இடுகைகள்

ஜூன், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தீர்த்தங்கர் ராய் எழுதிய கிழக்கிந்திய கம்பெனி

தீர்த்தங்கர் ராய் எழுதி எஸ்.க்ருஷணன் தமிழில் மொழிபெயர்த்த கிழக்கிந்திய கம்பெனி நூலை முன்வைத்து.... கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கம் வளர்ந்துப் பிரவாகம் எடுத்தல் பிறகு சரிவைச் சந்தித்தல் என நூல் கூறும் தொனி அருமை. நவீன காலத்திற்கு முந்தைய பண்டைய கால வர்த்தகத்தைப் புரிந்துகொள்வதற்கு பலவிதமான வரலாற்றுத் தரவுகளுடன் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது. முதல் நாற்பத்தைந்து பக்கங்கள் அணிந்துரை முன்னுரை என இருந்தாலும் இப்புத்தகத்தைத் தொடர்ந்து படிக்க அடிப்படையாய் சில விசயங்கள் நாம் கற்றுக்கொண்டுதான் படிக்க முடியும் என்பதற்காக  அத்தனைப் பக்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆங்கிலேயர்கள் பதினாறாம் நூற்றாண்டில் கடல் கடந்து வணிகம் செய்யும் நிலையில் இருந்தார்கள். பிரிட்டனில் தனிப்பட்ட வணிகர்கள் சிலர் தன்னிச்சையாக மேற்கு ஆசியா இந்தியா சீனா என்று கடல் வணிகத்தில் இருந்தார்கள். அமெரிக்காவில் இருந்த ஐபீரியப் பேரரசுவும் ஸ்பானியர்களும் போர்ச்சுக்கீசியர்களும் ஆங்கிலேயர்களின் போட்டியாளர்கள். கிழக்கு மேற்கு என ஸ்பானியர்களும் போர்ச்சுக்கீசியர்களும் கடல்வழி வாணிபத்தின்பொருட்டு கடல்வழியை ஆக்கிரமித்துவைத்திருந்தனர்.

நீலாஸ் லன்ச்

காலை ஏழரை மணிக்கு ஒரு ஃபோன். இன்னைக்குனு பாத்து காலை சாப்பாடு அந்நேரம் நடந்துட்டு இருந்தது. ஃபோன் பண்ண நண்பன் என்ன அதுக்குள்ள சாப்டுறியானு கேட்டான். அவன் கேட்டது கரெக்ட் தான். நான் அதுக்குள்ள சாப்புடுற ஆளுமில்ல. நான் கூட அப்படி கேட்டுருக்கேன் சில பேரை. மதுரைல டிவிஎஸ் டீலர் சத்யஜோதி னு அப்பாடக்கர் கம்பெனி இருக்கு. அந்த டீலர்ட்ட தான் டிவிஎஸ் செண்ட்ரா பைக் எடுத்திருந்தேன். அவைங்கட்டதான் சர்வீஸும் விடப்போவேன். அங்க இருக்குறவைங்களுக்கு அவைங்க டீலர்ட்ட வேலை பாக்கல டிவிஎஸ் கம்பெனில தான் வேல பாக்குறோம்னு நினைப்ப எவனோ ஆழ் மனசுல புதைச்சுவச்சுட்டாஙைக. சர்வீஸ் விட 12 மணிக்கு போனா..அவைங்களுக்கு அது லன்ச் டைம். டான்னு 12க்குலாம் சாப்டுறாஙைகளே...இவைங்களுக்கு மூணு மணிக்கு பசிக்காதானுலாம் யோசிச்சிருக்கேன். எனக்கு அப்படி டைம் க்கு சாப்பிட வாய்ப்பு கிடைச்சிருக்கானு பாத்தா கண்ண கட்டுது. நான் முதுகலை வேதியியல் படிக்கிறப்ப ப்ராக்டிகல் டைம் எங்களுக்கு காலை ஏழு ல இருந்து மதியம் மூணு வரை. காலை சாப்பாடும் கோயிந்தா மதியம் சாப்பாடும் கோயிந்தா. டிஃபன் பாக்ஸ் கொண்டுவந்தால் ஒரு கை சாப்பிடனும் ஒரு கை ர