தயவு செய்து ஷீ க்களின் மீது நடக்காதீர்கள்.....
அப்ப நான் மேலப்பொன்னகரம் எட்டாவது தெருல இருந்தேன். இந்த அப்ப னு ஆரம்பிக்கிறப்பவே அது மொக்க ஃப்ளாஷ் பேக் னு யாரும் தெறிச்சு ஓட வேணாம். பத்து வரில நிகழ்காலத்துக்கு வந்துருவேன்...எவ்ளோ எழுத வேண்டியதா இருக்கிறது. உங்களை என் கதைய படிக்க வைக்க..ஒரே குஷ்டமப்பா....
ஏழாவதோ எட்டாவதோ படிச்சுட்டு இருந்தேன். மாடில வீடு. மூணு நாளே ஆன மிக்கி மவுஸ் படம் போட்ட மஞ்சள் கலர் செருப்பு எனக்கும் எங்க அண்ணனுக்கும். வெளிய போட்டு இருந்தோம். எவனோ லவட்டிட்டு போயிட்டான். (லவட்டிட்டு னா..ஆட்டைய போட்டானு அர்த்தம்.. அதுக்கும்அர்த்தம் கேக்காதீங்க)
திருடிட்டு போன பிரகஸ்பதி பக்கி என் இடது கால் செருப்பையும் எங்க அண்ணனோட இடது கால் செருப்பையும் எடுத்துட்டு போயிருச்சு . சம்பவம் நடந்தது ஞாயித்துக்கிழமை.
அப்பவே ஒரு தாத்தா காலத்து டெக்னிக்க எங்க அம்மா கண்டுபிடிச்சு மீதி இருக்குற வலது கால் செருப்ப வெளிய போட்டு வை. திருட்டுப்பயல நம்ம லவட்டிருவோம் ( அப்படினா அமுக்கிருவோம்னு அர்த்தம்...)னு வச்சோம்.
அடுத்தச் சம்பவம் அடுத்த ஞாயித்துக்கிழமை பட்டப் பகலுல அந்த வலது சோடி செருப்ப லவட்டிட்டு போயிட்டான் அந்த பிரிலியண்ட் தீஃப்.
எத்தனை தடவை சொல்றது செருப்ப உள்ள போடுனு வெளிய வெளிய போடுறீங்க னு அன்னைக்குத் தான் திட்டு விழுந்தது. இப்ப ஏன் இந்தக் கதை சொல்றேன்னா செருப்பு விசயத்துல எப்பவுமே சென்சிட்டிவா இருக்குறவன் இந்த அடியேன்.
ஹவாய் செப்பல் வந்த புதுசுல பிரிட்டோ ஸ்கூல் க்ரவுண்ட்ல நெருஞ்சி முள் இருக்கும்னு க்ளாஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி சோளத்தட்டைய எறிஞ்சு விளையாண்ட பல போராளிகளுல நானும் ஒருத்தன். செருப்பு வாங்குன மூணாவது நாளே பிஞ்சு போயிருச்சு. பிஞ்ச பாகத்து ரப்பருல ஒரு ஊக்க குத்தி அந்தக் காதுக்கும் இந்தக் காதுக்கும் ஊக்க பாலமா போட்டு நடந்து செருப்ப தேச்சக் கதைலாம் உண்டு. சமயத்துல அந்த ஊக்கு வாய பிளந்து என் காலுல ஏறி நானும் வாயப் பிளந்த கதைலாம் உண்டு. இருந்தாலும் வீட்ல சொல்ல மாட்டேனே..
செருப்ப வாங்கிக் கொடுத்த ஒரு வாரத்துல செருப்ப பிய்க்கிறியானு அடிப்பாங்க ..அடிச்சாலும் பரவால..திட்டுவாங்க. எப்படியும் வாயப் பிளக்கப்போறோம். வர இரத்தம் காலுல வரட்டும். காதுல வர வேணாம்னு ஊக்குச் செருப்ப தேச்சுருக்கேன்.
