இயேசுவே உமக்குப் புகழ்
பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தச் சமயம் அது.
கிறிஸ்டியன் மேனேஜ்மெண்ட்.
ஆர்.சி ஆரம்பப்பள்ளி, நான் படிச்ச பிரிட்டோ (ஆண்கள் மட்டும்) பள்ளி, ஹோலி ஃபேமிலி (பெண்கள் மட்டும்) பள்ளி எல்லாம் ஒரே பகுதியில் தடுப்புச்சுவர் மூலமா பிரித்து வைக்கப்பட்டப் பள்ளிகள்.
மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை திருப்பலி நடக்கும். பள்ளி சார்ந்த பள்ளிக்கு கொஞ்சம் எதிரில் இருந்த ஒரு சர்ச்சில்.
கிறித்தவ மாணவர்கள் போவார்கள். அன்று மட்டும் பள்ளி ஒரு மணி நேரம் தாமதமாக ஆரம்பிக்கும்.
அதுவரை கிறித்தவம் சாராத அல்லது அந்தத் திருச்சபை சாராத அதாவது கிறித்தவ வேறு கிளைக்கான மாணவர்கள் எல்லோரும் வகுப்பில் உக்காந்து படிக்கனும். எதுனாலும் படிக்கலாம். விளையாடக்கூடாது. மீறி பேசினா விளையாடினா ஒரு லீடர போட்டு போர்ட் ல பேர் எழுதச் சொல்வானுக.
அதுனால எங்களுக்கு வேலை காலை திருப்பலிக்குப் போறப்ப ஹோலிஃபேமிலி பொண்ணுக சாரை சாரையா போகுங்க. அதைப் பார்க்குறது. திரும்பி போறப்பவும் பார்ப்போம். ரொம்ப கேவலம் சார். பள்ளி வகுப்பறைல இருந்து பாக்குறப்ப க்ரவுண்ட்ல க்ராஸ் ஆகுற பொண்ணுக ஒருத்தி முகமும் தெரியாது. இருந்தாலும் ஆ....னு பாத்து இருக்கோம் சார்.
அந்தத் திருப்பலி எப்படி நடக்கும்னு எனக்குத் தெரியும். கதை அது அல்ல. ஒன்பதாம் வகுப்பில் பள்ளியில் புதியதாய் சேர்ந்த நண்பன் பாலா பத்தாவது படிக்கும்போது விபரீத முயற்சி ஒன்றை எடுத்தான். அது அந்தத் திருப்பலியில் போய் கலந்துகொள்வது.
தண்ணீ குடிக்க, மறைச்சு வாங்கிட்டு வந்த நெல்லிக்காய ஒரு கடி கடிக்க, பி.யி.டி பீரியட்ல பள்ளிக்கூடமே ஃபுட் பால் விளையாட ஒரு சோள தட்டைய வச்சு எறிபந்து விளையாடனுலாம் என்னைய கம்பெனிக்கு கூப்பிட்டவன் இதுக்கும் என்னைய கூப்பிட்டான். எல்லாத்துக்கும் கூட போனவன் இதுக்கு நீ போயிட்டு வா பாலா, நான் வரலனு சொல்லிட்டேன். நம்ம தான் ஆறாப்புல இருந்து இங்க படிக்குறனால நமக்கு விசயம் தெரியும். அதான் போகல. நண்பன் என்னைய வற்புறுத்தி கூப்பிட்டான். நான் வரலனதும் தானா போயிட்டான்.
டிஸ்கி. அவன் போனது பொண்ணுக இருக்காங்க பொழுது போயிரும் இன்னொன்னு அப்படி இந்தத் திருப்பலினா என்ன...அங்க என்ன நடக்கும்னு போய் பாக்க போச்சு பக்கி.
பலி பலி னதும் ஏதோ பாண்டி கோயில் முனிக்கு கடாவ பலி கொடுத்து வேண்டுறதுனு நினைச்சிருப்பான் போல.
அங்க போனா பொம்பள பிள்ளைக எல்லாம் முன்ன போனு சொல்லிட்டு பசங்க லாம் இங்க நில்லுனு பி.யி.டி அந்தோணி சார் வரிசைப் படுத்தி இருக்கார்.
