கொரொனாவிற்கு முன் - கொரோனாவிற்குப் பின் என மக்களின் வாழ்க்கை முறை மாறியிருக்கிறது. வாழ்க்கைத் தரமும் மாறியிருக்கிறது. சில உளவியல் மாற்றமுறைகளும் நடந்திருக்கின்றன . மக்களுக்கு அதீத பயமும் அதே நேரத்தில் தேவையான பதட்டம் இல்லாமையும்(வெற்று தைரியம்) சமமாகப் பரவியுள்ளன. மக்களுக்குச் சமூக இடைவெளி என்பது புதியதொரு முறையாக இருக்கிறது. கூண்டுக்குள் வாழ்ந்து பழகிய இந்தியர்களுக்கு இது புது வகையான உளவியல் சிக்கலைத் தருகிறது. மனிதன் ஒரு சமூகப் பிராணி என்பதற்கேற்ப நாம் தான் வாழ்ந்து இருக்கிறோம். ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்து பழக்கப்பட்டு திடீரென தள்ளி நிற்கவேண்டும் வீட்டிற்குள் இருக்கவேண்டும் , இத்தனை மணி நேரத்திற்குள் வேலைகளை முடிக்கவேண்டும், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுக்குள் ஆட்படவேண்டும் என்று வாழ்விற்குள் வந்துவிழும் படிப்பினைகள் புதிய மனதைத் தருகின்றன. எப்பொழுதும் வாயால் அளவளாவி பேசிப் பழகிய நாம், திடீரென மாஸ்க் போட்டுப் பழகக் கடினப்படுகிறோம். மக்கள் உளவியல் சிக்கலுக்கு ஆளாவதற்கு இதுபோன்ற புதிய பழக்கங்களுக்கு ஆட்படாமல் இருப்பதும் ஒரு காரணம். மருத்துவமனைகளுக்குள்ளும், மருத்துவர்களுடனும
இடுகைகள்
ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
ஷேர்னி திரைப்படத்தை முன் வைத்து...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஷேர்னி திரைப்படத்தை முன் வைத்து... ஃபேஸ்புக்கில் அனைவரும் உருட்டி விளையாடி உடைக்கப்பட்ட ஷேர்னி ( AMAZON PRIME OTT) படத்தைப் பற்றி எழுதவேண்டுமா என்று தான் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தேன். இருந்தாலும் என் சார் சில நண்பர்களுக்காக... இணையதளத்தில் ஒரு படம் வெளிவரும்பொழுது அதீத நேர்மறை விளம்பரங்களும் அதீத எதிர்மறை விளம்பரங்களும் விமர்சனமாக வருவது இப்பொழுதெல்லாம் தவிர்க்கமுடியாதவையாக இருக்கின்றன. அந்த வகையில் 'ஷேர்னி' நான் பார்த்தவரையில், இணைய தளத்தில் விமர்சனங்களைப் படித்தவரையில் அதீதமாகக் கட்டமைக்கப்பட்டப் படம். இருந்தாலும் படத்தின் மீது இல்லாவிட்டாலும் படத்தின் திரைக்கதை இலாகா மீதும் இயக்குநர் மீதும் எனக்குச் சில கவலைகள் அல்லது எதிர்பார்ப்புகளை இழந்த ஏமாற்றம் உண்டு. ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இந்தப் படத்தை அணுகுபவர்களுக்கு, இந்தப் படத்தில் ஒளிப்பதிவும் , அரசியல்வாதிசார் சுவாரஸ்யங்களும் ஒரு பெண் அதிகாரி மீதான இரக்கமும் வந்து சேரும். அவர்கள் அதை அனுபவிப்பார்கள். மத்தியப் பிரதேசக் காடுகளுக்குள் சுற்றித்திரிந்த கேமராக்காரருக்கு இன்னும் எத்தனையோ இயற்கை காட்சிகளைக் காட்ட வாய்ப்புகள்