பல்வலி

 

வேலை நிமித்தமாக ஒரு முறை திண்டுக்கல் போனப்ப கடையில் டூத்பேஸ்ட் வாங்கியிருந்தேன்நல்லா பல்ல தேச்சுக்கிட்டு இருக்கும்பொழுதே ரூம் கதவ திறந்து வச்சுதான் இருந்தேன்ஏன்னா சடக்குன்னு " உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா னு திரிஷாவோ காஜலோ வந்திருவாங்கனு. ஆனா அவங்க வரல...சாயங்காலமா பாத்து  பல் வலி தான் வந்தது...

பல் வலினாலும் வலி, தாங்கமுடியாத வலி தான். காய்ச்சலும் தலைவலியும் அவனவனுக்கு வந்தாத்தான் தெரியும்னு பழமொழிய கிளப்பிவிட்டவனுக்குப் பல்வலி வந்தது இல்ல போல. பல்லுல வலிக்க ஆரம்பிச்சது அப்படியே மூளைக்குப் பரவுது. அப்ப திண்டுக்கல் தாண்டி வடமதுரைல வேலைல இருந்தேன். வேலைய பாதியிலேயே முடிச்சுட்டு கிளம்பலாம்னா வடமதுரை ட்டூ திண்டுக்கல் அப்புறம் அங்க இருந்து மதுரை வரனும்.

 

வடமதுரைல ஒரு பஸ் ஏறுனதும் பல் வலி போதாதுனு நான் போய் உட்கார்ந்தது ஒரு தீர்த்த பிரகஸ்பதிட்ட. அவர்ட்ட தான் இடம் இருந்தது. நமக்கு சனி சடை போட்டுச்சுனா வச்சு நல்லாத்தான செய்யும். குடிமகன் கண்ல போதையோட என்னைய பார்த்தார். ‘என்னண்ணே குறுகுறுனு பாக்குறீங்க’ வடிவேலுகணக்கா மனசுக்குள்ள நெஞ்ச பிடிச்சுக்கிட்டும் நிஜத்துல பல்ல பிடிச்சுக்கிட்டும் உட்கார்ந்திருந்தேன்.

 
பக்கத்துல இருந்த பிரகஸ்பதி மெதுவா தன்னோட தீர்த்த வேலைய காமிச்சார்...
"
சார் , திண்டுக்கலா..."
ஆமா..
“காட்டாஸ்பத்திரி” பஸ் நிக்குமா....னு கேட்டார்.
திண்டுக்கல் அவுட்டர்ல காட்டாஸ்பத்திரி ஸ்டாப் னு ஒண்ணு  இருக்கு...
தெரியலயே னு சொன்னேன்...
கண்டெக்டர்ட்ட கத்தி கேட்டார்அவர் நிக்காதுணு சொன்னார்.

இவர் என்னைய முறைச்சார்....(என்னமோ..நான் பஸ்ஸ நிப்பாட்டாம ஓட்டுற மாதிரி)

அங்க நிக்காதா னு இப்ப என்ட்ட  கேட்டார். ‘இசை எதுல இருந்து வருதுனு கணக்கா என்ட்ட ஏன்யா கேக்குற”னு


நிக்காதுனு சொல்றாங்கண்ணே....


நான் குதிக்கவா.....
(
டேய்...அத ஏண்டா என்ட்ட கேக்குற....)

குடிச்சுட்டு இவனாலேயே நிக்க முடியல..இதுல பஸ் நிக்குமா னு கேக்குறான். 
இது தேவையா!  நமக்கு ஏற்கனவே பல் வலி...அதோடு இந்த நாக்கு ஏதாவது ஏடாகூடமா பேசும்...போற பல்லு டாக்டர்ட்ட போகட்டும்...குடிகாரன்ட்ட போகவேணாம்னு நான் அமைதியா இருந்தேன்..

அவர் எந்திரிச்சு படியில நிண்டுக்கிட்டார்
காட்டாஸ்பத்திரி பஸ் ஸ்டாப் வந்தது...நான் மெதுவா திரும்பிப் பார்த்தேன்!...

