இடுகைகள்

ஏப்ரல், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செம்பருத்தி

இது ஒரு மழைக்காலம் தான் அதற்காக ரோட்டில் இந்த அளவு சகதியாக இருப்பதற்குக்காரணம் மழை இல்லை. ரோடு போடுவதற்காக கொட்டப்பட்ட மண் தான். இவர்கள் எப்போதுமே இப்படித்தான். மழைக்காலத்தில் தான் பாதாளச்சாக்கடை போடுவது கேபிளிற்காகத் தோண்டுவது ரோட்டைப் போடுவது என்று செய்வார்கள். அப்படித்தான் ரோட்டைப் போட மண்ணைப் போட்டு சில இடங்களில் பள்ளங்களை நிரப்ப செம்மண்ணைப் போட்டு சாலையைச் செந்நிறமாய் வைத்திருக்கிறார்கள். நகரின் புறநகர் பகுதியில் இருக்கும் முக்கியமான ஒரு பகுதிக்கு இந்தச் சாலை தான் பிரதானம். எல்லாம் குடியிருப்புகள் இருக்கும் சாலை. சாலையில் நடப்பவர்கள் ஆங்காங்கே தேங்கியிருக்கும் சகதிக்கும் தண்ணீருக்கும் ஏற்றபடி தாண்டி தாண்டிச் சென்றார்கள். சோமசுந்தரம் மாமா தான் என் முன் போய்க்கொண்டிருக்கிறார். ஒரு கையில் மஞ்சள் பை வைத்திருக்கிறார். சிவப்பு நிற லெதர் பேட்டா செருப்பின் நுனியில் சற்று சகதி அப்பியிருக்கிறது. இடது கையால் தன் பேண்ட்டை ஏற்றிப் பிடித்தபடி நடந்துகொண்டிருந்தவருக்குப் பின்னால்தான் பஜாஜ் பல்சரில் போய்க்கொண்டு இருக்கிறேன். அரை கிலோமீட்டரில் என் வீடு. அதற்கு நான்கு வீடுகள் முன்னதாகத் தா