ஆச்சி.
அந்த மருத்துவமனையில் காத்திருந்த பொழுது மணி இரவு பத்து இருக்கும். ஒரு சக்கர நாற்காலியில் ஒரு முதியவரை அமர வைத்து மருத்துவரைப் பார்த்துவிட்டு வெளியில் அவரை இருக்க வைத்துவிட்டு கூட வந்த உறவினர்கள் மருந்துக்கடைக்குச் சென்று விட்டனர். அப்பொழுது அவர்களைத் தேடி வந்த இன்னொரு நபர்..அந்த தாத்தாவைப் பார்த்து 'இப்ப எப்படி இருக்கீங்க தாத்தா எனக் கேட்டார். பதிலுக்கு அவர்..'யாரு முத்துவா ' னு கேட்டார். இல்ல...ராசு...னு பதில் சொன்னார். எனக்குக் கூட அப்படி அனுபவங்கள் உண்டு . பதில் சொல்லி. என் ஆச்சியிடம். ஆச்சினா அம்மாவோட அம்மா. தாத்தா இறந்தப்பின்னாடி ஆச்சி மாமா வீட்டோட இருந்தாங்க. எங்க வீட்ல இருந்து நாலு தெரு தாண்டி மாமா வீடு. ஆச்சி நல்லா நடக்கிறப்ப எங்க வீட்டுக்கு வரும். எங்கள பாக்கும். அம்மாவும் ஆசிரியைன்றனால சனிக்கிழமை சாயந்திரம் வந்திட்டு திங்கட்கிழமை காலைல போயிருவாங்க... அந்த மூணு நாள் தங்குறது பேரங்களாகிய எங்கள பாக்க மட்டுமல்ல. மக கொஞ்சம் வாய்க்கு நல்லா சமைச்சு கொடுப்பானு. அந்த காலத்துல இருந்து அப்பாக்கும் தாத்தா ஆச்சிக்கும் வாய்க்கால் தகராறு இருந்தாலும் ஆச்சி தங்குற