நீலாஸ் லன்ச்

காலை ஏழரை மணிக்கு ஒரு ஃபோன்.
இன்னைக்குனு பாத்து காலை சாப்பாடு அந்நேரம் நடந்துட்டு இருந்தது.
ஃபோன் பண்ண நண்பன் என்ன அதுக்குள்ள சாப்டுறியானு கேட்டான்.
அவன் கேட்டது கரெக்ட் தான். நான் அதுக்குள்ள சாப்புடுற ஆளுமில்ல.
நான் கூட அப்படி கேட்டுருக்கேன் சில பேரை.
மதுரைல டிவிஎஸ் டீலர் சத்யஜோதி னு அப்பாடக்கர் கம்பெனி இருக்கு. அந்த டீலர்ட்ட தான் டிவிஎஸ் செண்ட்ரா பைக் எடுத்திருந்தேன்.
அவைங்கட்டதான் சர்வீஸும் விடப்போவேன்.
அங்க இருக்குறவைங்களுக்கு அவைங்க டீலர்ட்ட வேலை பாக்கல டிவிஎஸ் கம்பெனில தான் வேல பாக்குறோம்னு நினைப்ப எவனோ ஆழ் மனசுல புதைச்சுவச்சுட்டாஙைக.
சர்வீஸ் விட 12 மணிக்கு போனா..அவைங்களுக்கு அது லன்ச் டைம்.
டான்னு 12க்குலாம் சாப்டுறாஙைகளே...இவைங்களுக்கு மூணு மணிக்கு பசிக்காதானுலாம் யோசிச்சிருக்கேன்.
எனக்கு அப்படி டைம் க்கு சாப்பிட வாய்ப்பு கிடைச்சிருக்கானு பாத்தா கண்ண கட்டுது.
நான் முதுகலை வேதியியல் படிக்கிறப்ப ப்ராக்டிகல் டைம் எங்களுக்கு காலை ஏழு ல இருந்து மதியம் மூணு வரை.
காலை சாப்பாடும் கோயிந்தா மதியம் சாப்பாடும் கோயிந்தா.
டிஃபன் பாக்ஸ் கொண்டுவந்தால் ஒரு கை சாப்பிடனும் ஒரு கை ரீடிங் எடுக்கனும்னு புரோஃபஸர் சொன்னார்.
என்னையலாம் கேக்கவே வேணாம். சோத்துடப்பால ரீடிஙைகயும் வாயில அமிலத்தையும் ஊத்திற கோக்மாக் ஆளு. அதுனால அதுக்கு பயந்துட்டே சாப்டுறது இல்ல.
அப்பப்ப ஹாஸ்டல் பொண்ணுங்க ப்ராடிகல் டைம்ல சாப்பாடா ஓ...காட் னு ரெண்டு கையையும் காதுல வச்சு ஷாக் ஆகுங்க. ஏன்னா டைம் வேஸ்ட் ஆகுமாம். அடங்கொண்ணியா.....
லன்ச் வெளிய போகமுடியாதுனு ஹாஸ்டல் மெஸ்காரைங்க அவங்களுக்கு சாப்பாட பொட்டலம் பண்ணி கொடுத்துருவாஙைக.
இந்தப் பிள்ளைக அத வாங்கிவச்சுட்டு சாப்டாம ப்ராக்டிகல் செய்யுறது மனசுல அழுத்தும். ஒருவாட்டி கேட்டதுக்கு கூட படிச்ச ரேவதின்ற பொண்ணு ப்ராக்டிகல் செய்ய இவ்ளோ வேல இருக்குலப்பா...சாப்ட மனசே வரலப்பானு சொல்ல அப்ப சாப்பாட்டக் கொடுப்பா னு அவ போட்ட பா  வா அவளுக்கே போட்டு பாப்பாட்ட இருந்து பொட்டலத்த வாங்கிட்டு வந்துட்டான் நண்பன் ஒருத்தன்.
டானு 12.30  மணியடிச்சா சாப்பாடு வரும். இவளுக சாப்பாடா னு காத பொத்த ,  டானுனு நாங்க பொட்டலத்த அவுத்துருவோம்.
அதன் பின்னாடி மெடிக்கல் ரெப் வேலை. எப்ப வேலை முடியும் னே தெரியாது.
மதியம் 12 தானே ஆகுதுனு டாக்டர பாக்க வெயிட் பண்ணுவோம். இந்தா பாத்துருவார் அந்தா பாத்ருவாருனு வெளிய நிக்குற சிஸ்டர்ஸ வர நோயாளிகள ஃபுல்லா அனுப்ப பல நேரங்களில் மணி மூணாயிறும்.
