லைஃப் இஸ் கோயிங்க் ஆன்...
ப்ரவீனுக்கு பர்சேஸ் வரவேண்டும் என்று வரவில்லை. ஏதோ ஒரு அழுத்தம். வந்துவிட்டான். நண்பர்கள் இல்லாமல் இப்படி அவன் மால் போன்ற இடங்களுக்கு வருவதில்லை. கடைசியாக அவனுக்குப் பிடித்த கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு நண்பர்களை அழைத்த போது யாரும் வரமுடியவில்லை. முதல் நாளே பார்த்தே ஆகவேண்டும் எனத் தனியாளாகப் போனான். டிக்கெட் கவுண்டரில் இருந்தவர் கூட என்ன சார் தனியா எப்படி படம் பார்க்குறீங்க என்றார். அவனுக்கு அது கூச்சத்தை அதிகப்படுத்தியது. அவன் தனியாகப் படம் பார்ப்பது அது தான் முதல் தடவையாக இருந்தது. இப்பொழுது ஒரு சட்டை வாங்கலாம் என்று மால் ன் நான்காவது மாடியில் இருக்கும் ஒரு ஏசி கடைக்குள் தனியாகத்தான் வந்திருக்கிறான். இரண்டு கட்டம் போட்ட சட்டைகள் எடுத்துத் தனியாக வைத்திருக்கிறான். அவனுக்குத் துணி எடுக்க உதவியாக வந்த ஷோரூமின் உதவியாளர் பையன், அந்தச் சட்டைகள் கேஷ்வல் டைப் ஸ்லிம் ஃபிட் என்றும் லேடிஸ் கூட இதைப்போடலாம் எனவும் கூறியிருந்தான். ஸ்லிம் ஃபிட்களில் ப்ரவீனுக்கு விருப்பம் இல்லை தான். இருந்தாலும் ஒரு சட்டையை எடுத்துக்கொண்டு ட்ரையல் ரூம் உள்ளே சென்று போட்டுப்பார்த்து விட்டு வெளியே வந்