Think and grow rich புத்தகத்தை முன்வைத்து..
நெப்போலியன் ஹில் எழுதிய " Think and grow rich " புத்தகத்தை முன் வைத்து...
தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகங்கள், உளவியல்சார் புத்தகங்கள், வணிக மேலாண்மை புத்தகங்கள் இப்படி சில சுவாரஸ்ய வகைகள் உண்டு. இப்படியான வகைமைகளில் நிதிமேலாண்மை சார்ந்த புத்தக வகைகள் உண்டு.
Think and grow rich புத்தகம் அதிக நிதி பெருக்க எப்படியெல்லாம் தன்னைத் தகவமைத்துக்கொள்ளலாம் எனக் கூறுகிறது.
இப்புத்தகம் எழுதிய நெப்போலியன் ஹில் வாழ்க்கையில் வெற்றிகளின் மூலம் அதிக பணம் சம்பாதித்தவர்களைத் தேடி கலந்துரையாடி அவர்கள் கடந்து வந்த பாதையை, அதன் மூலம் அவர்கள் பணம் அவர்களை நோக்கி வரவைத்த ஆய்வை மேற்கொண்டு எழுதியதே இப்புத்தகம்.
அமெரிக்க நவீன பொருளாதார வாழ்வு இயக்கவியலை நோக்கி இந்தியா நகர ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. எந்தப் பொருளை நாம் நுகரவேண்டுமென உலக பொருளாதாரமயமாக்கல் நிறுவன நாடுகள் முடிவு செய்கின்றன.
உணவு மாறுகிறது.
பழக்கம் மாறுகிறது.
கலாச்சாரம் மாறுகிறது.
ஒரு சமூக மாற்றம் பொருளாதார இயலோடு இணைந்து பயணிக்கிறது.
எங்குபார்த்தாலும் உளவியல், தொழில்சார் மேலாண்மை இயல் மேலோங்கி இருக்கிறது.
தன்னம்பிக்கை பேச்சாளர்கள், மோட்டிவேஷன் குருக்கள், பிசினஸ் குருக்கள், என் எல் பி க்கள் என மக்களை உற்சாகப்படுத்த , முனைப்பாய் இயங்கவைங்க தொழில் பழகுகிறார்கள்.
அமெரிக்காவில் life coach தொழில் கல்லா கட்டும் பணியாக மாறி, அது உலகம் முழுக்க பரவ ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவிலும் life coach லேபிள் ஒரு பெருமிதத்தையும் ஒரு eye blink designation ஆகவும், நல்ல பொருள் ஈட்டும் தொழிலாகவும் மாறியுள்ளது.
இந்தத் தொழில்சார் மோட்டிவேஷன் குருக்கள் இப்பொழுது ஓயாமல் உரைக்கக்கூடிய ,
நேர்மறையான மனநிலையைத் தக்கவைப்பது,
தினந்தோறும் நடந்தவிசயங்களை எழுதி வையுங்கள் எனச் சொல்வது,
டாக்ஸிக் ஆட்களைத் தூரமாக வையுங்கள் என்பது,
உங்கள் இலக்கை , இலட்சியத்தை ஒரு பேப்பரில் எழுதி கண்ணாடியில் ஒட்டு, தினம் பார்க்கும் இடத்தில் ஒட்டி அதை தினமும் வாசி என்பது,
நேர மேலாண்மையில் to do list எழுதுவது
இதற்கெல்லாம் அடிப்படை சில புத்தகங்கள் தான். அதில் ஒன்று think and grow rich.
புத்தகத்தைப் படிக்கும் போது இது தான் நமக்குத் தெரியுமே என்று நினைப்பு வரலாம். நமக்குச் சொன்னவர்கள் இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே சொல்லியிருக்கலாம். காரணம் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு 1930 களில்.
நெப்போலியன் ஹில் நேர்காணலுக்கு எடுத்துக்கொண்ட வெற்றியாளர்கள் ஹென்றி ஃபோர்டு, தாமஸ் ஆல்வா எடிசன் போன்றோர்.
ஒரு புத்தகத்தைப் படிக்கும்போதே அது எழுதப்பட்ட ஆண்டு, தேசம், கலாச்சாரப் பின்னணியையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
இப்புத்தகம் எழுதப்பட்ட போது அவருடைய சமகாலத்திய சிந்தனையாளர்களின் கலந்துரையாடல் அது சார்ந்த தத்துவங்களை முன்வைக்கிறார். அதையெல்லாம் முன்வைத்து பார்த்தால் இப்புத்தகத்தின் பிரம்மாண்டம் உணரப்படும்.
இதற்கு முன் நான் வாசித்த stephen Covey புத்தகம் சமகாலத்திய தத்துவியலோடு பொருளாதார இயக்கவியலோடு பொருந்தலாம்.
ஆனால் அடிப்படை அவர் காலத்தில் புழங்கப்பட்ட தத்துவம். நெப்போலியன் ஹில் முன்வைக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கான தகவமைப்புகள் இப்பொழுதும் சிலருக்குப் பொருந்துகிறதென்றால் அது தான் அப்புத்தகத்தின் வெற்றி.
தொடர் வாசிப்பு இருப்பவர்கள், இதுமாதிரியான புத்தகங்களை வாசித்தால் அவர்களே லைஃப் கோச்சாக, மோட்டிவேஷன் குரு க்களாக மாறிவிடலாம்.
எந்தளவு வாசிக்கிறோம் என்பது அல்ல செய்தி...எதை உள்வாங்குகிறோம் என்பதுதான் சாரம்.
Think and grow rich வாசிக்கலாம். தெரிந்த விசயங்களை நுண்ணோக்கி மூலம் அலசுகிறது.
Read and Grow rich .
,டிஸ்கி:
புத்தக வாசிப்பனுபவம் இரண்டு வகை.
ஒன்று புத்தகத்தை வாசித்து அதன் சாரத்தை எழுதுவது.
இரண்டு, புத்தகத்தை முன்வைத்து வாசிப்பனுபவத்தை எழுதுவது.அதன்மூலம் வாசிப்பாளனுக்குத் தோன்றுவதை எழுதுவது. இந்தக் கட்டுரை, இந்த இரண்டாம் வகைமை.
கருத்துகள்
கருத்துரையிடுக