இடுகைகள்

டிசம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயேசுவே உமக்குப் புகழ்

பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தச் சமயம் அது. கிறிஸ்டியன் மேனேஜ்மெண்ட். ஆர்.சி ஆரம்பப்பள்ளி, நான் படிச்ச பிரிட்டோ (ஆண்கள் மட்டும்) பள்ளி, ஹோலி ஃபேமிலி (பெண்கள் மட்டும்) பள்ளி எல்லாம் ஒரே பகுதியில் தடுப்புச்சுவர் மூலமா பிரித்து வைக்கப்பட்டப் பள்ளிகள். மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை திருப்பலி நடக்கும். பள்ளி சார்ந்த பள்ளிக்கு கொஞ்சம் எதிரில் இருந்த ஒரு சர்ச்சில். கிறித்தவ மாணவர்கள் போவார்கள். அன்று மட்டும் பள்ளி ஒரு மணி நேரம் தாமதமாக ஆரம்பிக்கும். அதுவரை கிறித்தவம் சாராத அல்லது அந்தத் திருச்சபை சாராத அதாவது கிறித்தவ வேறு கிளைக்கான மாணவர்கள் எல்லோரும் வகுப்பில் உக்காந்து படிக்கனும். எதுனாலும் படிக்கலாம். விளையாடக்கூடாது. மீறி பேசினா விளையாடினா ஒரு லீடர போட்டு போர்ட் ல பேர் எழுதச் சொல்வானுக. அதுனால எங்களுக்கு வேலை காலை திருப்பலிக்குப் போறப்ப ஹோலிஃபேமிலி பொண்ணுக சாரை சாரையா போகுங்க. அதைப் பார்க்குறது. திரும்பி போறப்பவும் பார்ப்போம். ரொம்ப கேவலம் சார். பள்ளி வகுப்பறைல இருந்து பாக்குறப்ப க்ரவுண்ட்ல க்ராஸ் ஆகுற பொண்ணுக ஒருத்தி முகமும் தெரியாது. இருந்தாலும் ஆ....னு பாத்து இருக்கோம்

வெள்ளை நியூட் ரின் சாக்லேட்

இப்பொழுது தான் அம்மாவிற்கு அழைப்பு வந்தது. என்னிடம் கேட்கலாம் எனச் சொல்லி அம்மா ஃபோனை அணைக்கும்வரை அவர் யாரிடம் பேசுகிறார் என்று  நான் கவனிக்கவில்லை. அவர் ஃபோனை அணைத்துவிட்டு வெளியில் வருவதற்கும் நான் என் பைக்கை வெளியில் எடுக்கத் தயாராவதற்கும் சரியாக இருந்தது. டே ப்ரவீன்... அரவிந்த் டா ஃபோன். இதைச் சொல்லிவிட்டு அம்மா வாசலுக்கு என்  அருகில் வரும் வரை அரவிந்த் க்கான ஒரு சிறு ட்ரெய்லர் என் மனதில் ஓடியது. இரண்டு வருடத்திற்கு முன் இப்படித்தான் ஃபோன் செய்தான். அதுவும் அவன் அல்ல. அவனது அம்மா. மாணிக்கம். அம்மாவோடு ஒன்றாய் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தன் இரண்டாவது மகன் அரவிந்த் விசயமாக ஃபோன் செய்திருக்கிறார். எம் பி ஏ அரியர் . வேலை இல்லை. வீட்டிலேயே சொத்தை அழிக்கும் படியாக அமர்ந்து உணவு உண்ணும் தறுதலைப் பையன் . அவனது அப்பா இப்படித்தான் சும்மா இருந்து வேலை வெட்டி என்று எதுவும் இல்லாமல் புகை தண்ணீர் என எல்லாக் கெட்ட பழக்கங்களுடனும் வீட்டில் சுமையாக மாறி விட்டார்.. இவனும் அப்படி ஆயிரக்கூடாது என்று சொன்னார். ஆதலால் அவனுக்கு ஏதாவது வேலை. இது தான் அன்று வந்த ஃபோன். என்னை அழைக்கச்