தேசபக்தர்களின் மனச்சாட்சியை எப்படி தட்டுவது
தேசபக்தர்களின் மனச்சாட்சியை எப்படி தட்டுவது பழனிக்குமார், மதுரை. தேசிய புள்ளியியல் துறையில் இன்றைக்கு ( 31/5/21) பிஜேபியினர் மற்றும் பிஜேபியின் ஆதரவாளர்களுக்குப் புத்தியில் உரைக்கும்படியான அறிக்கை ஒன்றை தந்திருக்கிறார்கள். அது இந்திய நாட்டின் கடந்த ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான அளவைச் சொல்லியிருக்கிறார்கள். சுருக்கமாக GDP . கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவில் -7.3 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. அந்த 7.3 சதவீதத்திற்குமுன் இருப்பது வெறும் கோடு அல்ல. அது மைனஸ் அதாவது எதிர்மறையான குறியீடு. இன்னும் சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் கடந்த வருடத்தில் நம் தேசத்தின் பொருளாதார வீழ்ச்சி மைனஸ் எதிர்மறை 7.3 சதவீதமாக விழுந்துள்ளது. அதாவது அதலபாதாளம். இது ஏற்கனவே எதிர்பார்த்தது தான் என்று அதிகாரிகளும் அமைச்சர்களும் சொல்லக்கூடும். ஏனென்றால் கடைசி நிதியாண்டின் கடைசி காலாண்டில் ( ஒவ்வொரு நிதியாண்டும் ஏப்ரல் மாதத்திலிருந்து மார்ச் வரை கணக்கிடப்படும்) ஜனவரி 21ல் நடப்பு நிதியாண்டிற்கான வளர்ச்சியில் ஜனவரி பிப்ரவரி மார்ச்சில் கூடும் ஆனால் ஒட்டுமொத்தமாகக் குறைந்திருக்கும். காரணம் முதல் காலாண்டி