இடைல நோயாளி இருக்காங்களே னு நம்ம சாப்பிட நகர்ந்திருப்போம் அந்த நேரம் பாத்து டாக்டர் ரெப்களை வரச்சொல்லு னு பாத்திருப்பார். நம்ம சாப்ட்டு சாவுகாசமா வந்தா ஒரு பேட்ச் ரெப் பாத்துட்டார் அடுத்து நைட்டு ஓ.பி க்கு அப்புறம் வானு றுவாஙைக.
இதுனாலேயே பல இடங்களில் சாப்பாடு தள்ளி போயிரும்.
நான் அப்ப வேலைக்குப் போயி ஆறு மாசம் கூட ஆகல. மதியம் மூணு மணிக்கு சாப்டுறது நைட்டு பதினொறு மணிக்கு மேல சாப்டுறது னு பிஸியா ஓடிட்டு இருக்கேன்.
அழகர்கோயில் கோட்டைசுவர் ஒட்டியே ஒத்தையடி பாதை ஒண்ணு போகும். அதைப்பிடிச்சே ஒட்டியபடியே போனா கரெக்டா அழகர்கோயில் மலை பின்னாடி போய் விடும். அங்க பல ஏக்கர்ல ஓரு ஆயுர்வேதிக் மருத்துவர் உள்நோயாளி வசதியோட சேர்ந்து பெரிய ஹாஸ்பிடல் கட்டிருப்பார். நிறைய நோயாளிகள் அவரைப் பார்க்க வெளியூரிலிருந்துலாம் வருவாங்க.
பன்னிரெண்டு மணிக்கு  போனா சமயத்துல நாலாயிரும்.. ஒரு டீ குடிக்க கூட பக்கத்துல கடை இருக்காது. அப்படி வரனும்னா கோயில் வாசல் தான் வரனும். நாலு கிமீ பிடிக்கும் அது.
ஒருவாட்டி நாலுமணியாக மழ பிடிக்க  மருத்துவரே உள்ளே தங்குற நோயாளிகளுக்கு சமைக்க கிட்சன் வச்சிருந்தார். ஒரு கேண்டினும் இருந்தது. அன்னைக்கு வந்த ரெப் க எல்லாருக்கும்  சோறும் போட்டார்.
இன்னொருவாட்டி அவரைப் பாக்கப்போயிருந்தப்ப என் நாடி பிடிச்சுப் பாத்து உனக்கு அல்சர் இருக்கானு கேட்டார். இல்லனு சொன்னேன்.
வாயு பிடிப்பு இருக்கானு கேட்டார்.
இல்லனு சொன்னேன்.
உனக்கு வரப்போகுது.
ஒழுங்கா டைம்க்கு சாப்டமாட்டபோல னு சொல்லி இனி டைம்க்கு சாப்டுனு மாத்திரை வேற கொடுத்தார்.
அவர் ஒரு தீர்க்கதரிசி. அவர் சொல்லி ஆறுமாசத்துல வயிறுவலி வர ஆரம்பிச்சது.
லேட்டா சாப்ட்டா பசிச்சு சாப்டா பசியாறி சாப்டானு..பல நேரங்களில் அதை உணர்ந்தேன்.
ஆனால் என் வேலை அப்படித்தான் சமயத்தில்.
காரைக்குடியில் தங்கி வேலை பார்க்கும் நிரல் எனக்கு.
மதுரையிலிருந்து பைக்கிலதான் போவேன்.
மேலூரில் வேலை முடிய 12 ஆகும். கீழவளவில் இரண்டாகும். கீழவளவிற்கும் திருப்பத்தூருக்கும் 25 கிமீ தொலைவு. இடையில் ஹோட்டல்கள் இருக்காது. அங்கு செல்வதற்குள் பசி ஏற்பட்டு தீர்ந்துபோய் அமிலம் சுரந்து மிதப்பாய் இருக்கும்.. ரெண்டும்கெட்டான் டைம் இந்த மூன்றிலிருந்நு நான்கு வரை.
ஆனது ஆகுது. இன்னும் 25 கிமீ அழுத்துனா காரைக்குடி போயிரலாம்னு நாலு மணிக்கு காரைக்குடி போய் ஒரு தோசை சாப்பிடுவேன்.
மூன்று வருடத்திற்கும் மேலா இதான் ஷெட்யூல்.
