கோவிட் இரண்டாம் அலையும் மனிதர்களும்
கோவிட் இரண்டாம் அலையும் மனிதர்களும்: பழனிக்குமார்.மதுரை. கொரோனா முதல் அலையின் போது இவ்வளவு தாக்கம் இல்லை என்பது எல்லாரும் அறிந்ததே. முதல் அலையில் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் அறுபது வயதைக் கடந்தவர்கள் அல்லது சர்க்கரை மற்றும் இருதய போன்ற பாதிப்பு இருந்தவர்களை வேகமாகத் தாக்கியது. ஆனால் இரண்டாம் அலையில் வயது வித்தியாசம் இன்றி தாக்கிக்கொண்டிருக்கிறது. இதை மக்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். போன முறை பரவிய வைரஸின் ந்யூக்ளியஸில் மாற்றம் ஏற்பட்டு வந்திருக்கும் புதிய வைரஸின் படியில் தாக்குதல் தீவிரமாக இருக்கிறது. அறிகுறிகளும் வித்தியாசமாக வருகின்றன. கொரோனா வைரஸ் சுவாசப்பாதையில் தன்னைத் தகவமைத்துக்கொள்வதால் தான் மூச்சுப்பிரச்சினைகள் வருகின்றன. ஆனால் இது மட்டுமே அறிகுறியாய் இப்பொழுது இல்லை. வயிற்றாழை (டயேரியா) , காய்ச்சல், முதுகுவலி ( பேக் பெயின்) கை கால்கள் வலி, உடல் அசதி, இருமல், சளி, பிறகு கடந்த வருடம் அனைவருக்கும் பரிச்சயமான அறிகுறிகளான மூச்சுவிட சிரமம் இருத்தல், வாசம் அறியாமல் இருத்தல், சுவை அறியாமல இருத்தல் இன்ன பிற. இவை தான் அறிகுறிகள். இவற்றில் எதுவுமே இல்லாமலும் இருக்கலாம்