கொரோனா தடுப்பூசியும் மேய்தலும்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சில உரையாடல்களும் கேள்விகளும் நம்பிக்கைகளும் உலா வருகின்றன. அவற்றில் பதிவர் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து பிரித்து மேய ஆசைப்படுகிறார். மேய்தல் ஒன்று: கொரோனா தடுப்பூசி உண்மையில் வேலை செய்யுமா, இந்தியாவில் தடுப்பூசி ஒரு விற்பனை தந்திரம் தானே. பதில்: கடவுள் இல்லைனு சொல்லல. இருந்தா நல்லாருக்கும்னு தான சொல்றோம் என்ற ரீதியில் தான் பதில் சொல்லமுடியும். கடவுளை நம்பினால் ஆத்திகர். நம்பவில்லை என்றால் நாத்திகர். உங்கள் அறிவு சொல்வதைக் கேளுங்கள் அவ்வளவே. மேய்தல் இரண்டு: தடுப்பூசி ஒரு டோஸ் போட்டுக்கொண்டுவிட்டால் போதும். மாஸ்க் தேவையில்லை. சமூக இடைவெளி தேவையில்லை. கை கழுவ தேவையில்லை அப்படித்தானே. பதில்: தடுப்பூசி முதல் டோஸ் போட்டு அடுத்த டோஸ் (கோவிஷீல்ட்) க்கு 45 நாட்கள் கழித்துத்தான் தடுப்பூசி வேலை செய்து , ஆண்ட்டிபாடிகள் உருவாக வாய்ப்பு இருக்கிறதாம். 28 நாட்கள் என்று சொன்னவர்கள் 45 என்று மாற்றியிருக்கிறார்கள். உருவாகும் வீதத்தின் அடிப்படையில் தான் சொல்கிறார்கள். எப்படிப்பார்த்தாலும் 28 நாட்கள் கழித்துத்தான் ஆண்ட்டிபாடி உருவாகும். அப்படி உருவாகும் நோய் எதிர்ப்புத்த