டிஸ்கி: பி.யி.டி அந்தோணி சார் பற்றிய பதிவு ஒண்ணு ரெடியாயிட்டு இருக்கு. அப்புறம் சொல்றேன். சுருக்கமா சொல்லனும்னா மூணு க்ளாஸ் பசங்க பி.யி.டி விளையாடுறப்ப வேற க்ளாஸ் பசங்க எங்கட்ட உங்க பி.யி.டி சார் யாருனு கேட்டா அந்தோணி னு சொன்னா போதும் பக்கத்துல நிக்கவே மாட்டானுக...என்னாஆஆஆ அடி தெரியுமா... அந்த மகா கணம் பொருந்திய அந்தோணி சார் வரிசைல தான் நம்ம பாலா இப்ப.
கிட்டத்தட்ட ஐ.சி.யூ கம் சசி அன்ட் கோ ட்ட சிக்குன ஜெ வாட்டம் அப்பவே சிக்கிருக்கான் பாலா.
முடிச்சு வந்து பாலா என்னைய ஒரு எத்து எத்துனான்...அடப்பாவி தனியா அனுப்பிட்டியேடானு . அவன் சொல்றான். அவன் தனியா நிண்டானாம். அதாவது கிறிஸ்டின் பசங்களுக்கு நடுல கிறிஸ்டின் இல்லாதப் பையனா...
திருப்பலியப்ப திடீருனு பாதிரியார் பூசை ஆரம்பிச்சதும் பக்கத்துல முன்ன பின்ன நிண்ட பசங்க எல்லாம் முழங்கால் போட்டு சாமி கும்பிட ஆரம்பிச்சுட்டானுகளாம். இவன் மட்டும் நிண்டுக்கிட்டு கண்ண மூடிட்டே சாமி கும்பிடானாம். நான் நினைக்கிறேன், அன்னைக்கு மதியம் எங்க சயின்ஸ் வாத்தியார் குண்டுமலை கேக்குற கேள்வில இருந்து தப்பிக்கனும்னு வேண்டிருப்பான் போல. எவனோ பின்னாடி இருந்து அவன் சட்டைய இழுத்துருக்கான். இவன் ச்ச்...போட்டு பின்னாடி திரும்பியிருக்கான். அதாவது தம்பிக்கு வேண்டுதல் அப்ப டிஸ்டர்ப் ஆயிருக்கு..
கண்ண திறந்து பார்த்தா பின்னாடி எல்லாப் பயலும் முழங்கால் போட்டு இருக்கானுக...ஏன்டா முழங்கால் போட்டு இருக்கீங்கனு கேட்டானாம்.
அந்தோணி சார் தூரத்துல இருந்து ஸ்ஸூ..னு கொண்ணுபுடுவேனு கைய காமிச்சாராம்....
இவனும் முழங்கால் போட்டுக்கிட்டானாம். இப்பவும் கண்ண மூடி வேண்டிக்கிட்டானாம். அனேகமா இது இப்ப அந்தோணி சார்ட்ட இருந்து எப்படியாவது தப்பிக்கனும்னு இருக்கும் போல...கர்த்தாவே ஏன் என் நண்பனைச் சோதிக்குற..
கொஞ்ச நேரத்துல பின்னாடி இருந்த இன்னொரு வகுப்புத் தோழன் நெல்சன் இவன் முழங்கால் போட்டு இருந்த விரல மிதிச்சானாம். இவன் ஆ..ஆ..னு கத்தி திரும்பி பாத்தானாம். இப்ப எல்லாப் பயலும் எந்திரிச்சு நிண்டு சாமி கும்பிட்டானுகளாம். இவன் நேரா அந்தோணி சார பாத்தானாம். உக்காந்து என்ன பண்ற ன்ற மாத்ரி கைய காமிச்சாராம். இவன் எந்திரிச்சு கண்ண மூடுறதா வேணாமா நிண்டானாம்.
பக்கத்துல இருந்த எட்டாங்கிளாஸ் பையன்ட்ட அடுத்து முழங்கால் போடுறப்ப சொல்லிட்டு உக்காருனு தன்னோட சீனியாரிட்ட பவர காமிச்சானாம்.
