தொ.பரமசிவன் எழுதிய "பண்பாட்டு அசைவுகள்" நூலை முன்வைத்து..
தொ.பரமசிவன் எழுதிய "பண்பாட்டு அசைவுகள்" நூலை முன்வைத்து.. சில நாட்களுக்கு முன்னதாக ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் புத்தகம் வாசிப்பாளர்கள் மத்தியில் ஒரு ரீல் பிரபலமாகக் கண்ணில் பட்டது. அதில் எழுத்தாளர். எஸ்.ரா அவர்கள் " அறியப்படாத தமிழகம்" நூலைப் பரிந்துரைத்திருப்பார். அப்படியான "அறியப்படாத தமிழகம்" மற்றும் " தெய்வங்களும் சமூக மரபுகளும்" என்ற இரண்டு நூல்களின் தொகுப்பே இந்த " பண்பாட்டு அசைவுகள்". (காலச்சுவடு பதிப்பகம்) இப்புத்தகம் எழுதிய தொ.ப என்று அன்புடன் அழைக்கப்படும் தொ.பரமசிவன் ஒரு பண்பாட்டு ஆய்வாளர். தமிழ்ப் பேராசிரியர். தொல்லியல் ஆய்வுகளின் கண் நாட்டம் கொண்டவர். அந்த நோக்கில் " பண்பாட்டு அசைவுகள்" பல ஆய்வு தரவுகளைத் தருகிறது. தமிழ் குறித்து ஆரம்பிக்கும் தொ.ப, ஒரு மழையைப் போல, ஓடுகின்ற நதியைப் போல, தமிழ்- தமிழர்- தமிழர் உணவு - உணர்வும்,உப்பும்- உணவும் நம்பிக்கையும்- சோறு விற்றல்- பிச்சை- தெங்கும், தேங்காயும்- உரலும் , உலக்கையும்- சிறுதெய்வங்களுக்கான உணவு என்று ஒன்றோடன்று ஒன்று ஒட்டி இழுத்துச்செல்கிறார். வேலை பார்ப்பவர்களுக்கு