இடுகைகள்

ஏப்ரல், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

M.I பீரியட்

சும்மா எப்ப பாரு நச்சுநச்சுனு இருக்கானுக. இவனுகளா விருது தரானுக...அத ஒரு க்ரூப் திட்டுது. இன்னொரு க்ரூப் புரோமோ பண்ணுது. வெளிய வந்தாலும் வெக்கை. உள்ள வந்தாலும் வெக்கை. ச்சை...ஊராயா இதுனு காந்தி மியூசியம் ரோட்டுல மரத்தடில நிண்டு சர்பத் சோடா நல்லா சில்லுனு கடல் பாசி பெப்பர்லாம் போட்டு தருவார் ஒரு அண்ணேன். குடிச்சா ஜிவ்ஜிவ்வுனு இருக்கும். அப்படி இதமா எங்கயாவது போகனும். அட்லீஸ்ட் மன நிலையிலாவது அப்படி போயிரனும். பள்ளிக்கூடம் படிக்கிறப்ப காலை  ஆரம்பிக்கிறப்ப நல்லொழுக்கம் க்ளாஸ் இருக்கும். நான் படிச்சது புனித பிரித்தோ மேல்நிலைப்பள்ளி. இந்து முஸ்லீம் பசங்களுக்கு நல்லொழுக்கம் க்ளாஸும், கிறித்தவ மாணவர்களுக்கு கத்தோலிக்கக் கிறித்தவ க்ளாஸும் நடக்கும். பரீட்சைலாம் வைப்பானுக. மொக்க க்ளாஸ். என்னா பெரிய நல்லொழுக்கம் க்ளாஸ். படிச்சு ஒப்பிச்சு பாஸ் பண்ணுறதுதான..பண்ணியாச்சு. கிறித்தவ பசங்களுக்கு நல்லொழுக்கம் தேவையில்லையானு கேட்டீங்கனா நீங்க ஒரு ஆன்டி இந்தியன். அப்புறம் உடற்கல்வினு ஒரு வகுப்பு இருக்கும். எல்லாப் பசங்களும் சட்டைய கழட்டிட்டு ஸ்கூல் யூனிஃபார்ம் பனியனோட க்ரவுண்ட்டுக்கு போவோம். மூணு நாலு

வினோத் மாமா....

நான் ஐந்தாவது ஆறாவது படிக்கும்பொழுது என் வீட்டில் அப்பா ட்யூஷன் எடுப்பார்கள். நிறைய அண்ணன்மார்கள் வந்து படிப்பார்கள். அப்பா வேலை பார்த்த பள்ளி ஒரு வசதியற்ற தாழ்வுநிலையில் உள்ள மக்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்த பள்ளி. அப்பா அங்கு தமிழாசிரியர். ஆரம்பகால பணி நிமித்தம் காரணமாகவும் அனுபவம் காரணமாகவும் ஆங்கிலமும் கணிதமும் அப்பாவிற்கு அத்துபடி. அவரது பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறையில் கணிதத்திற்கு அப்பாவே வகுப்பு எடுத்தார். மொத்தமே பத்து மாணவர்கள் படித்த பத்தாம் வகுப்பெல்லாம் உண்டு. சில சமயம் சந்தேகங்கள் இருந்தால் வீட்டிற்கு வாங்க என்று அழைத்து விடுவார். ஏழை மாணவர்கள் பணம் கொடுக்க வசதி இல்லை எனத் தயங்குவார்கள். அதையும் மீறி வந்து படி கொடுக்க வேண்டாம் எனலாம் நடக்கும்.  அதில் சில அண்ணன்மார்கள் எனக்கு மிகவும் ப்ரியம். இலவசமாக ஓர் ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் வீட்டில் இருக்கும் குட்டிப்பையனை யாருக்குத்தான் பிடிக்காது. எனக்கு அப்பொழுது பொங்கல் வாழ்த்தாக  ராஜா சின்ன ரோஜா பணக்காரன் என ரஜினி படங்களை வாங்கி அப்பாவிடம் கொடுத்து அனுப்புவார்கள். அப்பொழுது எல்லாம் சைக்கிள் வாடகைக்கு எடுத்த