இடுகைகள்

ஜனவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தயவு செய்து ஷீ க்களின் மீது நடக்காதீர்கள்.....

படம்
அப்ப நான் மேலப்பொன்னகரம் எட்டாவது தெருல இருந்தேன். இந்த அப்ப னு ஆரம்பிக்கிறப்பவே அது மொக்க ஃப்ளாஷ் பேக் னு யாரும் தெறிச்சு ஓட வேணாம். பத்து வரில நிகழ்காலத்துக்கு வந்துருவேன்...எவ்ளோ எழுத வேண்டியதா இருக்கிறது. உங்களை என் கதைய படிக்க வைக்க..ஒரே குஷ்டமப்பா.... ஏழாவதோ எட்டாவதோ படிச்சுட்டு இருந்தேன். மாடில வீடு. மூணு நாளே ஆன மிக்கி மவுஸ் படம் போட்ட மஞ்சள் கலர் செருப்பு எனக்கும் எங்க அண்ணனுக்கும். வெளிய போட்டு இருந்தோம். எவனோ லவட்டிட்டு போயிட்டான். (லவட்டிட்டு னா..ஆட்டைய போட்டானு அர்த்தம்.. அதுக்கும்அர்த்தம் கேக்காதீங்க) திருடிட்டு போன பிரகஸ்பதி  பக்கி         என் இடது கால் செருப்பையும் எங்க அண்ணனோட இடது கால் செருப்பையும் எடுத்துட்டு போயிருச்சு . சம்பவம் நடந்தது ஞாயித்துக்கிழமை. அப்பவே ஒரு தாத்தா காலத்து டெக்னிக்க எங்க அம்மா கண்டுபிடிச்சு மீதி இருக்குற வலது கால் செருப்ப வெளிய போட்டு வை. திருட்டுப்பயல நம்ம லவட்டிருவோம் ( அப்படினா அமுக்கிருவோம்னு அர்த்தம்...)னு வச்சோம். அடுத்தச் சம்பவம் அடுத்த ஞாயித்துக்கிழமை பட்டப் பகலுல அந்த வலது சோடி செருப்ப லவட்டிட்டு போயிட்டான் அந்த பிரிலியண்ட்

பின்வரிசை மன்றாடல்

உங்கள் பின்வரிசையில் இருப்பவருக்குத் திரை சரியாகத் தெரியவில்லை .. உங்கள் பின்வரிசையில் வருபவருக்கு சாமி சிலை கூட சரியாகத் தெரியவில்லை தான். உங்கள் சாளரக்கதவை மூடிய பிறகு உங்கள் பின்னிருக்கைகாரருக்குக் காற்று கூட வரவில்லை தான். உங்கள் அமர்ந்துபோன வண்டியை நகர்த்தாமல் உங்கள் பின்னிருப்பவருக்கு வழியில்லை தான்.. எப்பொழுதும் நீங்கள் ஒதுங்கிக்கொள்ள கேட்கப்படுகிறீர்கள்.. உங்களை ஒதுக்க நீங்களே எத்தனிக்கையில் உங்கள் உயரமோ உங்கள் ஆக்கிரமிப்போ ஏதோ ஒன்றில் தடுமாறி திரும்பிப் பார்க்கிறீர்கள்.... அசாதாரணங்கள் சூழ்ந்து நிற்கும் உங்களின் பின்வரிசையில் நெளிய நெளியக் காத்திருக்கிறது உங்களின் சாதாரணம்.. நீங்கள் எப்பொழுதும் வளர்ந்துவிட்ட ஒரு தடித்த மரக்கிளையின் தண்டைப் போல் நிற்கிறீர்கள்.. பச்சையங்கள் அற்ற வெற்று உலர் பட்டைகளுடன் நிமிர்ந்து நின்ற உங்களுக்கு ஒரு பின்வரிசை தேவைப்படுகிறது