பதினொண்ணு பன்னிரெண்டு வந்தப்ப ஷீ போடனும்னு ஆசை. பாட்ஷா படத்துல பாட்ஷா ரஜினிய காமிக்குறதுக்கு முன்னாடி அந்தச் சத்தமும் அந்த ஷூவும் தான் கண்ணுல நிண்டுச்சு. ஒரு ப்ளாட்ஃபார்ம் கடைல ஒரு மொக்க ஷூவா வாங்கி ஊண்டி ஊண்டி நடந்து அந்தச் சத்தம் வருதானு பாக்க நாலு நாள் கூட ஆகல..பெஞ்ச ஒரு மழைல நனைஞ்சு ஷூ மேல வரி வரியா உறிஞ்சிருச்சு..ஒரு கட்டத்துல ஆனந்த்ராஜ் மாணிக்கம் ரஜினிய கட்டி வச்சு உறிக்குற சீன்ல எங்கப்பாவும் நானும் தெரிஞ்சோம். நல்ல வேல அப்படி ஏதும் நடக்கல.
அந்தக் கால கட்டத்துல செருப்பிற்கு எவ்வளவு பணம் ஒதுக்குறோம் என்பதற்கும் அதை எவ்வளவு நாள் பயன்படுத்துறோம் என்பதற்கும் ஒரு சொல்லப்படாத பொருளாதார நேர்தகவு இருக்கும். ஒரு பணத்தைச் செல்வழித்து வாங்குன பொருள் அதனோட ஒரிஜினல் வாழ்வு நாளை அடையாமல் நாம் அதே பொருளுக்கு மறுபடியும் அடுத்தக் காசை நீட்டுறது வீண் செலவுனு எனக்குப் புரியவைக்க முயற்சி எடுக்கப்பட்ட காலகட்டம் அது.
மெடிக்கல் ரெப் ஆனதும் ஷீ ன்றது கட்டாயம். முந்திலாம் ஒரு விளம்பரம் வரும். அது ஒரு கைலி விளம்பரம். இவர்களுக்கு மட்டும் அணியத் தடை இல்லை என்றால்னு ஒரு குரல் வந்து ஒரு ட்ராஃபிக் போலீஸ் கைலி கட்டி சிக்னல் போடுவார். ஒரு காலேஜ் புரோஃபசர் கைலி கட்டி காலேஜ்க்குப் போவார். அதுமாதிரி மெடிக்கல் ரெப்க்கு மட்டும் தடை இல்லனு ஷீ வ எடுத்துட்டானுகனா நான்லாம் வெறுங்காலுல நடந்து வேலைக்குப் போயிருப்பேன். இப்பப் பாருங்க ஷீ போட்டுத்தான் டாக்டர பாக்கப்போறேன். போற வழில ரேஷன் கடைல சீனி எப்ப போடுறானு பார்த்து கேட்டுட்டுப் போனு எங்க அம்மா சொல்வாங்க. ரொம்ப சின்சியரா இன் பண்ணி ஷீ போட்டு சமயத்துல டை லாம் கட்டி கூட்டத்துக்குள போனா ஏதோ ரெய்டு போலனு ஒதுங்கி வழி விடுவானுக...தொண்டைய கர கரனு தேச்சுக்கிட்டு...'அண்ணே..அண்ணே...சீனி எப்ப ண்ணே போடுவீங்கனு கேக்கனும். இந்தக் கொடுமைலாம் தேவையா....
வலுக்கட்டாயமா ஷீ வாங்க வேண்டிய காலம் அது. ஸ்கூல் படிச்சப்ப அந்த பாட்ஷா ஷீ பிஞ்சதுல இருந்து தரமானதா பிராண்ட் ஷீ வாங்கனும்னு முடிவுல இருந்தனால பேட்டா ஷீ தேடி போனேன்.
