நிறுவு - 2
பொதுவாக தலைமைப்பண்பு என்பது ஏதோ ஒரு பயிற்சிக்கூடத்தில் சேர்ந்து பயில வேண்டியது போல் நம்மில் நிறைய பேர் நினைக்கின்றனர் . அப்படியல்ல . பொறுமை , ஆர்வம் , சகிப்புத்தன்மை , சோர்விலா முயற்சி இவை இருந்தாலே போதும் . ஒரு செயலைச் செய்ய வைப்பதற்கு நாம் அதை செய்து காட்டவேண்டும் . அனைவருக்கும் தெரிந்த ஒரு கதை இருக்கிறது . சோழர்கள் மீது பாண்டியர்கள் படையெடுத்த சமயம் . பாண்டியர்களின் படை முன்னேறிக்கொண்டிருந்தது . சோழ வீரர்கள் பெரும்பான்மையானோர் வீழ்த்தப்பட்டிருந்தனர் . சிலர் சிறைபிடிக்கப்பட்டனர் . படை சிதறியிருந்தது . மீதியிருந்த கால்வாசி வீரர்களும் மனதால் சோர்வடைந்திருந்தனர் . காயம் காரணமாகவும் , தன்னம்பிக்கை அற்ற காரணத்தினாலும் தோல்வி உறுதி என நம்பியிருந்தனர் . இந்நேரத்தில் இவ்விசயம் சோழ மன்னனுக்குச் சென்றது . அப்போதைய மன்னன் விஜயாலயச் சோழன் . அந்நேரத்தில் விஜயாலயச் சோழன் வயதானவன் . போரில் அதிகம் ஈடுபட்டு கால்களை இழந்தவன் . மன்னன் போர்க்களத்திற்கு வந்தான் . சோர்வடைந்த வீரர்களைப் பார்த்தான் ... நான்கு வீரர்களை அ