ஹலோ...
. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை என்றாலே நவீன் காப்பிக் கடையில் கூட்டம் அதிகம். கவுண்டரில் இருப்பவருக்கு முன் நானகைந்து கைகள் நீட்டிக்கொண்டிருக்கின்றன டோக்கன் வாங்க. அதில் ஒரு கை ப்ரவீன் உடன் ஒரே நேரத்தில் நடக்க வருபவர். முதியவர். சமயத்தில் இருவருமே ஒன்றாக நடந்திருப்பார்கள். ப்ரவீன், அவருடைய டோக்கனையும் வாங்கிக்கொண்டு, ஓரமா இருங்க சார். நான் வாங்கிட்டு வரேன் என்று கூட்டத்தின் நடுவே இரண்டு காப்பி டம்ளர்களை வாங்கிக்கொண்டு வந்தான். இருவரும் ஓரமாய் பேசிக்கொண்டே காப்பி குடிக்க, அந்த வயதானவருக்கு ஒரு ஃபோன். ஹலோ... எதிர்புறத்தில் பேசுவது பக்கத்தில் இருக்கும் ப்ரவீனுக்கு லவுட்ஸ்பீக்கர் போடாமலேயே கேட்டது. ஆனால் தெளிவாய் கேட்கவில்லை. ஆங்க்...ஆங்க்..மாப்ள சௌக்கியமா..என்றார் உடன் நடப்பவர். எதிர்புறத்தில் ஏதோஒன்று கேட்க.... ஆமா மாப்ள இப்பத்தான் வாக்கிங்க். நீ என்ன இந்நேரத்துலயே கூப்டுட்ட..... எதிர்புறத்தில் மிக நீளமாய் ஏதோ ஒன்று கேட்க.... அது விசாரிக்கனுமே மாப்ள...என இழுத்தவர்..இரு மாப்ள நல்ல நேரமா கூப்ட...என் கூட ஒரு தம்பி இருக்காப்ல..அவர் மெடிக்கல் ஃபீல்டு தான். அவர்ட்ட ஃபோன குடுக்குறேன். நீ