக்ஸன் வேணும்ன்றவங்களுக்கு.....
மேம்....இது கனெக்ஸன் கேட்டு...இருக்கே....
அதுக்கு அந்த அம்மா...அதான் உங்கட்ட இருக்குல....னு சொல்லுச்சு...
(அட ராமா.....முடியல......) அதான் மேம்..கம்ப்ளைண்ட் அப்ளிகேஸன் இல்ல...
அட ஆமா...சார்....அந்த அப்ளிகேஸன் இல்ல...அதுக்குப் பதிலாத்தான் இதுல கேக்குறோம்.....
(சந்தோஸம்.......)
சரிங்க சார் உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க.....
நான் சொன்னேன்....
அப்புறமா டவுட்டு வந்து கேட்டேன்...என் மொபைல் நம்பர் எதுக்கு மேம்....
அதுல தான நெட் ஸ்லோ.....?
மேம்.....அது பிராட்......பிராராராராராட் பேண்ட்....
சார்..அப்ப பக்கத்து கவுண்ட்டருக்கு போங்க.....
(அடப்பாவிகளா.....)
அங்க போனா...அந்த ஆபிஸர் சாப்பிட போயிட்டாங்களாமாம்......
இப்பத்தான் நியாபகம் வந்தது......நான்வரும்போது ஒரு அப்பாவி நண்பனோடு வந்தேன்...அவன் போன் பேசிக்கிட்டே பின்னாடி வந்தான்...அதுக்கப்புறம் ஆளக்காணோம்....
அவனக்கு போன் பண்ணிணேன்.
டேய் எங்கடா இருக்க....
அவன் இப்பத்தான் அந்த கிழக்குப் பக்கம் இருக்குற வாசல்ட்ட இருக்கானாம்....
எங்க வர்ற னு கேட்டான்...
பிராட்......பிராராராராட்...பேண்ட் பிளாக்.........னு கத்துனேன்.....
நெட் மட்டும் ஸ்லோ இல்ல பாஸ்....ஆளுங்கலும் தான்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8