குடிகார அண்ணன்..என்னைய பார்த்து..."அண்ணேநிப்பாட்டச் சொல்லுங்க...னு கேட்டார்..

நான் கண்டெக்டர பார்த்து...கொஞ்சம் நிப்பாட்டச் சொல்லுங்கனு சொன்னேன்...

அந்த கண்டெக்டர் அறிவாளி..."ஏன் சார்...நான் தான் சொன்னேன்ல...காட்டாஸ்பத்திரி நிக்காதுணு...படிச்சவங்க தான புரிஞ்சுக்கமாட்டிங்கீளா...." னு கோபப்பட்டார்.

வண்டி நிப்பாட்டுனாங்க

கண்டெக்டர் என்னைய பார்த்தார்.
 
நான் பின்னாடி பார்த்தேன்... 
குடிகார அண்ணன் ஏற்கனவே குதிச்சுட்டார் போல...ஆள காணாம்.. (‘பலே வெள்ளையத்தேவா)
இப்ப நான் கண்டெக்டர பார்த்தேன்.கோபத்துல விசில் சத்தம் காத கிளிச்சது....எனக்குப் பல் வலி கொஞ்சம் குறைஞ்சு தல வலி வந்த மாதிரி தோணுச்சு.

ஒரு வழியா மதுரை வந்து சேர்ந்தேன்.

 
இப்ப ஒரு நல்ல பல் டாக்டர பாக்கணும்.(.நல்லா கவனியுங்க மக்களே."நல்லபல் டாக்டர)

 

இரவு ஏழு மணியிருக்கும்...

கண் ஆஸ்பத்திரி போணா கண்ணுல மருந்த ஊத்தி வச்சு தூங்க வச்சிருப்பானுக.
இது பல் ஆஸ்பத்திரி.

எல்லார் வாயிலயும் ஏதோ ஊசிய போட்டோ, பஞ்ச வச்சோ அமுக்கி எல்லார் வாயையும் மூடி வச்சிருந்தாணுக.

ஒரு பய பேசல.

அவ்வளவு அமைதி.

அந்த ரிசப்ஸனிஸ்ட் டிவில சீரியல் பாத்துட்டு இருந்தது. நான் முதலில் சேனலை மாத்தச் சொன்னேன். அந்தப்பொண்ணு வேற சேனலில் வேற சீரியல் வச்சது. அது இந்தில டால்டா டப்பாக்களா நடிக்கிற தமிழ் டப்பிங்க் சீரியல். நான் அதையும் மாத்துங்கனு சொன்னேன்.

அந்த பொண்ணு பாக்குற பார்வையே தெரிஞ்சது - " போடி போ...போ...உன் பல்ல புடுங்குனப் பின்னாடி எப்படி பேசுவனு."பாத்தது.

 

ஏன்னா அந்த ஏரியால அந்த பல் மருத்துவர் தான் ரொம்ப கம்மியா ஃபீஸ் வாங்குவார்னு கேள்விபட்டுத்தான் அங்க போனேன். பிறகுதான் தெரிந்தது. பல்வலியா , இந்தா பல்லு னு நம்ம கைல புடுங்கி கையில கொடுத்துட்டு மறு கைல 100 ரூபா வாங்கிக்குவார்னு அப்புறம் தான் கேள்விபட்டேன். நோ க்ளீனிங்க், நோ டிங்கரிங்க் வொர்க்காமாம். ஒன்லி ப்ளக்கிங்காம்.

டாக்டர் உள்ளே கூப்பிட்டார்....
போனேன்.
ஒரு சாய்வான இருக்கை.

இந்த சேர பாத்தாலே ஒரு பயம் தானா வருது.

உட்கார்ந்தேன்.

அவர் அப்படியே சாய்ச்சார்.

கிட்டத்தட்ட படுத்தேன்.
நேரா படுக்கச் சொன்னார்.
படுத்தேன்.
தலைக்கு நேரா ஒரு ஸ்டாண்ட் .

அதுல ஒரு பெரிய லைட்டு.

