அறை
ரெண்டு நாளா இருமலா இருமுறா.... இன்னைக்குத்தான் டாக்டர்ட்ட கூப்பிட்டு போலாம்ணு இருக்கேன்... என்று சொல்லிவிட்டு மேலும் தொ டர்கிறார்.. என்னப்பா....ஆபிஸ்ல இருக்கியா.. ..சரி சரி....வச்சிரு...." இப்படித்தான் வேதாச்சலம் அய்யா வின் தொலைபேசி உரையாடல் முடிந் தது. அம்மாவின் இருமலையும் உடல் நலக் கோளாறையும் வெளியூரில் இரு க்கும் மகனுக்கு சொல்லி முடிப் பதற்குள்உரையாடலே முடிந்ததைப் பற்றி அவர் கண்டு கொள்ளவில்லை. அது அவருக்கு முதல்முறை இல்லை . மகனது வேலைப்பளு பற்றி அவருக்குப் புரியாமல் இல்லை. இருந்தாலும் ஆதங்கம் இருக்கத்தான் செய்தது. இந்தா...எவ்வளவு நேரம்....கிளம் பு... என்று சத்தம் கொடுத்தார். பாவம் பங்கஜம் அம்மாளுக்கு உடல் ஒத்துழைக்கவில்லை... ஆனாலு ம் கிளம்பியிருந்தார். மூன்று வயது குழந்தை நடக்கையில் கால்களை எப்படி அகலமாய் வைக்கா தோ , எப்படி தரையோடு தடவி தடவி நடக்குமோ அப்படி நடக்கும் பங் கஜம் அம்மாளால் எவ்வாறு வேகமாய் நடக்கமுடியும்.. பங்கஜம் அம்மாளுக்கும் வேதாச் சலம் அய்யாவுக்கும் பெரிய வித் தியாசம் உடல் தெம்பு தான்...ஆனா ல் முதுமை- முதுமை தான் என்பது அவர்