இடுகைகள்

ஏப்ரல், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நானுனக்கு...

பலூன் களைத் தவறவிட்டு பின் ஓடிவரும் குழந்தையின் கண்களைப் போல சுண்டப்பட்ட நாணயத்தை விரல்களுக்குள் ஒளித்துக்கொண்டு பூவா தலையா எனப் பார்க்கும் விழிகளைப் போல திரை விழுந்த பார்வையோடு மங்கலாகத் தெரியும் தொலைதூரப் பேருந்தின் முகப்பு எழுத்தைத் தெள்ளத் தெளிவாய் தேடிப் பார்க்கும் மூதாட்டியின் பார்வைத் தேடல் போல... எல்லா முகங்களிலும் ப்ரியமானவர்களின் முகம் தெரியும்படியாய் காத்திருக்கும் விழிகளைப் போல அப்பொழுது தான் பிரசவித்தத் தன் குழந்தை கண் திறந்துப் பார்ப்பதைப் பார்க்கும் தந்தையின் கண்களைப் போல... முதல் முறையாக புகைவண்டியைப் பிரமிக்கும் சிறுமியொருத்தின் ஆச்சர்யப் பார்வைகளைப் போல வெறுமையின் நாளை முடிக்கும் தருவாயில் கை முழுக்க யாசகம் பெறும் ஒரு யாசகக்காரனின் ஈரக் கண்களைப் போல... பரபரக்கும் சாலையொன்றைக் கை பிடித்து கடக்கும் அறிமுகமற்ற தாத்தா ஒருவரின் நன்றி நவிழும் பார்

குழந்தைகளும் பாலியல் கொடுமைகளும்

வாட்ஸப்பில் ஒரு வீடியோ வருகிறது. அறுபது வயது மதிக்கத்தக்க முதியவன் ஒருவன் நான்கு அல்லது மூன்று வயது பெண் குழந்தையுடன் ஒரு புதருக்குள் இருப்பதும், அக்குழந்தையை நிர்வாணப்படுத்தி அவனும் உடைகளை கழற்றி உடலுறவிற்குத் தயாராகும் தருணம் அங்கு இருப்பவர்கள் வீடியோ சகிதம் சுற்றி வளைத்து வருகிறார்கள். அக்கிழவன் அக்குழந்தையை போ என்றதும் அது உடையை மாட்டிக்கொண்டு ஓடுகிறது. அவனை அடித்து இழுத்து வருகிறார்கள். சமூக வலைத் தளங்கள் மூலமாக இப்பொழுது இது மாதிரியான குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. உணர்வுச் சலனம் என்றால் என்ன என்றால் இது போன்ற விஷயங்களைப் பார்க்கும்பொழுதும் கேட்கும்பொழுதும் ஏற்படும் உணர்வுகளின் குழப்பம் தான். எரிச்சல் அடைவதா, கோபப்படுவதா இல்லை இது போன்ற சமூகத்தில் தான் நாமும் நம் குழந்தைகளுடன் வாழப்போகிறோம் என்று பயப்படுவதா என்று தெரியாமல் நிற்கிறோம் அல்லவா அது தான். ஒரு குழந்தை என்றும் பாராமல் அதன் மீது தன் வக்கிர எண்ணங்களைத் திணிக்கும் இந்த வன்மக்காரர்களை என்ன செய்வது. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தான் இது போன்ற அத்துமீறல்கள்