விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 4
விற்பனைப் பிரதிநிதியின் தனிக்குறிப்புகள் 4 கல்லூரி முடித்ததும் என்ன வேலைக்குப்போகலாம் என்றுலாம் யோசிக்கவில்லை, இரண்டு தீர்மானங்கள். ஏதாவது பள்ளிக்கு , என் ஆசையான ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிப்பது, இரண்டாவதாக எந்த வேலை கிடைத்தாலும் செய்வது. மெடிக்கல் ரெப் வேலைக்கு இன்டர்வ்யூ வந்தது. எந்த பஸ் வருகிறதோ அதில் ஏறிவிடவேண்டும் என்ற மனநிலை தான். சரியான பஸ் சரியான நேரத்தில் தான் ஏறியிருக்கிறோம் என்பதை உணர சில ஆண்டுகள் பிடித்தாலும் கூட , ஆரம்பகட்டம் படு மோசமானவை. அப்பா அம்மா வின் முகத்திற்காகப் பெண் கொடுக்கலாம், ஆனால் பையன் தான் ரெப்பு வேல பாக்குறான்...என்று இழுத்துப்பேசியவர் என் கண்களை நேருக்கு நேராய் பார்த்திருந்தார். என் மீதும் நான் பார்க்கும் வேலை மீதும் அவர் வைத்திருந்த அந்த அவமரியாதை பார்வையை மறக்கமுடியாது. முதல் மாதம் திண்டுக்கல் அவுட்ஸ்டேஷன் வொர்க். மதுரையிலிருந்து திண்டுக்கலுக்குப் பஸ் ஏறி, அங்கு வாடகை சைக்கிள் எடுத்து, ஓட்டி வேலை பார்க்கவேண்டும். முதல் நாள் பேருந்து நிலையத்திலிருந்து மாலை ஒரு மருத்துவரைப் பார்க்க வியர்த்து விறுவிறுத்துப் போய்க்கொண்டிருக்கிறேன். என்னுடன் முதுகலை ஒன