அத நகட்டி தலைக்கு நேரா இருக்கும்படி வச்சார்.அந்த லைட் ஸ்டாண்ட் பயங்கரமா ஆடுச்சு. அதுல தொங்குன லைட்டும் தான்.

புலனாய்வுத்துறைல தேசதுரோகிகள அரஸ்ட் பண்ணி போலிஸ் விசாரிக்கிறப்ப இப்படி குண்டு பல்ப ஆட்டிவிட்டு அடிப்பானுக. எத்தனை விஜயகாந்த், அர்ஜூன் படத்துல பாத்ருக்கேன்.

எனக்கு அதான் ஞாபகத்துக்கு வந்தது.

எனக்கு என்ன பயம்னா...அந்த லைட்ஸ்டாண்ட் விழுந்துச்சுனாவலிக்குற பல் தானா வந்திரும்.புடுங்க வேணாம்.

லைட்ட பாத்துட்டு இருந்த என்னை டாக்டர் பார்த்து..அவர்பக்கம் திரும்பச் சொன்னார்.

 ....... னு காட்டச்சொன்னார்....
.......

நல்லா.............னு காட்டுங்க....
........


‘இப்ப சொல்லுங்க...என்ன பண்ணுது
பல்ல காமிச்சு வலி...னு சொன்!னேன்.


மறுபடியும் .....னு சொன்னார்.

நானும் .....காட்டுனேன்.


இரண்டு கொக்கி எடுத்து வாய பிளந்தார்.


பல் டாக்டருக்குக் கண் கொஞ்சம் மங்கல்.
உத்து பார்த்தார்.


ஒரு குச்சி மாதிரி ஒரு இரும்பு கம்பி எடுத்து பல்ல சொரண்டி பார்த்தார்.


தலைய தலைய ஆட்டுனார். என்னமோ கொலம்பஸ் அமெரிக்காவ கண்டுபிடிச்ச மாதிரி.


இந்தப் பல் தான ...அது அவ்ளோதான்...போச்சு.....எடுத்துரணும்.
நான் அமைதியா இருந்தேன்.


நான் அமைதியா இருந்ததப் பார்த்துட்டு..அந்த பல்ல இரும்புக்கம்பியால குத்திட்டு வலிக்குதானு கேட்டார்.
"
..யி...க்.....லஅ......" னு சொன்னேன்....(புரியலையா.... அப்புறம்...வாய இரண்டு பக்கமும் கொக்கிய வச்சு புளந்தப்புறம் "வலிக்கவில்லை.." னு சுத்தத் தமிழிலிலா சொல்ல முடியும்....அதான் உதட்ட விரிச்சு ..யி..க்....லஅ..)


டாக்டர் விடல...மறுபடியும் கொக்கிய வச்சு குத்தி...’இப்ப வலிக்குதா.’
"
..யி..க்........"

மறுபடியும் டாக்டர் இன்னும் ஜாஸ்தியா வேகமா குத்திட்டு " இப்ப வலிக்குமே.." னார்
"
.யி.க்......"


அவரும் விடல...இன்னும் அத விட ஜாஸ்தியா இழுத்துக்  குத்திட்டு.."இப்ப...?"


(
அடப்பாவி....நீ வலிக்குற வர குத்துவியா...)


.யி..க்..கு..து....க்டர்.....( வலிக்குது டாக்டர் னு அர்த்தம்)


அவர் உடனே..."ங்..ங்....நான் சொன்னேன்ல....அந்த பல் போச்சு.பாருங்க நீங்களே வலிக்குதுனு சொல்றீங்க...."


(
அடப்பாவி...நீ இன்னும் ஒரு குத்து குத்திருந்தா...பல் மட்டுமில்ல..நானே சீட்டோட விழுந்திருப்பேன்ல.....)
நாளைக்கு வாங்க ...அந்தப் பல்ல புடுங்கிருவோம்...
(
நல்ல வேல...நாளைக்குத் தான....ஐய்யா...என் பல்லு தப்பிச்சுச்சு)


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

A separation ஈரானிய மொழி திரைப்படம்

சைரன் 4

விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 8