இடுகைகள்

ஜனவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டிவிஎஸ் சேம்ப்

மாப்ள விஷயம் தெரியுமா (இப்படி உரிமையா கேக்குறவன் என் நண்பன் கணேஷ்குமார். இப்பொழுது தொடர்பில் இல்லை. இப்பொழுதுனா இப்பொழுது. ஏன் என்றால் அப்படி அவன் கேட்டபொழுது வருடம் கி.பி 1994. ) சொல்லுடா... அவங்க அப்பா வண்டி வாங்கிருக்காங்களாம். என்ன வண்டி தெரியுஉஉஉமாஆஆஆஆ னு பெருமையா கேட்டான். அப்ப டிவிஎஸ் சேம்ப் பயங்கர ஃபேமஸ். என் சீனியர் உதயச்சந்திரன் அதுல வருவான். ஒரு நாள் அவன் வண்டி ஸ்டார்ட் பண்ணப்ப ஹாரன் அடிச்சேன். சின்னப்பிள்ளைத்தனமா இருக்குல. அப்பலாம் மோட்டர்வண்டிகளை தெரிஞ்சவங்க ஓட்டுறது கம்மி. அப்படி யாராவது இருந்தா அவங்கட்ட அனுமதி வாங்கி ஒரு தடவை ஹாரன் அடிப்பேன். இப்ப கணேஷ்குமார் அப்பா வாங்கிருக்கார். டே..சூப்பருரா...என்ன கலர் சில்வரா.. (சில்வர் தான் உதயச் சந்திரனோடது) இல்லடா ப்ளு... டே சூப்பர்றா..(சூப்பர் டா வத்தான் நாக்கு வளையாம சூப்பர்ர்றா...னு வர்து) இப்ப நான் பக்கத்து வீட்டு நண்பன்ட்ட சொன்னேன். அவன் பேரும் கணேஷ். கணேஷ்னா வெறும் கணேஷ். கணேஷ்ன்ற பேர சுருக்கமுடியல. அவன் என்னுல பாதி அப்ப. ஒரு வயசு ஜுனியர். எது பண்ணாலும் சேர்ந்துதான். பட்டம் விடுறது, பம்பரம் சுத்துறது,

புஜ்ஜிமா அப்பளம்

காட்சி 1 தலைமைச் செயலகத்தில் உள்துறை அமைச்சரின் அறை. வந்த ஃபோனில் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியானார் அமைச்சர். என்னய்யா சொல்ற..என்று ஃபோனில் கேட்டார். அதற்கு அந்த முனையில் என்ன சொன்னார்கள் என்று அருகில் இருந்த உதவியாளர்க்குக் கூட கேட்கவில்லை. பெரிய பிரச்சினையாகுமேயா..என்றார். சரி விடு பாத்துக்கலாம். அப்பத்தான் இவைங்களும் அடங்குவாய்ங்க என்று சமாளித்து விட்டு அலைபேசியைத் துண்டித்தார். என்னங்கய்யா ஆச்சு என்றார் உதவியாளர் ஒரு சம்பவம் யா என்றார். ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி பிரஸ்ஸர் மாத்திரை ஒன்றை விழுங்குவதற்கும் சுகாதாரத்துறையிலிருந்து ஃபோன் வந்தது. என்னங்க விசயம் வந்ததா என்றார். அந்தப்பக்கம் பேசியது இந்த முறை உதவியாளருக்கும் கேட்டது. பேசியதைக் கேட்க உதவியாளருக்கும் வியர்த்தது. இப்படி ஒரு சம்பவமா , இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்க முடியாது நடக்கவும் வாய்ப்பில்லாதச் சம்பவமென அவர் உறைந்து கிடந்தார். கடைசியாக அந்த முனையில் பேசியவர் விடுங்க சார் அப்பத்தான் இவைங்களும் அடங்குவாய்ங்க. இந்தச் சம்பவத்துல ஏதாவது சிகிச்சைனு ஏதாச்சும் சம்பவம் நடந்துச்சுனா நம்ம மச்சினன் மருத்து