இடுகைகள்

செப்டம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"நோய்களின் தாய்" நூலை முன்வைத்து...

எழுத்தாளர் டாக்டர்.மணிவண்ணன் எழுதிய "நோய்களின் தாய்" என்ற நூலை முன்வைத்து. இரண்டு வருடங்களுக்கு முன் என் உடல் எடை 86 இப்பொழுது 75 சராசரியாக. இந்த இரண்டு வருடங்களில் நானாக எடுத்துக்கொண்ட அல்லது ஏற்படுத்திக்கொண்ட ஆர்வம் மற்றும் விளைவாக இதைச் சொல்வேன். முகநூலில் "சைரன்" என்ற தொடரும் "சைரன்- பக்க விளைவுகளும்" என்ற தொடரும் இந்த காலகட்டத்தில் தான் எழுதினேன். இவற்றை நோக்கி என்னைத் தள்ளியது இரண்டு நிகழ்வுகள். முதல் நிகழ்வாய், என் அம்மா எப்பொழுதும் பார்க்கும் ஒரு அனுபவம் பெற்ற ஒரு மூத்த மருத்துவரிடம் மேல்வயிறு வலி என்று தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் போக அது சரியாகவில்லை. ஒரு பெண் மருத்துவரைப் பார்த்தால் கொஞ்சம் நன்றாக இருக்குமென நான் சொல்ல, மருத்துவரை மாற்ற என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் நிறைய யோசனை. அதனை மீறி டாக்டர். நல்லினி அருள் அவர்களிடம் அழைத்துச்செல்ல , அது வரை அல்சர் என நம்பிக்கொண்டிருந்த எங்களுக்கு அது அல்சர் இல்லை என்றும் , மருத்துவர் எடுத்த கிரியாட்டினின் ஆய்வில் 4 ல் இருந்தது (இருக்க வேண்டியது ஒன்றுக்கும் குறைவு) உடனடியாக ஒரு சிறுநீரக சிறப்பு நிப

ஃபாசிசமும் மருத்துவர்களும்

நேற்று ஒரு மருத்துவர் , அரசு மருத்துவமனையில் வேலைப்பளு தாங்கமுடியாமல் தற்கொலை செய்துள்ளார். அரசு மருத்துவர்களுக்கு இருக்கும் பணிச்சுமை வெளியே தெரிவதில்லை. அதை விடுத்து பொத்தம்பொதுவாய் எல்லா மருத்துவர்களுக்கும் இருக்கும் அழுத்தம் வெளியே தெரிவதில்லை. ஒரு மருத்துவர் மருத்துவம் படித்து முதுகலை சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப் படித்து வெளியே வந்து சொந்தமாய் க்ளினிக் நடத்த குறைந்தது 12 வருடங்கள் ஆகின்றன. இதில் நீட் என்ற தடைக்கல்லைத் தாண்டி வரவேண்டும். குடும்ப வறுமை அவர்களை அனுமதிக்க வேண்டும். இதில் கடந்த ஜூன் மாதத்தில் க்ளினிக் எஸ்டபிளிஸ்மெண்ட் ஆக்ட் என நம் எடப்பாடி அரசு ஒரு சட்டம் கொண்டு வந்து கிளினிக்குகளை 5000 கட்டி பதிந்துகொள்ள வேண்டும் என்று கூறியது. இது எதற்காக என்றால் கஜானாவில் பணம் இல்லை என்பதற்காகத்தானே ஒழிய வேறு எந்த ஹைகோர்ட்டும் இல்லை. ஒரு மருத்துவன் வெளியே வரும்பொழுது பதிய வேண்டும். பிறகு நர்சிங் ஹோம் கட்ட பதிய வேண்டும். ஆப்ரேஷன் தியேட்டர் வைக்க பதிய வேண்டும். பிறகும் இதை ப் பதிய வேண்டும். கேட்டால் போலி மருத்துவர்களைப் பிடிக்கப்போகிறார்களாம். இல்லாவிட்டால் தெரியாதாம். விட்டுவிடு