கி.பி. 2002 அந்த வருடம். அப்ப அந்த ஷோ ரூம்ல இருந்ததுலேயே கம்மியான விலை எதுனு கேட்டேன். வேலைக்குப் போகுற ஃபார்மல் ஷீ அப்பவே அது 699 ஓவாய். நான் சேருற வேலையோட சம்பளம் 2000 ரூபாய். ஒரு மாசம் கழிச்சு வாங்கப்போற சம்பளத்துல சொழையா 35 சதவீதம் என் காலுல போட்டு மிதிக்கனும் அதுவும் இன்னைக்குல இருந்து. வாங்குனேன். அதுக்கு அடுத்த ஷீல இருந்து இப்ப வரை என் உழைப்புல தான் ஷீ வாங்குறேன். எங்க அப்பாட்ட ஷீக்குனு காசு வாங்கல. ஆனாலும் அப்ப வாங்குன 699 ஓவா ஷீ எனக்கு மிகவும் பாரமான ஒன்று.
வேலைக்கு அப்ப M80 வண்டி வச்சிருப்பேன். அதை ஸ்டார்ட் எடுக்க ஷீ வ கழட்டிட்டு ஸ்டார்ட் எடுத்துட்டு அப்புறம் போடுவேன். ஏன்னா சைக்கிள் மிதிச்சு செருப்ப பிச்ச பழைய பாடம் தான். அப்படி பொத்தி பொத்தி பாதுகாத்தும் வாரத்துல ஆறு நாளும் போடனும்ன்றனால அந்த ஷீ ஒரு வருஷம் தான் தாங்குச்சு. ஒரு கட்டத்துல அந்த ஷீவோட அடிப்பாகம் பாதி பிஞ்சு வெயிலுல நடக்க காலே சுடுற அளவுக்கு பிஞ்சதுக்கு அப்புறம் அடுத்த ஷீ வாங்குனேன். எங்க அப்பா காசுல வாங்குன ஷீ வையே அப்படி பொத்தி வச்சிருந்தேனா இப்ப வாங்குனது என் காசுல. விடுவேனா...
கிட்டத்தட்ட இப்பவும் என் சம்பளத்துல 30 சதவீதம். ஒரு இரவு மழை பெஞ்சு ரோட்டுல தண்ணி..வெளியூர் போயிட்டு பஸ்ல வந்து இறங்குனா தண்ணி ரோட்டுல ஆறா ஓடுது. ஓரமா நிண்டு ஷீவ கழட்டி சாக்ஸ கழட்டி வெறுங்காலுல நடந்தேன். தெருவே விகாரமா பாத்துச்சு. இதுக்குலாம் பாத்தா அடுத்த நாள் ஷீக்கு 750 ஓவாக்கு எங்க போக.
இப்ப 2017-18. நிறைய மருத்துவமனைகளில் சுத்தம் வேண்டி செருப்ப ஷீ வ வெளிய கழட்டிப்போட்டு போவோம். திரும்பி வந்துப் பார்த்தா மேப் ரீதியா சொல்லனும்னா, வலது ஷீ பாகிஸ்தான்லயும், இடது ஷீ இலங்கையுலயும் கடக்கும். நான் போட்டுப் போனது ஆஸ்திரேலியாவா இருக்கும். இந்தியானு தப்பா நினைக்காதீங்க. உங்க கற்பனை வீச்சுத் திறனைக்காட்டிலும் நம்மூர்காரைங்களோட செருப்பு வீச்சுத் திறன் ஜாஸ்தி.
சமயத்துல நம்ம ஷீ மேல ஏறி நிப்பானுக. எல்லாரும் செருப்புல தான ஏறி நிக்குறோம்னு நினைக்காதீங்க மக்களே. வெளியே கழட்டிபோடுற ஷீ ல மிதிச்சு ஏறி நிண்டு அசால்ட்டா போவானுக.
