ஹேப்பி தீவாளி.....
தீபாவளினு ஒண்ணு வந்தாலே எனக்குப் பல ஃப்ளாஷ்பேக் போயிருது. சின்னப்பிள்ளைல தீபாவளினா புது ட்ரஸ், வெடி , ஸ்வீட். கீழ் வீட்டு ரஞ்சிதம் அத்தை சுட்டுத் தர்ற அப்பம். இதான் தீபாவளி. அப்ப மதுரைல மேலப்பொன்னகரம் எட்டாவது தெருல இருந்தோம். அங்க இருந்து க்ராஸ் ரோட்டுப்பக்கம் எங்கேயோ நடந்து ஒரு கல்லு சந்துக்குள்ள குடும்பத்தோட போவோம். அங்க தான் இருக்கும் வெங்கட் ராமன் கடை. அந்தக் கடை பேரு வெங்கட் ராமனா இல்ல ஓனர் பேரு வெங்கட் ராமனா னு தெரியாது. அது ஒரு பத்துக்கு பத்து இருக்குற ஒரு சின்ன ரூம் கடை. கீழ தரைல பாய் விரிச்சிருப்பானுக. கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் வச்சுப் பார்த்தா அந்தக் கிழிஞச பாய்லாம் வருஷா வருஷம் நாங்க எடுக்குற துணில நல்ல பாய விரிச்சுட்டானுக. துணியா எடுத்து வெளிய தைக்க கொடுப்போம். சட்டை டவுசர் தான். எனக்குத் தெரிஞ்சு அஞ்சாவது படிக்குறப்ப கூட படிச்ச பாலசுப்பிரமணியன் என்றவன் வெங்கட் ராமன் கடைலயா எடுக்குற...பாத்து டவுசர் கிழிஞிசுருமேடா.....கால தூக்கிறாத னான். முடிஞ்சது கதை. சைக்கிள்ல டக் அடிச்சு உக்காந்ததுமே டக்குனு குனிஞ்சு பாத்துக்குவேன். அந்த தீபாவளிக்கு வெங்கட் ராமன் கடைனா