நனை...
எங்க பார்த்தாலும் மழையாம். ஆனால் நியூஸ்ல காமிக்கிறமாதிரி மதுரைக்கு அவ்வளவு பெரிய மழை இல்லைதான். இந்தச் சென்னைல மழை பெஞ்சதும் பெஞ்சது எல்லாப் பக்கமும் அதான் செய்தி. டிவிலயும் அதைத்தான் காமிக்குறான். பேப்பர்லயும் அதைத்தான் போடுறான். சரினு ஃபேஸ்புக் வந்தா இங்கேயும் இதான். இவைங்க காமிக்கிறத பார்த்தா டிவி பார்த்துட்டு இருக்குற எனக்கே மழைல நனைஞ்ச மாதிரி இருக்கு.. மழையில் நனைதல்ன்றது ஒரு வரம். அது ஒரு ஜென் நிலை. காலைல ஆபிஸுக்குப் போயிட்டு சாயங்காலம் வீடு திரும்புற நேரம் பார்த்து மழைனு அப்படியே சிலையா நிக்குறத் தொழில் என்னுடையது இல்லை. மார்க்கெட்டிங். முடிஞ்சவரை மட்டுமில்ல...முடியாதவரை கூட ஓடிட்டே இருக்கனும். ஆனா மழைல நனையனும்னா எனக்கு அது தொழில் இல்லை. மகிழ்ச்சி. வேலைக்கு வந்த புதிதில் என்னிடம் பஜாஜ்M80 வண்டி இருந்தது. நானும் என் நண்பனும் வேலை நிமித்தமாக 25கிமீ தொலைவிலுள்ள திருபுவனம் ஊருக்குப் போயிட்டு வர்ற வழியில் மழை. கையில் அப்போது அலைபேசி எல்லாம் இல்லை. ஆதலால் சங்கடமில்லாமல் நனையலாம். எல்லாரும் குறிப்பா புல்லட்ல போறவனே மழைக்கு ஒதுங்கி நிற்க நாங்க மட்ட