ஒருவாட்டி கீழக்கரைல ஒரு மருத்துவமனை. வெளிய ஷீ வ கழட்டிப்போட்டு மருத்துவருக்காக உக்காந்திருக்கேன்.
ஒரு ஃபோன் வந்ததுனு வெளிய வந்தா என் ஒரு ஷீ வேற எங்கேயோ கடக்கு. அதுல ஒரு ஆள் ஏறி நிண்டு தான் பொண்டாட்டிட்ட பேசிட்டு இருக்காரு.
நான் அவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரோட பையன் என்னோட இன்னொரு ஷீ க்குள்ள கால விட்டு இழுத்து இழுத்து நடந்தான்.
சரி சின்னப் பையன் தான விடலாம்னு பார்த்தா அவன் ஒரு கட்டத்துல காலுக்குள மாட்டி காலாலேயே தூக்கிஎறிஞ்சான். அது மேப் ல இந்தியால இருந்து மலேசியா ல போய் விழுந்துச்சு. அவங்க அப்பா...டேய்..னு ஒரு சத்தம் கொடுத்தார். அவன் மலேசியா வந்து என் ஷீவ கையால எடுத்தான். அவங்க அப்பா..உடனே...டேய்..செருப்ப கைல எடுக்காத...காலால எத்தி விளையாடுனு சொன்னாரு...
ங்கொய்யாலே .. ஒரு குடும்பமே என் ஷீ வ கதறக் கதறக் கற்பழிக்கப்பாக்குதுனு....
நான் போய் டாக்டர பாக்கலாட்டியும் பரவால ஷீ வ போட்டுக்கிட்டு வெளிய போய் நிண்டுக்கிட்டேன்.
தூத்துக்குடில ஒருவாட்டி பைக் ல வந்த ஒருவர் வண்டிய உள்ள நிப்பாட்டுறேனு என் ஷீ மேல ஏத்தி அப்படியே நிப்பாட்டி சைட் ஸ்டான்ட் போட்டு போனார். எல்லாருக்கும் எல்லாம் முக்கியம் தான். ஆனா ஒவ்வொரு மெடிக்கல் ரெப்க்கும் அவனோட் ஷீ ன்றது அவனோட சம்பளத்துல ஒரு குறிப்பிட்ட சதவீதம். போற வழில அது பிஞ்சிருச்சுனா அவன் தைக்குற வரை வேலைக்குப் போக முடியாது. அப்படி போகனும்னா அது ஒரு மானப் பிரச்சினைன்றதை விட சில விதிமீறல் வகையறா. அடுத்த ஷீ வாங்கனும்னா அதுக்குனு ஒரு தொகை செலவு அவன் பட்ஜெட் திடீருனு ஒதுக்கனும்.
ஒரு கார்ட்டூன் மதன் வரைஞ்சதா இல்ல யார் வரைஞ்சதுனு தெரியல. ஞாபகம் இருக்கு. கோயில் கர்ப்பகிரகத்துல நிண்டு சாமி கும்பிடுற ஒரு ஆளோட உடம்பு கை கூப்பி எல்லாம் சாமிய பாத்து இருக்கும். நைஸா ஒரு கால் மட்டும் நீண்டு வெளிய இருக்குற அவனோட செப்பல் மேல இருக்கும். எனக்கு அது தான் ஞாபகத்துக்கு வரும். இந்த மாதிரி சில சமயம் என் ஷீ மேல ஒரு கால் வச்சுக்கிட்டே டாக்டருக்கு காத்திருக்கனும்னு...
தயவு செய்து புல்தரையில் நடக்காதீர்கள் னு போர்ட் பாத்து இருக்கேன்.
தயவு செய்து ஷீ க்களின் மீது நடக்காதீர்கள் னு போர்ட் வைக்கனும்யா.. அப்படி போர்ட் வைக்குற வரை இந்தக் கட்டுரைக்கு இதையே தலைப்பா வச்சுக்கிறேன்.

கருத்துகள்
கருத்துரையிடுக