கானாகுமாரு...
கொஞ்ச நாளைக்கு முன்னாடி டி.வி.எஸ் சேம்ப் கட்டுரை எழுதிருந்தேன். அதுல வந்த சில கதாபாத்திரங்களோட இன்னோரு அனுபவம். நான் கணேஷ் கணேஷ்குமார் அப்புறம் ராபர்ட் அண்ணன் பிரேம்னு படிப்பாளி. இவைங்களோட தான் அந்த அனுபவம். குறிப்பு மேலே கண்ட பயபுள்ளைக எல்லாம் இப்ப பத்தாம் வகுப்பு படிக்குதுக...ராபர்ட் அண்ணே மட்டும் பதினொண்ணு. நான் கணேஷ் கணேஷ்குமார் எல்லாம் ஒரே இடத்தில் ட்யூஷன். அது எங்க னு அப்புறம் சொல்றேன். அதுக்கு முன்னாடி கணேஷயும் கணேஷ்குமாரையும் வேறுபடுத்திக்காட்ட கணேஷ்குமார கானாகுமாருனு கூப்பிடுவோம்...குழப்பாதுல.. ட்யூஷன் நல்லாத்தான் போனது. ஒரு நாள் தான்//// ஒரே நாள் தான் ஒன்பதாம் வகுப்பு படிச்ச ஹெலன் குட்டைப் பாவாடை போட்டு வந்தது . அன்னைக்கு பிறந்த நாளாம்...சாக்லேட் கொடுத்தது. நானும் கணேஷும் தின்னுட்டு பேப்பரை க் கீழ போட்டுட்டோம். இந்த பாழாப்போன கானாகுமார் மட்டும் அந்தப் பேப்பரைத் தனியா சட்டைப் பையில வச்சுக்கிட்டான். ஏ என்னடா....னு கேட்டேன்... போ...மாப்ள....னு வெக்கப்படுறான் கானாகுமார். உண்மையிலையே வெளங்கல..அவன் வெக்கப்பட்டது... டே என்னடா...னு மறுபடியும் கேட்டேன்...