யூ.பி சார்
அவர் பெயர் U. பாலசுப்பிரமணியம். நாங்கள் செல்லமாக யூ.பி என அழைப்போம். பன்னிரண்டு ஆண்டுகளுக்குமுன் நான் அந்த நிறுவனத்தில் மருநது விற்பனை பிரதிநிதியாகச் சேர்ந்தபோது அவர்தான் ஏரியா மேனேஜர். அதற்கு முன் நான் இரண்டு நிறுவனங்களில் வேலை பார்த்தபோதுகூட இப்படிப்பட்டவர் மாதிரி ஏரியாமேனேஜர் வரமாட்டாரா என ஏங்கி பிறகு அவரே எனக்கு மேனேஜரா விதி போட்ட தாய நகர்வுகளில் அதுவும் ஒன்று. மெடிக்கல் ரெப்பாக தொழிலை வேறு இடத்தில் கற்றுவந்திருந்தாலும் இவருடன் பணிபுரிந்த போது நான் கற்றுகொண்டது ஏராளம். மதுரைல ஆயிரம் ரெப் இருக்கான் பழனி. அம்புட்டு பேரும் உன் மருந்த விப்பான்.எல்லாப் பயலும் நீ பாக்குற டாக்டர பார்ப்பான். அதுல நீ அந்த டாக்டர எழுத வைக்கனும். நம்ம ஏன் பழனிக்கு எழுதக்கூடாதுனு டாக்டர யோசிக்க வச்சுட்ட நீ உண்மையான மார்க்கெட்டிங் ஆளு பழனி . இந்த வாசகத்தை நான் பதவி உயர்வு பெற்று ஏரியா மேனேஜர் ஆனபிறகு என் ரெப்களுக்கு ட்ரான்ஸ்ஃபார்ம் செய்திருக்கிறேன். அந்தளவு அவரது வார்த்தை எனக்கு ஓர் உபதேசம். எப்பொழுது அழைத்தாலும் சொல்லுங்க பழனி என்ற காந்தத்தொனியில் சொல்வார். மருத்துவருடன் அவர் பேசும்பொழுது அவரது லாவகம் உட