சில சமயங்களில் வேறுவகையான அனுபவம் கிடைக்கும்.
காரைக்குடியில் காலை ஏழு மணிக்கெல்லாம் ஃபர்ஸ்ட் போலிஸ்பிட் பிரஸிடெண்டில் மூன்று இட்லி ஒரு வடைகளை பிச்சு வாயில போட்டு பஸ் ஏறுவோம். தேவகோட்டை 20கிமீ. அங்கு இறங்கி அங்கிருந்து இன்னொரு இராமேஸ்வரம் போகும் பேருந்தில் ஏறி புளியால் னு 25 கிமீல ஒரு ஊருக்குப் போய் ஒரு மருத்துவமனை பார்ப்போம். பார்த்து மறுபடியும் திரும்பி தேவகோட்டை வருவோம். வந்து சிவகங்கை செல்லும் பஸ்ஸில் ஏறி பாவனாங்கோட்டை என்ற குக்கிராமம்20 கிமீ. அங்கு ஒரு மருத்துவமனையைப் பார்த்துவிட்டு மறுமடியும் தேவகோட்டை வந்தால் அடிக்கும் வெயிலுக்கும் மோசமான ரோட்டில் பயணம் செய்ததற்கும் காலையில் சாப்டோமா சாப்டலையானு தோணும்.
இதில் மெடிக்கல் ரெப்புகள் வாயை நன்றாகப் பழக்கப்படுத்தி வைத்திருப்பார்கள். இந்த ஊர் இந்த மெஸ் என அத்துபடியாயிருக்கும்.
தேவகோட்டையில் நீலாஸ் லன்ச் ஹோம் என்று ஒரு மெஸ். லன்ச் க்கு ஃபேமஸ். தரையில் கூட அமர பரிமாறும் இடம் அது.
அங்கு லன்ச் மட்டுமே உண்டு.
ஒருமுறை நானும் என் ரெப் நண்பரும் மேற்சொன்ன நிகழ்ச்சிநிரலை அதான் பிரசிடெணாட் இட்லி வடை தேவகோட்டை- புளியால் -தேவகோட்டை -பாவனாங்கோட்டை- தேவகோட்டை வேலை களை பதினோரு மணிக்கெல்லாம் முடித்துவிட்டோம்.
எனக்கு பசி...இதைச் சொன்னா அந்த ஆளு என்ன அதுக்குள பசிக்குதா. உனக்குனா வயிறா வண்ணாந்தாழியானு கேப்பானேனு அமைதியா நடந்துவந்தேன். பத்து நிமிஷத்துல  அந்தாளே..பழனி பசிக்குது..சாப்டுறுவோமா னு கேட்டான்.
ஐயா சாமினு ரெண்டு பேரும் நீலாஸ் லன்ச் ஹோம் நோக்கி நடந்தா அவைங்க வேலி போட்ட மரக் கதவை வச்சு சாச்சு அடைச்சிருக்காஙைக. அதாவது அவன் இன்னும் ரெடி பண்ணல னு அர்த்தம்.
என்னங்க இது அவன் இன்னும் கடையவே ஓபன் பண்ணலனு கேட்டேன்.
தேவகோட்டை போயி டாக்டர பாக்குறியோ இல்லையோ நீலாஸ்ல அந்த குவளைச் சாப்பாட்ட சாப்டுறுனு சீனியர்ஸ் சொன்னது அந்நியன் படத்துல விக்ரமுக்கு அவன் பாட்டி கருடபுராணத்த ஓதுன எஃபெக்ட்ல இருந்தது. அதுனால
நாங்க விடல எதிர்த்தாப்புல இருந்த கூர செட் போட்ட ஒரு டீ கடைல தஞ்சம் புகுந்து பேப்பர கையில வச்சு படிக்க ஆரம்பிச்சோம். மணி மெல்ல 11.55 ஆனதும் கடை வேலையாள் வேலிய ஓபன் பண்ணான்..
நான் மெதுவா அண்ணே வாங்க திறந்துட்டானு சொன்னேன்.
அவர் உடனே இரு தம்பி முதல எடுத்ததும் போனா நம்ம ரெப் னு அந்த ஆட்களுக்குலாம் தெரியும். அதுக்குள திண்ண வந்துட்டாஙைகனு பாப்பாஙைக...பத்தாகுறைக்கு கையில இருக்குற பைல கம்பெனி லோகோ லாம் இருக்கும். கம்பெனி பேர் கெட்டுரும். இப்படியே வெயிட் பண்ணுவோம்...சாப்ட்டு ரெண்டு இலை விழுகட்டும். அப்புறமா போவோம்னு அமுக்கிட்டார்.
