உண்ணாமேட்...
சரஸ்வதி பூஜை டைம்ல பல்லடத்துல ஒரு கல்யாணம். எங்க பெரியப்பா பொண்ணு , அக்கா மகனுக்கு. முதல் நாளே அங்க போய் அம்மா அண்ணன் அண்ணினு லக்கேஜ்களை இறக்கிவிட்டுட்டு அப்படியே கோயம்புத்தூர்ல இருக்குற ஒரு ஃப்ரண்ட் வீட்டுல போயி தங்கிட்டா என்னனு யோசிச்சேன். எனக்குச் சொந்தக்காரைங்க மத்தில கொஞ்சம் நல்ல பேரு. ஆள் அண்டா பிராணி அப்புறம் மானே தேனே னு போட்டு நம்மள புகழ்வாய்ங்க. அதுலாம் இருக்கட்டும். நானும் கல்யாணத்திற்கு வரேனு நம்ம வீட்ல சொல்வோம்னு சொன்னேன். பயபுள்ளைக நம்ப மாட்டுறானுக. டேய் சத்தியமா நானும் சொந்தக்காரன் தான்யா கல்யாணத்திற்கு வரேன் யா னு சொல்லி பேக்கேஜ்ல் ஜாயின் பண்ணிக்கிட்டேன். கல்யாணத்திற்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி எதுக்கும் ஃப்ரண்ட் கிட்ட கன்ஃபர்ம் பண்ணிக்குவோம்னு சொல்லி வச்சிருந்தேன். அந்த நாள் வந்தது.; ஒட்டு மொத்த குடும்பமும் இவன் வருவானானு இருந்தது போயி என் தம்பி வருவான் என் தம்பி வருவானு எங்க அண்ணன் பி ஆர் ஓ வேல பாக்க பல்லடத்துல இருந்து எங்க அக்கா ஃபோன்.. தம்பி ..நீ வர்வேல... என்னக்கா இப்புடி கேட்டுட்ட..என் ஃப்ரண்ட்டட்ட கேக்கனும்... நான் எப்படிக்கா சொல்றதுனு ரோபோ சங்கர் வாய்