திருப்பலி முடிஞ்சு கலையுறப்ப வேகமா அந்தோணி சார் கண்ணுல படாம் ஓடி வந்தானாம். வந்துட்டு இந்தக் கதைலாம் சொல்லிட்டு ஏன் என்ட சொல்லல..எப்ப உக்காருறானுக எப்ப எந்திரிக்கிறானுகனே தெரியல னான்.
நான் சொன்னேன்...நீ முழங்கால் போடனும்னு அவசியம் இல்ல பாலா...
அதுக்கு அவன் சொன்னான்.." போடா..நீ வேற...கண்ண மூடி திறந்தா எல்லாப் பயலும் உக்காந்துட்டானுக...நானும் ஃபாதரும் தான் சர்ச்ச்க்குள்ள நிண்டுட்டு இருக்கோம். பயமா ஆயிருச்சு..அதான் முழங்கால் போட்டேன்...அந்தோணி வேற என்னையவே பாத்துட்டு இருக்காரு..என்னைய அடையாளம் கண்டாரானு தெரில பழனி...
நான் சிரிச்சேன்...இன்னொரு எத்து எத்துனான்.
அப்பப்ப பாதிரியார் ஒரு பாட்ட சொன்னதும் இவைங்க பூரா பாட்டு பாடுறாய்ங்க டா.. பாட்டு பாடிட்டு அப்பப்ப ஏதோ ஒண்ண வசனமா சொல்றாய்ங்க டா னான்...
அது என்ன வசனம் டா..னு கேட்டேன்..
நான் எங்கடா கேட்டேன்..நான் மாஸ் முழுக்க அந்தோணிய தான் பாத்துட்டு இருந்தேன்.
நீ ஹோலிஃபேமிலி பிள்ளைகள பாக்க போகலையாடா...
டே நீ வேற ஏசு கண்ண குத்தவா...ஏற்கனவே அந்தோணி கண்ண குத்த ரெடியா இருக்காரு...
அன்னைக்கு முழுக்க அதே பேச்சு தான்...
அடுத்த மாசத்துல முத திருப்பலிக்கு போகலாமா பாலானு கூப்பிட்டேன்...ஏசுவ நான் இங்க இருந்தே கும்பிட்டுக்கிறேன்..என்னைய விடுங்கய்யா ....னான்...
கொஞ்ச நாள் கழிச்சு பள்ளிக்கூட மைதானத்துல கிறிஸ்துமஸ் விழாவும் சிறப்புத் திருப்பலியும் நடந்தது. பாதிரியார் மைதானத்துல இருந்த ஸ்டேஜ் ல நிண்டு ப்ரேயர் பண்ண கிறிஸ்டின் பசங்க முன்னாடியும் மத்த பசங்க கொஞ்சம் தள்ளியும் நிண்டு கலந்துக்கிட்டோம். எப்ப முழங்கால் போடனும் எப்ப உக்காரனும்னு பாலா கணக்கு எடுத்தான்...பாத்ரியார் ஒரு வசனத்தைப் பேசியதும் சொல்லக்கூடிய ராகம் என்ன னு கேட்க நான் உக்காந்திருந்தேன்.
அப்பத்தான் அந்தோணி சார் ரவுண்ட் வந்தவர் பாலா எதையோ ஹோம் வொர்க் நோட் எழுதிட்டு இருந்தான். சாரைப் பார்த்ததும் நோட்ட வேகமா மூடுனான்.
மாஸ் கவனிக்காம என்னடா எழுதுறனு கேப்பார்னு நினைச்சோம்.
ஆனா, சத்தம் இல்லாம எதாவது எழுதனும்னா எழுது..னு பாலா வ பார்த்துச் சொல்லிட்டுப் போயிட்டார் அந்தோணி சார்.
முன்னாடி நிண்டுக்கிட்டு இருந்த பசங்க கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலி ஆரம்பிச்ச முதல் பகுதில ராகமா சொன்னாங்க...
" இயேசுவே உமக்குப் புகழ்"

கருத்துகள்
கருத்துரையிடுக