பல்வலி
வேலை நிமித்தமாக ஒரு முறை திண்டுக்கல் போனப்ப கடையில் டூத்பேஸ்ட் வாங்கியிருந்தேன் . நல்லா பல்ல தேச்சுக்கிட்டு இருக்கும்பொழுதே ரூம் கதவ திறந்து வச்சுதான் இருந்தேன் . ஏன்னா சடக்குன்னு " உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா னு திரிஷாவோ காஜலோ வந்திருவாங்கனு . ஆனா அவங்க வரல ... சாயங்காலமா பாத்து பல் வலி தான் வந்தது ... பல் வலினாலும் வலி, தாங்கமுடியாத வலி தான். காய்ச்சலும் தலைவலியும் அவனவனுக்கு வந்தாத்தான் தெரியும்னு பழமொழிய கிளப்பிவிட்டவனுக்குப் பல்வலி வந்தது இல்ல போல. பல்லுல வலிக்க ஆரம்பிச்சது அப்படியே மூளைக்குப் பரவுது. அப்ப திண்டுக்கல் தாண்டி வடமதுரைல வேலைல இருந்தேன். வேலைய பாதியிலேயே முடிச்சுட்டு கிளம்பலாம்னா வடமதுரை ட்டூ திண்டுக்கல் அப்புறம் அங்க இருந்து மதுரை வரனும். வடமதுரைல ஒரு பஸ் ஏறுனதும் பல் வலி போதாதுனு நான் போய் உட்கார்ந்தது ஒரு தீர்த்த பிரகஸ்பதிட்ட. அவர்ட்ட தான் இடம் இருந்தது. நமக்கு சனி சடை போட்டுச்சுனா வச்சு நல்லாத்தான செய்யும். குடிமகன் கண்ல போதையோட என்னைய பார்த்தார். ‘என்னண்ணே குறுகுறுனு பாக்குறீங்க’ வ