மதுரை புத்தக மழை விழா
மதுரையில் நேற்றோடு புத்தகக் கண்காட்சி நடைபெற்று முடிவடைந்துள்ளது. அது பற்றி எழுத வேண்டியது ஆசை. அந்த புத்தகக் கண்காட்சியில் நான் என்னென்ன புத்தக்ங்கள் வாங்கினேன் என்று ஒரு பட்டியல் போடப்போகிறேன் என நினைக்காதீர்கள். இது அது அல்ல. கொஞ்ச நாள் முன்னதாக எழுத்தாளர் ஈரோடு கதிர் அவர்கள் ஈரோட்டில் நடந்த புத்தகத் திருவிழாவை ஒட்டி தினமும் நிலைத் தகவலாய் அந்த புத்தகத்திருவிழா பற்றி பதிவு செயதார். அப்பொழுதே எனக்கு தோன்றிய விசயம் நாமும் ஏன் மதுரையில் புத்தகத் திருவிழா நடக்கும்பொழுது இப்படி எழுதக் கூடாது என யோசித்து எழுத்தாளர் ஈரோடு கதிர் அவர்களிடம் வாட்சப்பிலும் பின்னூட்டத்திலும் காட்டப்படாத சூடத்தின் மேல் சூளுரைத்தேன். நானும் எழுதப் போகிறேன் என்று. அவரும் எழுதித் தொலையும் என்ற மைண்ட் வாய்ஸை மொழிபெயர்த்து எழுதுங்க பழனி)))) என்று ஸ்மைலியோடு சொன்னார். ஆனால் அவர் எழுதிய தொணி நமக்கு சரிபட்டுவராது என்பதும் நமக்கு வருவதை எழுத முற்பட்டால் scary movie ரேஞ்ச்க்குத்தான் மாறும் என்பதையும் காட்டப்படாத சூடத்தின் மேல் சூளுரைத்தேன். அதற்கான புத்தகக் கண்காட்சி செப்டம்பர் 1ம் தேதி ஆரம்பமானது. அதுவரை அஸ்ஸாம்