நிறுவு..3
அஜித் நடித்து வந்த பில்லா இரண்டாம் பாகத்தில் ஒரு வசனம் வரும். உட்கார்ந்து வேலைபார்ப்பவனுக்கும் களத்துல் இறங்கி வேலைபார்ப்பவனுக்கும் வித்தியாசம் இருக்கும். இதை விற்பனைத்துறையில் பொருத்திப் பார்த்தால் கனக்கச்சிதமாய் இருக்கும். பொதுவாக மருந்து விற்பனைத்துறை என்பது விற்பனைத் துறைக்கு மிகவும் சவாலான ஒன்று. இப்பொழுது இஙகு பல பல நாட்டுக் கம்பெனிகளும் வந்து விட்டன. நாகரிகம் வளர்ந்த பிறகு MBA படிப்பு படித்து விட்டு ஹெச் ஆர். என்று சொல்லப்படும் மனிதவளத்துறை உள்ளுக்குள் வளர்ந்திருக்கிறது. சில நிறுவனங்களில் அவர்கள் தான் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். தகுதியில்லாதவர்களை அப்பணியில் அமர்த்தி நிறுவனங்கள் சீரழிகின்றன. சில நாட்களுக்கு முன்னதாக நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து வெளியே சென்ற ஒரு பிரதிநிதி என்னை தொலைபேசியில் அழைத்தார். CIPLA (முன்னனி நிறுவனம்) நிறுவனத்திற்கு அப்ளிகேஸன் அனுப்பியுள்ளதாகவும், அதில பழைய மேலாளர் பெயரைக் கேட்டதாகவும் அதில் என் பெயரையும் என் எண்ணைக் கொடுத்துள்ளதாகவும் சொல்லியிருந்தார். அவர் அப்படி சொன்ன இரண்டாவது நாள் மேற்படி நிறுவனத்தின் மும்மை