அங்க சாப்டுறவங்கதான் இலைய எடுத்து வெளியபோட்டு வெளிய கை கழுவனும். கரெக்டா ரெண்டு இலை விழுந்தனும் ஊள்ள போனாம். அப்ப மணி 12.15. நான் பசிச்சு கரெக்ட் டைம் க்கு சாப்ட்ட வெகு சில பொழுதுல அதுவும் ஒண்ணு.
நான் மேனஜரா புரோமோட் ஆனதும் மாசமாசம் தூத்துக்குடி போகனும். அடிக்கடி வெளிய சாப்பிடுற நாள நான் சில ஷெட்யூல் வச்சிருப்பேன். ஒவ்வோரு ஊரிலையும் ஒரு செட்டப் ஹோட்டல் இருக்கும். அங்கதான் சாப்பிடுவேன். என் வயிறு என் உரிமைனு ஒரு ஃபார்முலா போட்டு அந்தந்த ஹோட்டல்ல தான் சாப்பிடுவேன்.
அப்படி தூத்துக்குடில இரவு வேலை முடிய கடைசி டாக்டர். மணி எட்டரை. என்னடா வேலை வேகமா முடியுதேனு போனா நாலு பேஷண்ட். அவங்கள டாக்டர் பாத்து முடிக்க மணி ஒன்பதரை. நர்ஸ்கள் போயி கண்க்கு கொடுக்க மணி பத்து. சரி ரெப்களை பாத்திருவாருனு வெயிட் பண்ணா உள்நோயாளிகளைப் பார்க்கப் போயிட்டாருனு சொன்னாங்க. சரினு காத்திருந்தா டாக்டர் சாப்பிட மாடிக்கு போயிட்டார் வெயிட் பண்ணுங்கனு சொல்ல வெளிய வந்தா ரெப் வாங்க சார் நம்மளும் சாப்டுறுவோம்னார்.
நான் வழக்கமா சாப்பிடுற ஹோட்டல் தூரமேனு யோசிக்குறதுக்குள்ள பக்கத்துல இருந்த மெஸ்ஸைக் காண்பித்தார். ஒரு கணவன் மனைவி வச்சு நடத்துனாங்க. கிளினிக்கலிருந்து நான்காவது கட்டடம். நான் கவனிச்சதே இல்லையேனு சொல்ல வாங்க சார் ரேட்டும் கம்மினு ரெப் அணத்த உள்ளே போயிட்டேன்.
நம்ம வழக்கமான மெனு ரெண்டு இட்லி ஒரு தோசை.
இட்லி சொல்ல பாதி மஞ்சள் கலர்ல இட்லி வந்தது.
உருளைக்கிழங்கு பெருசு பெருசா வெட்டிப்போட்ட சாம்பார்(ஏன் இவ்வளவு விளக்கமா சொல்றேன்னா உருளைக்கிழங்கை சாம்பார் என்ன எம்ஜிஆர் வினிதா ரஞ்சிதா புளிக்கொழம்புனு எதுல உருட்டி போட்டாலும் பிடிக்காது)
வெங்காயம் சட்ணி...அதை அவைங்க வெங்காயச்சட்ணினு சொல்ல...
டைம்க்கு சாப்டுறேன்ற பேர்ல நைட்டு அஞ்சுவாட்டி வாந்தி. புளிச்சமாவால எட்டு வருசத்துக்கு முன்னாடியே பாதிக்கப்பட்ட ஒரு சீனியரு நானு.
அடுத்த மாசம் அதே டாக்டர். மணி ஒன்பது. பத்து பேஷன்ட் இருந்தாங்க. ரெப் வாங்கசார்  டைம் வேஸ்ட் பண்ணாம டைம் க்கு சாப்டுறுவோம்...பக்கத்துலதான் மெஸ் னு சொன்னான்....
ஐயா சாமி...டைம்க்கு சாப்டுறது வேற எங்க சாப்பிடனும்ன்றது வேற. நீ போய் சாப்டு...பசிச்சாலும் நான் லேட்டா சாப்ட்டுக்கிறேனு அவனை அனுப்பிட்டேன்..
பசிச்சா சாப்பிட வழி இருக்கனும். சாப்பிட டைம் இருக்கிறப்ப பசி இருக்கனும். எதுக்கு இந்த பன்ச்ன்னா....
இப்ப பசிக்குது. நிப்பாட்டிக்கிறேன்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....